ரச வைத்தியம்

சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே? எந்த மாதிரியான கோவில்கள் மனிதனுக்குத் தேவை? எது அவர்களை ஊட்டி வளர்த்து அவர்களை உயரத்திற்கு அழைத்துச்செல்லுகிறதோ, அம்மாதிரியான கோவில்தான் வேண்டும். கடவுளைப் பற்றியது அல்ல கோவில், மிருகமாகயிருக்கின்ற மனிதனை சில சாத்தியக்கூறுகளால் தெய்வீகத் தன்மையாக மாற்றுவதற்கே கோவில்.

இதைப் பற்றி உலகத்தில் மிகவும் தவறான கருத்து நிலவுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தன் கடவுளை உருவாக்க அனுமதி உண்டு ஏனென்றால் இந்த சமுதாயத்தில் மட்டும்தான் கடவுள் என்பது மனிதனின் உருவாக்கம் என்ற புரிதல் இருந்தது. நம்மிடம் முப்பத்து-முக்கோடி தேவி தேவர்கள் இருக்கிறார்கள். இது நமது ஜனத்தொகை முப்பத்து முக்கோடியாக இருந்த பொழுது நடந்தது. கடவுளை உருவாக்கும் தொழில் நுட்பத்தை நாம் அறிவோம்.

மண்ணை உணவாக மாற்றினால் அதை நாம் விவசாயம் என்போம். உணவை சதையும் எலும்புமாக மாற்றினால் அதை நாம் ஜீரணம் என்போம். இந்த சதையையும் எலும்பையும் மறுபடி மண்ணாக மாற்றுவதற்கு தகனம் என்போம். இவையெல்லாமே வெவ்வேறு தொழில்நுட்பங்கள். இவைகளைப் போல ஏதோ ஒரு பொருளையோ அல்லது வெற்றிடத்தையோ தெய்வீக அதிர்வலைகளாக மாற்றினால் அதை நாம் ப்ரதிஷ்டை என்று சொல்கிறோம். ப்ரதிஷ்டை செய்வதைப் பற்றி ஒரு முழு விஞானமே உள்ளது. எந்த ஒரு பொருளையும் நம்மால் சக்தியூட்ட முடியும். உதாரணமாக, ஒரு பூவை எடுத்துக் கொள்வோம். நீங்கள் நுண்ணுர்வு கொண்டவரென்றால், ஒர் பூவை கையில் வைத்து அதை உணர்ந்துவிட்டு என்னிடம் ஒரு பத்து அல்லது இருவது நொடிகளுக்கு கொடுங்கள். நான் அதை என் கையில் வைத்திருந்துவிட்டு திருப்பித் தந்துவிடுகிறேன். இப்பொழுது அது உங்கள் கையில் முழுமையாக வேறு மாதிரி உணர்வைக் கொடுக்கும். சிறிது நேரம் கழித்து திரும்பவும் அது சாதாரண பூவாக மாறும். ஆனால் சில மூலப்பொருள்களை கொண்ட வடிவங்களை ஒரு விதமாக சக்தியூட்டினால் அவை சாசுவதமாக இருக்கும். அம்மாதிரியான ஒரு மூலப்பொருள் பாதரசம்.

ஒரு பொருளை சக்தியூட்ட வேண்டுமென்றால் அதற்குண்டான மூலப்பொருள் அடர்த்தியானதாக இருப்பது முக்கியம். பாதரசம் ஒரு திரவ ரூபத்தில் உள்ள அடர்த்தியான பொருள். இது ஒன்றுதான் திரவ ரூபத்தில் இருக்கும் உலோகம். ஒரு முறை சக்தியூட்டி விட்டால், இது சுமார் பத்து-பதினைந்தாயிரம் வருடங்களுக்கு அப்படியே இருக்கும். அதற்குத் தகுந்த சூழ்நிலைகளை பராமரித்தால் அது நூறாயிரம் ஆண்டு காலங்கள் அப்படியே இருக்கும்.

