குருபௌர்ணமி – ஆதிகுருவிற்கு ஓர் அர்ப்பணம்

குருபௌர்ணமி – ஆதிகுருவிற்கு ஓர் அர்ப்பணம்

குருபௌர்ணமி சத்குரு சத்சங்கம் 8.30pm Live Webcast

22 Jul - 10.30pm

gurupournima-sadhguru4

gurupournima-devotees5

இன்று நடைபெற உள்ள பிரம்மச்சரிய தீட்சை நிகழ்வின் சக்தி அதிர்வுகளை, தியானலிங்கக் கோயிலைச் சுற்றிலும் அமர்வதன் மூலம் உணர முடியும் எனக் கூறிய சத்குரு,

“பூதேஷ யோகீஷ…” பாடலுடன் சத்சங்கத்தை நிறைவு செய்தார்.பிரசாதத்தைதனது கைகளால் தொட்டு ஆசிர்வதித்து அருள் வழங்கி விடைபெற்றார்.

மீண்டும் ஒரு கொண்டாட்ட நிகழ்வின் நேரடி வர்ணனை வரும் வரை தொடர்ந்து இணைந்திருங்கள்!

22 Jul - 10.17pm

பிரம்மச்சரியம் என்றால்…

உடையை மாற்றிடும் நிகழ்வா?
உருவம் மாற்றிடும் சடங்கா?
குரு தன்னில் ஒரு பகுதியை பதிக்க
உடலும் எனதில்லை
உயிரும் குருவில் கலக்கவே உறுதி எடுத்தே
பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்ள
இனி நீங்கள் நீங்களில்லை
நானே! என சத்குரு தன்னுள் சேர்த்துக் கொள்ளும் அற்புத நாள்
குருபூர்ணிமாவாக அமைவதுதான் எத்தனை பாக்கியம்!

22 Jul - 10.16pm

நானாக மாறுங்கள்

gurupournima-sadhguru1

ஆணுக்குள் இருக்கும் அதே எல்லையில்லா சாத்தியம் பெண்மைக்குள் இருப்பது மறுக்க இயலாத உண்மை. உள்ளே துடிக்கும் உயிருக்கு ஆண் பெண் என்பது எங்கே இருக்கிறது?

ஆனால் ஆன்மீகப் பாதையும் துறவறம் மேற்கொள்வதும் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல பல நூற்றாண்டுகள் பெண்ணுக்கு இந்த சாத்தியம் மறுக்கப்பட்டே வந்துள்ளது.

11 பெண்களுக்கு இன்று பிரம்மச்சரிய தீட்சை அளிக்கவிருக்கிறார் சத்குரு. இது உயிரின் மலர்ச்சி! ஆன்மீகப் புரட்சி!

22 Jul - 10.08pm

சொல்லில் எத்தனை உண்மை?

விடுமுறை கிடைக்கவில்லை
விடுதலை அளித்திடும் நாளை மறந்தோம்.
தலைமுறை தலைமுறையாய்
கடவுள் இல்லாத கலாச்சாரம் மறந்தோம்
மதத்தில் மதம் இல்லாத கலாச்சாரம் மறந்தோம்.
பூரண நிலவில் ஒளிர்ந்த நாளை மறந்தோம்!
மறக்காமல் இருந்திருந்தால் வேறு ஒரு
அற்புத உலகில் வாழ்ந்திருப்போம்.

அவர் சொல்லில் எத்தனை உண்மை?

gurupournima-devotees4

gurupournima-devotees3

gurupournima-devotees1

22 Jul - 10.02pm

வேலை செய்வதே கொண்டாட்டம்…

கடந்த சில நூற்றாண்டுகளாக நாம் குரு பௌர்ணமியைக் கொண்டாடுவதைக் கைவிட்டு விட்டோம். இதற்கு ஒரே ஒரு முக்கியமான காரணம் அரசாங்கம் இதற்கு விடுமுறை அளிக்காததுதான். கொண்டாட்டங்கள் நிகழ வேண்டுமென்றால் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் செய்யும் வேலையே கொண்டாட்டமாக செய்வதே உண்மையான கொண்டாட்டம்.

