குரு பௌர்ணமி என்பது நாள்காட்டியில் வரும் மற்றுமொரு நிகழ்வா அல்லது கலாச்சாரத்தில் சொல்லப்பட்டதால் கொண்டாடப்படும் சம்பிரதாய வழக்கமா? இந்த வார சத்குரு ஸ்பாட்டில், விடை சொல்கிறார் சத்குரு...

ஆதியோகி ஆதிகுருவாய் மாறி, உலகிற்கு ஆன்மீகத்தை அர்ப்பணித்த நாள் குரு பௌர்ணமி. ஒருவர் முயன்றால், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு கதவும் திறக்கும் என்பதனை முதன்முதலாய் அவர் நமக்கு நினைவூட்டிய நாள் இன்று.

குரு பௌர்ணமி வெறுமனே அடையாளமான ஒரு நாள் அல்ல, இது அருளுக்கு உகந்த நாள். ஒருவர் பிற பரிமாணங்களுக்கு ஏற்புடையவராய் இருக்க இயற்கையே உறுதுணையான சூழ்நிலையை இந்நாளில் ஏற்படுத்தித் தருகிறது. புத்தம் புது சாத்தியங்களை விரைவாய் உந்திச் சென்றடைய இந்நாள் ஒர் அற்புதமான வாய்ப்பு.

நான் உங்களுடன் இருக்கிறேன்.

ஆதிகுரு

ஆத்ம சாதகரின் மன உரம்
அசைக்க முடியாத தீவிரம்

வெளிப்படுத்த முடிந்த அவர்களை
புறக்கணிக்க முடியவில்லை அவனால்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேடல் உள்ளவர்களின் வேட்கை
அவனுடைய உறுதியை உடைத்தது

தெய்வீகம் பொருந்திய சப்தரிஷிகளும்
தேடி நின்றது சொர்க்கத்தையல்ல

சொர்க்கம் நரகம் கடந்திடும் வழியை
எல்லா மனிதருக்கும் வழங்கிட விரும்பினர்

மனிதகுலத்திற்கென மன்றாடினவர்பால்
தன் கருணையைத் தடுக்க முடியுமோ அவனால்?

கருணை கனிந்த தன் திருமுகத்தை
தென்முகம் திருப்பி ரிஷிகளை நோக்கினான்

அவர்கள் கண்டதோ அவனின் அருள்முகம் மட்டுமா
கரைகாணாத கருணையின் பெருக்கும்தான்

ஆதியிலா சுயம்புவின் அருட்புனல் பெருக
அறிதலில் பெருகினர் சப்தரிஷிகளும்

வார்க்கப்பட்ட பிணைப்புகளிலிருந்து
இந்த வையத்தை விடுவிக்க அறிந்தனர்

இன்றுவரை நிகழ்கிறது அந்தப் பேரறிதலின் பிரவாகம்
ஒவ்வொரு புழுவும் அதை உணர்ந்த பின்னரே நம் பணி ஓயும்

Love & Grace

குருபௌர்ணமி நிகழ்ச்சி நிரல்

குரு பௌர்ணமி நிகழ்ச்சி ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களுடன் கொண்டாடப்பட விருக்கிறது.

சத்குருவுடன் (ஆங்கிலத்தில்) Google Hangout - இரவு 7 மணிக்கு

இந்நிகழ்ச்சியின் நேரடி வர்ணனை ஆனந்தஅலை.காம் ல் நடைபெறும்.

குருபௌர்ணமி தினத்தன்று ஈஷா யோக மைய நிகழ்வுகள்

  • தியானலிங்கத்திற்கு பால் மற்றும் நீர் அபிஷேகம்
  • லிங்கபைரவியில் பௌர்ணமி பூஜை
  • லிங்கபைரவி மஹாஆரத்தி, உற்சவர் ஊர்வலம்
  • அன்னதானம்
  • கலை நிகழ்ச்சிகள் மற்றும் சத்குருவுடன் தமிழ் சத்சங்கம் - இரவு 10.30 மணியிலிருந்து