தலைவராக இருப்பது பற்றிய சத்குருவின் வாசகங்கள்

  1. ஒரு தலைவராக உங்களுடைய ஒவ்வொரு எண்ணமும், உணர்வும் செயலும் பலரின் வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தவல்லது. அதனால், உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது குறித்து வேலை செய்வது மிக முக்கியம்.
  2. தலைவராய் இருப்பதென்றால் சூழ்நிலை மீது ஆதிக்கம் செலுத்துவதல்ல. மக்கள் தங்கள் கற்பனையிலும் நினைத்துப் பார்த்திராத வகைகளில் அவர்களை வல்லமைப் படைத்தவர்களாய் ஆக்குவதுதான்.
  3. பிறருக்கு தொற்றிக்கொள்ளும் அளவிற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஒரு தலைவர் வெளிப்படுத்தாவிட்டால், மந்தத்தன்மையும் சோம்பலும் மட்டுமே நிலவும்.
  4. ஒரு தலைவராக, நீங்கள் 100 சதவிகிதம் உங்களை வழங்கும்போது நம்பிக்கையை வளர்க்கிறீர்கள். இதனால், மக்கள் உங்களின் ஒவ்வொரு செயலிலும் அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

தலைமைத்துவம் பற்றிய சத்குருவின் வாசகங்கள்

  1. தலைமைத்துவம் என்பது பாலினம் சார்ந்து இருக்கக்கூடாது. ஒரு தலைவரை ஆணாகவோ பெண்ணாகவோ பார்க்க வேண்டாம். அவர்கள் வெளிப்படுத்தும் குணங்களுக்காக அவர்களைப் பாருங்கள்.
  2. நேர்மை, அனைத்தையும் இணைத்துக்கொள்ளும் தன்மை, தெளிந்த பார்வை - இவை மூன்றும் தலைமைத்துவத்தின் மூன்று அத்தியாவசிய தன்மைகள்.
  3. தலைமைத்துவம் என்பது உங்களை பிறர்மீது திணிப்பதல்ல. அது அனைவரது ஆசைகளையும் பூர்த்திசெய்யும் கலை.
  4. தலைமைத்துவம் என்பது வெறும் ஆர்வமாய் மட்டும் இருந்துவிடக்கூடாது. அது ஒருவரின் தகுதியின் விளைவாக இருக்கவேண்டும்.
  5. தலைமைத்துவம் என்றால் கூட்டமைத்தல், ஒத்துழைப்பு, வழிகாட்டுதல், ஆதரவு. அது ஆதிக்கம் செலுத்துவதல்ல. ஆதிக்கம் என்பது கொடுங்கோன்மை.

வர்த்தகம்/ வணிகம் பற்றிய சத்குருவின் வாசகங்கள்

  1. வணிகம் மனித இனத்திற்கு சேவை செய்யவேண்டும், தலைமையேற்று நடத்தக்கூடாது.
  2. நீங்கள் மக்களிடம் காட்டும் அன்பினாலும் மரியாதையினாலும் அவர்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றால், அது உங்களுடைய வணிகத்தை மட்டும் மேம்படுத்துவதில்லை - உங்கள் வாழ்க்கையையும் மேம்படுத்தும்.
  3. நீங்கள் எந்தவித தொழிலில் இருந்தாலும் இறுதியில் ஒரே ஒரு தொழில்தான் உள்ளது - அது மனித நல்வாழ்வு.

வேலை-வாழ்க்கை பற்றிய சத்குருவின் வாசகங்கள்

  1. உங்கள் ஆசைகளை மிகைப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துவதைவிட, உங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது வாழ்க்கையில் நயத்துடனும் சிரமமின்றியும் பயணிப்பீர்கள், மிகச் சிறப்பாக வாழ்வீர்கள்.
  2. எது முடியும் எது முடியாது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம். இயற்கை அதனை முடிவுசெய்யும். எது உங்களுக்கு உண்மையில் மதிப்பானதோ அதற்காக வேலை செய்வது மட்டுமே உங்கள் பணி.
  3. உங்களுக்கு வேலையிலிருந்து எதற்காக இடைவேளை வேண்டுமென்று நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொள்ளும் ஒன்றை செய்யும்போது, உங்களுக்கு இடைவேளை தேவைப்படுமா என்ன?
  4. என்னென்ன வேலைகள் செய்யப்பட வேண்டுமோ, என்னென்ன வாய்ப்புகள் உங்கள் வழியில் வருகிறதோ, என்னென்ன நீங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டுமோ - அதற்கு இதுதான் நேரம், நாளையல்ல.
  5. மிகத் தீவிரமாக பணி செய்பவர்களே, ஓய்வுநிலையின் ஆழத்தை அறிவார்கள்.
  6. எந்த வேலையும் மன அழுத்தம் தருவதல்ல. உங்களது உடல், மனம் மற்றும் உணர்வுகளை நிர்வகிக்க முடியாதே மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
  7. கல்வித் தகுதிகள் உங்களுக்கு வாசலை திறந்துகொடுக்கலாம். ஆனால், திறமை மட்டுமே இறுதியில் வேலைசெய்யும்.

வெற்றி பற்றிய சத்குருவின் வாசகங்கள்

  1. வெற்றிகரமான ஒரு விஷயத்தை உருவாக்கியுள்ள எவருக்கும் தெரியும் - மிகச் சரியான பாதை என்று எதுவும் கிடையாது, அது இடைவிடா மாற்றங்கள் நிரம்பியதென்று.
  2. மக்கள் வெற்றிகரமாக இருப்பது அவர்கள் கடுமையாக உழைப்பதனால் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அவர்கள் சரியான செயல்களை செய்கிறார்கள்.
  3. பொதுவாக தோல்வி என்று எதை கருதுகிறோமோ அது வெற்றி என நாம் கருதுவதைவிட வாழ்வனுபவத்தை ஆழமாக்கும்.
  4. வெற்றி என்பது பிறரை முந்திச்செல்லுதல் என்று நீங்கள் கருதினால், நிச்சயமாக உங்களது முழு ஆற்றலை நீங்கள் கண்டறியப் போவதில்லை.
  5. வெற்றியை நீங்கள் சுவைக்க விரும்பினால், உங்களது சூழ்நிலைகளை செதுக்குவதற்கு முன்பு, முதலில் உங்களுக்கே உங்களை நிர்வகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  6. உங்களுக்கு வெற்றி வேண்டுமென்றால், முதலில் நீங்களே அதற்கு தடைக்கல்லாக இல்லை என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆசிரியர் குறிப்பு : சமீபத்திய அப்டேட்களை பெறுவதற்கு ட்விட்டரில்IshaLeadership ஐ பின் தொடருங்கள்!.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.