22 Jul - 9.58pm

இந்த கலாச்சாரத்தை அழித்திட முடியுமோ!

இப்படியே அழித்திடலாம் இந்தக் கலாச்சாரத்தை என பலரும் வந்தனர். நளந்தா பல்கலைகழகத்தை எரித்தனர். லட்சக்கணக்கில் புத்தகங்களை எரித்திட மூன்று மாதங்களுக்கு மேல் ஆனது. தன் ஞாபக சக்தியினால் மீண்டும் நூலகம் செய்திடும் திறன் கொண்ட துறவிகளை எரித்தால் அழிந்திடும் கலாச்சாரம் என 3000 துறவிகளை உயிருடன் எரித்தனர்.

இந்துக்களை அழிக்கிறேன் என ஆங்காங்கே இருக்கும் மக்களை கொன்றனர். ஆனால் இந்தக் கலாச்சாரத்தை அழிக்க முடியவில்லை.

இங்கே நம்பிக்கை இல்லை. இங்கே ஒரு மதகுரு இல்லை. விடுதலைக்கான ஏக்கமே இருக்கிறது. எவராலும் அழித்திட முடியாத இந்தக் கலாச்சாரத்தில் முக்திக்காண ஏக்கம் மட்டுமே இருக்கிறது.

இந்த ஏக்கத்தை உலகெங்கும் தொற்றுவிப்போம். (infect the world with this longing)

22 Jul - 9.48pm

ஈஷாவின் வகுப்புகள் பலரை ஈர்த்த வண்ணம் உள்ளன, அதில் சீன தேசத்தவரும் விதிவிலக்கல்ல. சத்குருவைப் பற்றி தெரிந்து, நாளை துவங்கவுள்ள 3 நாள் ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொள்ள சீனாவிலிருந்து 35 பேர் இங்கே மையத்திற்கு வந்துள்ளனர்.

சத்சங்கத்தில் அவர்கள் அமர்ந்திருக்க, சத்குரு அவர்களை தனிப்பட்ட முறையில் வரவேற்றார்.

22 Jul - 9.29pm

அலெக்சாண்டரை வென்ற இந்திய யோகி…

உலகையே வென்று விட்டதாய் எண்ணிய அலெக்சாண்டரை ஒரு இந்திய யோகி வென்ற சம்பவம் இங்கே நிகழ்நதுள்ளது. அந்த யோகியின் பெயர் எகிப்து நாட்டில் தவறாக உச்சரிக்கரிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் சொல்வதிலிருந்து அவர் பெயர் தயானந்தாவாக இருக்கலாம் என்று தெரிகிறது.

தனது வாளை உருவி அவரின் தலையைக் கொய்வதற்கு முற்பட்டபோதும் கூட எந்தவித சலனமுமில்லாமல் வீற்றிருந்த அந்த யோகியின் நிலையைப் பார்த்த அலெக்சாண்டர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். மரண பயம் இல்லாத ஒருவரையே மாவீரன் என்பது எகிப்தியர்கள் பண்பாடு.

ஆனால் கடைசியில் மாவீரனாகக் கருதப்பட்ட அலெக்சாண்டர் நம் இந்தியக் கொசுக்களுக்கு இரையானது சோகக் கதை.

22 Jul - 9.24pm

சுவடுகள் இல்லாத சரித்திரம்

gurupournima-sadhguru2

இந்த மண்ணில் மட்டுமே சிறந்த இலக்கியங்கள் ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல் இருக்கும். அழகிய சிற்பத்தில் செதுக்கியவர் பெயர் செதுக்காமல் இருக்கும். உலகில் பல இடங்களிலும் அவர்கள் பெயரை கொட்டை எழுத்தில் பதிக்கிறார்கள்.

கல்லறையையும் இந்த மனிதர்கள் விட்டு வைக்கவில்லை. தற்போது எகிப்திய நாட்டு கலாச்சாரத்தின் மூலமும் இந்தியாவிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது.