இதைப்போல் ஒரு சக்தியூட்டப்பட்ட வடிவம் உருவாக்குவதற்குப் பின் இருக்கும் கருத்து, விஞ்ஞானம், தொழில்நுட்பம் எல்லாம் என்னவென்றால் இவை பல காலங்களுக்கு உயிரோட்டமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே! இதனாலேயே பெருவாரியான லிங்கங்கள் பாதரசத்தைக் மூலமாகக் கொண்டு செய்யப்பட்டது. தீர்த்த குண்டத்தில் இருக்கும் லிங்கங்கள் திடமாக்கப்பட்ட பாதரசம் கொண்டது- 99.2 சதவிகிதம் சுத்தமான பாதரசம். 0.08 சதவிகிதமான கழிவுப் பொருளை ஆராய்ச்சி மையங்களால் நீக்க முடியாதது. நவீன இரசாயனவியலின்படி பாதரசத்தை அறை வெப்பநிலையில் திடப்பொருளாக மாற்ற முடியாது. அதை -38 டிகிரி சென்டிக்ரேடில் வைத்தால்தான் திடமாக மாறும். ஆனால் என்னால் அதை என் கையில் எடுத்து திடமாகவோ, திரவமாகவோ அறை வெப்ப நிலையில் மாற்ற முடியும். இதைத்தான் இந்திய ரசவாதம் என கூறுவோம். இதைக்கொண்டு எந்த வெற்றிடத்தையும் சக்தியூட்ட முடியும். திடமாக்கப்பட்ட பாதரச உருவத்தை யார் வீட்டில் வைத்திருந்தாலும், அவர்களுடைய ஆரோக்கியம், மன நிலை மற்றும் பொருளாதார நிலைமை எல்லாவற்றிலும் வியப்புக்குரிய மாற்றத்தை நாம் கண்டிருக்கிறோம்.

இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்திய முறைகளில் பாதரசத்தின் உபயோகம் அதிகம் உண்டு. சித்த வைத்திய முறை பாதரசம் இல்லாமல் இயங்கவே இயங்காது.

