ஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகள்

உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மையங்களில் உள்ள 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக, ஈஷா அறக்கட்டளை, மனித நல்வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. சக்திவாய்ந்த யோகா நிகழ்ச்சிகள் முதல், மனிதநேயத்தை ஊக்குவிக்கும் சமுதாய நலத் திட்டங்களான கிராம புத்துணர்வுத்திட்டம், ஈஷா வித்யா, மற்றும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், அனைவரையும் அரவணைக்கும் ஒரு கலாச்சாரத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஈஷாவின் செயல்பாடுகள் வித்திடுகின்றன.

இந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள், பொருளாதாரம், கலாச்சாரம், மதம் ஆகிய வேறுபாடுகளின்றி இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, பயனளித்துள்ளது. அதிலும் நாம் வடிவமைத்திருக்கும் சமூக நலத்திட்டங்கள் மிக எளிதாக பின்பற்றக்கூடிய வகையில் இருப்பதோடு, சிறு அளவிலோ, பெரிய அளவிலோ அதை நடைமுறைப்படுத்துவதும் கூட சாத்தியமே! உலகெங்கும் தனி மனித நல்வாழ்வு, உயர்விற்கு வழிவகுக்கவும், சமூகங்களுக்கு புத்துணர்வு ஊட்டவும் இது மிக ஆக்கப்பூர்வமான செயல்முறையாய் இருக்கிறது.