உலகில் எங்கு ஆன்மீகம் என்று எது இருந்தாலும் இந்த கலாச்சாரத்தில் இருந்து பிறந்ததே என்று அழகிய உதாரணம் ஒன்றைச் சொன்னார் சத்குரு!

22 Jul - 9.05pm

சென்னையில் குருபௌர்ணமி

சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஓரிரு இடங்களில் மட்டுமே குருபௌர்ணமி நடைபெறும். சென்னையில் பிற இடங்களில் உள்ளவர்களும் அங்கே கூடுவார்கள். ஆனால் இந்த வருடம் சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 46 மையங்களில் குருபௌர்ணமி நிகழ்வுகள் நடக்கின்றன.

சென்னை மெகா வகுப்பை முன்னிட்டு தன்னார்வத் தொண்டர்கள் சந்தித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த குருபௌர்ணமி வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் வரும் நாட்களில் குருபௌர்ணமி ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கலாம். சரியாக 6.10க்கு தியானம் தொடங்க 6.40க்கு பிரம்மானந்த ஸ்வரூபா உச்சாடனத்தில் சென்னை கரைந்தது.

22 Jul - 8.46pm

மனதில் இடம்பிடித்த பாடல்…

பொதுவாக, இதுபோன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் சில பாடல்களை பாடும் சவுன்ட்ஸ் ஆப் ஈஷா இன்று ஆதியோகிக்காக, ஆதிகுருவிற்காக ஒரே ஒரு சிவ மந்திரத்தை மட்டும் உச்சரித்து ஆதியோகி ஆலயத்தை தன் பாடலில் மயக்கியது. இதோ அந்தப் பாடல் உங்களுக்காக…

22 Jul - 8.38pm

சத்குரு சரியாக 8.30 மணிக்கு மேடை ஏறி அமர, சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவைத் தொடர்ந்து குருபூஜையுடன் துவங்கியது சத்சங்கம்…

gurupournima-soundsofisha

gurupournima-gurupooja

22 Jul - 8.23pm

லிங்கபைரவி ஊர்வலம் முடித்து உணவு உண்டு மீண்டும் சத்சங்கத்தில் தற்சமயம் இணைந்துள்ளனர் மக்கள்…

gurupournima-devotees2

22 Jul - 7.39pm

வானின் இருளைக் கிழிக்க தேவி உதிக்க…

gurupournima-arati1

gurupournima-arati2

gurupournima-arati3

ஒவ்வொரு பௌர்ணமியிலும் லிங்கபைரவி தேவி ஊர்வலமும் தியானலிங்கத்தின் முன் மஹாஆரத்தியும் நடைபெறுவது நமக்கு தெரியும்.

உத்தராயணத்தில் ஒளிர்ந்த தேவியின் கண்கள் இந்த தக்ஷணாயனத்தில் தன் அருள் பார்வை மாற இந்த பௌர்ணமி முதல், தேவியின் கண்கள் வித்தியாசமாகவே இருக்கும் என உணர்ந்த சாதகர்கள் லிங்கபைரவியின் முன் கூட்டமாக குழுமி இருக்கிறார்கள்.

வானின் இருளை கிழித்து உதிக்கும் இன்றைய முழு நிலவும் உள்ளத்து இருளை அகற்றும் மஹாஆரத்தியும் சங்கமிக்கும் மாலைப் பொழுதாக, இன்றைய தேவி ஆரத்தி நடந்து கொண்டிருக்கிறது.

22 Jul - 7.27pm

ஷிவாங்கா – பக்தியெனும் தீ!