சாதாரணமாக மந்திரங்களாலும், உச்சாடணங்களாலும் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு விக்கிரகத்தை நாட்கணக்கில் பராமரிக்காவிட்டால் அதன் ஆற்றல் பின் வாங்கத் தொடங்கும். அதனால்தான் விக்கிரகம் எதாவது சிறிதேனும் சிதைந்து போய்விட்டால் அதை ஒரு கிணற்றிலேயோ, ஆற்றிலேயோ வீசி எறிந்து விடுவார்கள், ஏனென்றால் எங்கு குறைந்துகொண்டே வரும் சக்தி உருவத்தை வீட்டில் இருந்தால் அது கேடு விளைவிக்கும். ஆகையால் உடனே அதை மனித நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து விடுவார்கள். ஆனால் திடமாக்கிய பாதரசத்தை வைத்து ஒரு உருவத்தை உருவாக்கினால், பராமரிக்கவே இல்லையென்றால் கூட அதன் சக்தி என்றுமே குறையாது. இதுதான் பாதுகாப்பானது. பாதரசத்தை திடமாக்கி, சக்தியூட்டும் இந்த விஞ்ஞானத்தை ரச வைத்தியம் என்போம். இது உள்ளுணர்வு சார்ந்த விஞ்ஞானம், ஏனென்றால் ஏதேனும் ஒரு பொருளை மொத்தமாக மாற்ற வேண்டுமானால் சேர்த்தல், கழித்தல், தட்ப வெப்ப நிலையை மாற்றி அமைத்தல் – நிறைய விஷயங்களை செய்தால்தான் ஒன்றை செய்ய முடியும். ஆனால் இப்பொழுதோ பாதரசத்தை அறையின் வெப்ப நிலையிலேயே, வேறு எதையும் சேர்க்காமல் திடமாக்கினோம். இது வெளியிலுள்ள, இயற்பொருள் சார்ந்த விஷயமல்ல. இது உள்ளார்ந்த விஞ்ஞானம். இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்திய முறைகளில் பாதரசத்தின் உபயோகம் அதிகம் உண்டு. சித்த வைத்திய முறை பாதரசம் இல்லாமல் இயங்கவே இயங்காது. பாதரசம்தான் சித்த வைத்தியத்திலும், ஒரு சில ஆயுர்வேத பொருட்களிலும் மிக இன்றியமையாத ஒரு கூட்டுப் பொருள். ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்த வழக்கம் இருந்து வருகிறது. நமக்கு தெரியும். இந்தியாவில் பல பேர் கழுத்தில் இதை குந்துமணி போல் அணிந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். கணக்கில்லாத மக்கள் குந்துமணி அளவு திடமாக்கப்பட்ட பாதரசத்தை உடலில் அணிந்திருந்ததால் மட்டுமே பல விதமான தீவிரமான நோய்களிலிருந்து வெளியே வந்துள்ளார்கள். இந்த உலகிலுள்ள எல்லா பொருளுமே அதை சரியான விதத்தில் உபயோகித்தால் அது நலனாகவே அமையும். எப்படி உபயோகிப்பது என்று தெரியாவிட்டால் அது விஷமாகத்தான் மாறும். இன்று நான் உயிருடன், ஆரோக்கியமாக இருக்கிறேனென்றால் அது பாதரசத்தினால்தான். தியானலிங்கத்தின் ப்ரதிஷ்டைக்குப் பிறகு எனது உடல் மிகவும் உடைந்த நிலையில் இருந்தது. அமெரிக்காவில் சென்று சில ரத்த பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் ஏதேதோ கேள்விப்படாத வியாதிகளை கண்டுபிடித்தார்கள். நான் விமானத்தில் வெளியூர் எங்கும் செல்லக்கூடாது உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்ந்து படுத்துக்கொள்ள வேண்டுமென்றும் இல்லையென்றால் நான் இறந்து விடுவேன் என்று கூறினார்கள். இதோ நான் உங்கள் முன்னே, அதன் பிறகு பல முறை விமானத்தில் பயணம் செய்தாயிற்று - எவராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எவராலும் செய்ய முடியாத அளவுக்கு ஒரு நாளிலே நான் செயல் புரிகிறேன்.

பாதரசம் எப்பொழுதும் என்னை பாதுகாத்த ஒன்று. அது இல்லாமல் இன்று நான் நலமாக இருந்திருக்க மாட்டேன்.

பாதரசம் விஷத்தன்மை கொண்டது அல்ல. மேற்கத்திய நாடுகளில் பாதரச விஷம் பற்றி பீதி அடைந்துள்ளனர். தொழிற்சாலைகள் பாதரசத்தை உபயோகித்து கழிவுகளை ஆறுகளில் விட்டதால் விஷத்தன்மை ஆனது. பாதரசத்தின் கழிவுதான் விஷம். எப்பொழுதுமே பாதரசம் இந்த கிரகத்தில் இருந்திருக்கிறது. இந்த கிரகத்தை அது விஷமாக்கவில்லையே? பூமியின் ஒரு பாகம் இல்லையா? நீங்கள் அதை தவறாக உபயோகித்தால், அது விஷத்தன்மையாக மாறும். நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜன் கூட விஷமாகக் கூடும். அளவுக்கதிகமாக ஆக்சிஜனை உள்ளிழுத்தால் மயக்கநிலையை அடைவீர்கள். இந்த கிரகத்தில் உள்ள எல்லா பொருள்களையுமே எப்படி உபயோகிப்பது என்று தெரிந்திருந்தால் அது உங்கள் நலனை பாதுகாக்கும். உபயோகிக்கத் தெரியவில்லையென்றால் அதுவே விஷமாகும். சிவனை எப்பொழுதும் நீலகண்டன் என்று அறிந்திருக்கிறோம். அப்படியென்றால் விஷமடைந்த தொண்டை என்று பொருள். உங்கள் கழுத்தைச் சுற்றி ஒரு நல்ல பாம்பு எப்பொழுதும் தொங்கிக்கொண்டிருந்தால், நீங்கள் ஒரு ஆபரணத்தைபோல் பாம்பை தொங்க விட்டிருந்தால், நிச்சயம் பாம்பு தீண்டி உங்கள் கழுத்து நீலம் பாய்ந்து போகும். ஆனால் இந்த மனிதனைப் போல அதே செயல்திறனையும், புரிதலையும் கொண்ட இன்னொருவன் இருந்ததில்லை. ஆகையால் எது விஷம், எது அம்ருதம் எல்லாமே நீங்கள் எப்படிப்பட்டவர் என்றதைப் பொறுத்தது.

தென்னிந்தியாவில் சில கோவில்களில் ஒன்பது விதமான விஷங்களைக் கொண்டு செய்த விக்கரகங்கள் உள்ளன. நவபாஷானம் என்று சொல்வார்கள். வெவ்வேறு விஷங்களின் கலவை மருத்துவத்தன்மையும், குணமாக்கும் தன்மையையும் பெற்றுவிடும். இது விஷத்தை அமிர்தமாக்கும் ஒரு ஆழ்ந்த விஞ்ஞானம் – உங்களை உடனுக்குடன் கொல்லக் கூடிய விஷத்தின் கலவையே உங்களுக்கு ஊட்டமளிக்கும் வல்லமை பொருந்தியது.

இந்த விக்ரகத்தின் மேலேயிருந்து ஊற்றிய தண்ணீரை மக்கள் அருந்தினால் அது குணமாக்கும் தன்மை கொண்டது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விக்ரகம் தேய்ந்து விடும். சாமன்யமாக இம்மாதிரியான விக்ரகங்களுடைய வாழ்நாள், அதன் அளவைப்பொருத்து சுமார் நூறிலிருந்து நூற்றி ஐம்பது வருடங்கள்தான் இருக்கும். தினமும் தண்ணீர் பாய்வதினால் சிறிது சிறிதாக இந்த விக்ரகங்கள் தம் உருவம் மற்றும் தோற்றத்தை இழக்கும், தேய்ந்து விடும். மக்கள் அந்த தெய்வீகத்தை குடித்துக்கொண்டிருக்கிறார்கள். வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த விக்ரகங்களுக்கு பதிலாக வேறொன்று நாம் உருவாக்கவில்லை. இன்று உலகில் காரண அறிவைக் கொண்டு, மனப்பாங்கை மாற்றி மக்கள் நலனை கையாள்கிறார்கள். இந்த ஒரு தீர்வுதான் நவீன உலகில் இருக்கிறதா? “சாந்தமாக இருங்கள், உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், கவலைப் படாதீர்கள், சந்தோஷமாக இருங்கள்” – இம்மாதிரி பல. இந்த நிலையில் உங்களால் எப்பொழுதும் நலனை அடைய முடியாது. மனப்பாங்கை மாற்றி ஓரளவுக்கு நமது நலனை கையாள முடியும் – நிச்சயமாக – ஆனால் முழுமையாக அதை மாற்ற முடியாது ஏனென்றால் வேறு சில சக்திகளும் பரிமாணங்களும் உங்களுள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. அவைகளைக் கையாளாமல், சில விஷயங்களிலிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் எவ்வளவுதான் உங்கள் மனப்பாங்கை மாற்றினாலும், உங்கள் மனம் உங்களை தரிகெட்டு அலைய வைக்கலாம் ஏனென்றால் உங்களுக்குள்ளேயும், வெளியேயும் வேறு சில சக்திகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. அதைக் கையாளவில்லையென்றால் உண்மையான நலன் எது என்று உணர்வே இல்லாமல் போய் விடும்.