மதுரை

ஈரோடு
மும்பை
ஒவ்வொரு பௌர்ணமியன்றும் வழங்கப்படும் ஷிவாங்காவிற்கான தீட்சை, குரு பௌர்ணமியான இன்றும், தமிழகத்தின் சில மையங்களிலும், தில்லி, மும்பை போன்ற நகரங்களிலும் நடைபெற்றது. இன்று தீட்சை பெற்றவர்கள், அடுத்து ஒரு மண்டலம் விரதமிருந்து செப்டம்பர் 3ம் தேதி, வெள்ளியங்கிரி மலையேறி தங்கள் விரதத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

22 Jul - 7.16pm

நிகழ்ச்சியின் நிறைவில், ஸ்வாமி அனுக்ரஹை கட்டியணைத்து ஆசிர்வதித்தார் சத்குரு.

சுமார் 1 மணி நேரம் தனது மயக்கும் இசையால் அனைவரையும் கட்டிப்போட்ட ஸ்வாமி அனுக்ரஹ, தனது சங்கீத ஞானத்தை இந்த அரங்கேற்றத்தின் மூலம் பரைசாற்றினார். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் நமஸ்காரம் செய்து விடைபெற்றபோது…

22 Jul - 6.52pm

துவங்கியது பாரம்பரிய ஹடயோகா…

isha hata yoga, isha classical yoga, yoga, asanas, yogasana, meditation, sadhguru, meditation

21 வாரங்கள் நடைபெறவிருக்கும் பாரம்பரிய ஹடயோகா ஆசிரியர் பயிற்சி, இன்று துவங்கவுள்ளது. இதில் 84 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சியில் உப-யோகா, பூதசுத்தி, சூரிய கிரியா போன்ற பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

கற்றுக் கொள்பவர்கள் பிறருக்கு கற்றுக் கொடுக்கவும் இங்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பாரம்பரிய யோக முறையின் தூண்களாய் உயர்ந்து நிற்க பல தேசங்களிலிருந்து, பல கலாச்சாரங்களிலிருந்து இவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

22 Jul - 6.17pm

மாணவருக்கு குருவின் அறிமுகம்…

சரியாக 6 மணிக்கு வந்தமர்ந்தார் சத்குரு.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் திரு. கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஈஷா சம்ஸ்கிருதி மாணவர் ஸ்வாமி அனுக்ரஹாவை அறிமுகப்படுத்தி பேசினார், சத்குரு.

“நான்கு வருடங்களுக்கு முன், பல தீவிர தேடல் கொண்ட கேள்விகளுடன் 4 பக்கத்திற்கு கடிதம் எழுதிய மாணவரான அனுக்ரஹாவிடம் இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண்பதற்கு, நீ பொழுதுபோக்காக வாழ்க்கையை நகர்த்தாமல் தீவிரமான தேடுதலோடு வாழ்க்கையை அணுக வேண்டும்,” என்று கூறினேன். அத்தகைய முதிர்ச்சியான ஒரு மாணவரின் அரங்கேற்றம் நிகழவிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி,” என்றார்.

22 Jul - 5.39pm

ஈஷா சம்ஸ்கிருதி

இன்னும் சில மணித்துளிகளில் ஆரம்பிக்கவிருக்கும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சியாக ஈஷா சமஸ்கிருதியைச் சேர்ந்த ஸ்வாமி அனுக்ரஹாவின் இசை அரங்கேற்றம் நிகழவிருக்கிறது…

22 Jul - 4.49pm

குருவைப் பற்றி குரு…

guru, master, grace, sadhguru pournami, poornima, guru poornima, isha, meditation, yoga

22 Jul - 4.13pm

குரு பூர்ணிமா நேற்றே முடிந்து விட்டது!

சுழலும் பூமியின் சில பகுதிகள் நேற்றே அந்த நிறைவான சந்திரனை சந்தித்துவிட்டன. ஆம் அமெரிக்காவில் பௌர்ணமி நேற்று நிகழ்ந்தது.

ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் பல ஆண்டு செயல்களினால் இந்திய நாட்டில் பிறந்த இந்த விஞ்ஞானம் கடல் கடந்து உலகம் முழுவதும் சந்திரன் பூரணமாக ஒளிர்வதில் இருக்கும் சக்தி நிலையை புரிந்துள்ளனர்.

நமக்கு முன்னரே குரு பௌர்ணமி கொண்டாட்டத்தை முடித்து விட்டார்கள் நம் அமெரிக்க தன்னார்வத் தொண்டர்கள்.

22 Jul - 3.20pm

நிலவு தேய நிலவு தேய…

shivanga

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று விரதத்திற்கான தீட்சை பெற்று சிவராத்திரியன்று வெள்ளியங்கிரி மலையேறி சிவ தரிசனம் காணும் 48 நாள் சிவாங்கா விரதத்திற்கான தீட்சை இன்றும் நடைபெறுகிறது.

முழு நிலவு நாளில் தீட்சை பெற்று, நிலவு தேய தேய தானும் தேய்ந்து நிலவற்ற இரவில் ஒன்றுமற்ற சிவனின் தரிசனம் காணும் சுவையை உணர்ந்தவர்கள் மீண்டும் அடுத்த பௌர்ணமி எப்போது வரும் என்றே காத்திருக்கிறார்கள்.

அருள் நிறைந்த இந்த குரு பௌர்ணமியில் தீட்சை பெற உலகெங்கிலும் பல மையங்களில் இன்று ஆண்சாதகர்கள் தீட்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

22 Jul - 2.03pm

குரு தேவையா?

22 Jul - 1.43pm

இனி பரிணாமம் பலிக்காது…

நுண்ணுயிர் கடலுயிர் ஆனது
கடலுயிர் மண்ணுயிர் ஆனது
மண்ணுயிர் நிமிர்ந்து நின்றது
இனி பரிணாமம் பலிக்காது
குரு நாமம் கொள்வோம் என்றனர் அன்று சப்தரிஷிகள்.

guru, guru pournami, guru poornima, isha, yoga, sadhguru, meditation, guru's grace, grace

டார்வினின் கொள்கைப்படி இந்த பரிணாம மாற்றம் நிகழ பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும். அதிலும் இனி உடலளவில் பரிணாம மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இன்னொரு மனிதர் இதை ஒருவருக்கு செய்திட முடியுமா? சாத்தியம்தான். வரலாற்றில் இல்லாத அறிவியலுக்குள் அடங்காத இந்த நிகழ்வில் உலகெங்கும் தியான அன்பர்கள் குருவருள் வேண்டி அவர்களுக்கு அருகாமையில் இருக்கும் மையங்களில் இன்று மாலை கூடுகிறார்கள்.

150 திற்கும் மேற்பட்ட மையங்களில், உலகெங்கிலும் குருபௌர்ணமி இன்று கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூர்

 

திருநெல்வேலி

 

காரைக்குடி

 

ஆஸ்திரேலியா

 

மலேசியா

 

22 Jul - 12.28pm

guru, guru pournami, isha, meditators, abhishegam

இன்று குருபௌர்ணமி. குரு தரிசனம் கிடைப்பது ஒரு சிறப்பென்றால், குரு தந்த குருவிற்கு இன்று அபிஷேகம் செய்வதும் தனிச்சிறப்புதான். ஆம் இன்று பௌர்ணமி தினம் ஆதலால், தியானலிங்கத்திற்கு பலரும் அபிஷேகம் செய்து கொண்டிருக்கின்றனர். லிங்கபைரவியிலும் கூட்டம்.

22 Jul - 11.33am

‘குரு’ என்ற வார்த்தை…

guru, sadhguru, isha yoga, meditaion, chants, pournami, poornima, guru poornima, guru pournami,

இவர் என் இசை குரு; சினிமாவில் இவர்தான் எனக்கு குரு; இப்படியெல்லாம் குரு என்ற வார்த்தை தற்போது சாதாரணமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெற்றியடைந்த தொழிலதிபர்கள் கூட சிலருக்குக் கார்ப்பரேட் குருக்களாக மாறியுள்ள இந்நிலையில், குரு என்ற வார்த்தையின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கிறோமா?

‘கு’ என்றால் இருட்டு ‘ரு’ என்றால் அகற்றுபவர். நமக்குள் இருக்கும் இருளை அகற்றி நமக்கு ஆன்மீக ஒளி ஏற்றுபவரே குரு. சிலர் நமக்கு எழுத்தறிவு தரலாம்; சிலர் இசையறிவு தரலாம்; சிலரோ நடனக் கலையை கற்பிக்கலாம். இவர்களை ஆசிரியர்களாக ஆச்சாரியர்களாக நாம் மதிக்கலாம். ஆனால் நம் உயிரைத் தொட்டு, நம் சக்திநிலையில் அதிர்வுகளை ஏற்படுத்துபவரே குரு.

22 Jul - 10.34am

தலை வாழை இலையில் உண(ர்)வு

காலை 7 மணியிலிருந்தே களைகட்டிவிட்டது ஈஷா யோகா மையம். நேற்று வரை கொட்டிக் கொண்டிருந்த வானம் இன்று வெறிச்சிட்டுவிட்டது. மக்கள் கூட்டத்தால் மையம் நிறைந்து கொண்டிருக்கிறது.

இங்கு வந்துள்ளவர்கள் வண்ணப்பட்டுடுத்தி ஏதோ தன் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் மனநிறைவுடன் உள்ளனர். நம் தியான அன்பர்களில் இருவர், வந்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கியுள்ளனர். தலைவாழை இலை விரித்து, வகைவகையாய் உணவு வழங்கி தன் குருவுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர் இவர்கள்.

இங்கு மக்கள் ஒருவரை ஒருவர் வணங்கி கொள்வதிலும் குருவை வணங்கும் அழகு தெரிகிறது. உள்ளம் நெகிழ்கிறது. உணர்விலும் மனதிலும் மறக்க முடியா காட்சியாய் விரிந்து மலர்ந்து கொண்டிருக்கிறது மையம்.

22 Jul - 9.51am

ஆதிகுரு உயிர்பெற்ற திருநாள் இன்று…

தினம் ஒரு விழாவாக 365 திருவிழாக்களைக் கொண்டாடிக் கொண்டிருந்த நம் வாழ்க்கையில் இப்போது இருப்பது 20 அல்லது 24 விழாக்கள் மட்டுமே. ஆதியோகி, யோக விஞ்ஞானத்தை சப்த ரிஷிகளுக்கு அளித்து ஆதிகுருவாய் மாறிய திருநாள் இன்று.

இந்நாளை ஈஷாவுடன் இணைந்து கொண்டாட உங்களையும் அழைக்கிறோம். கோவை ஈஷா யோகா மையத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் குரு பௌர்ணமி கொண்டாட்டங்களை, இந்தப் பக்கத்தின் மூலம் உங்கள் முன் கொண்டுவருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொடர்பில் இருங்கள்…

22 Jul - 9.18am

ஆதிகுரு பிறந்த கதை

எனக்கு எனக்கு எனக் கெஞ்சி வந்தோர்க்கு
இல்லை இல்லை என்றே ஆதியோகி மறுக்க…
வந்த கூட்டம், நாளாக நாளாக – கடைசியில்
அந்த எண்ணிக்கை ஏழாக
தந்தார் தன் ஞானத்தை
தங்கமாய் மாறியிருந்த அந்த எழுவருக்கும்
தென்திசை நோக்கி இப்பௌர்ணமியிலே…
அருள்தர வீற்றெழுந்தார் ஆதிகுருவாய்!

22 Jul - 9.00am

அன்று…
ஆதியோகி தென்திசை நோக்கி அமர்ந்த நாள்…
கிட்டியது ஏழு பேருக்கு குருவருள்…

இன்று…
முழுநிலவின் ஒளி பெருக்கில்…
சத்குருவின் அருள் இருப்பில்…
ஈஷாவில் குரு பௌர்ணமி

ஆதியோகி ஆலயத்திலிருந்து LIVE BLOG ஐ, உங்கள் கணினியில் கண்டு அருள் பெற,எங்களுடன் தொடர்பில் இருங்கள்
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert