மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து கிளம்பி, குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். நாளை மாலை அஹமதாபாத்தில் பொதுமக்கள் பேரணி நடைபெற உள்ளது.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

மும்பை தாண்டி…அஹமதாபாத் நோக்கி

அதிகாலையில் கிளம்பி, நெடுஞ்சாலை 48ல் அஹமதாபாத் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். வழியில்...

சஞ்சய் காந்தி நேஷனல் பார்க்
mumbai-ahm-1

உல்லாஸ் நதியின் முகத்துவாரமான “வாசை ஓடை”
mumbai-ahm-2

ரம்மியமான மூடுபனி சூழ்ந்த பசுமை

என்னவொரு முரண்பாடு! செல்லும் வழியில் இருந்த மூடுபனி சூழ்ந்த பசுமையான மலைகள், அதிகாலையில் எழுந்து பயணிப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று தோன்றச் செய்கிறது!

mumbai-ahm-5

mumbai-ahm-6

வைடர்ணா நதி - மும்பையின் நீராதாரங்களில் ஒன்று
mumbai-ahm-7

mumbai-ahm-8

நெ.சா 48ல் ஸ்ரீ நந்திகிரம் ஜெயின் தீர்த் - 450 வருடப் பழமையான ஸ்ரீ பீத்பஞ்சன் பர்ஷ்வநாத் பகவான் சிலை இங்கு உள்ளது
mumbai-ahm-9

குஜராத்தின் அடுல் குடியிருப்பில் வரவேற்பு

குஜராத் எங்களை மழையுடன் வரவேற்கிறது! குஜராத்தின் அடுல் குடியிருப்பில் காலை 10 மணியளவில் எங்களுக்கு உணவு தயாராய் இருந்தது. அங்கிருந்த குழந்தைகள் எங்களை வரவேற்க ஆவலோடு காத்திருந்தனர்.

mumbai-ahm-10

mumbai-ahm-12

mumbai-ahm-13

mumbai-ahm-17

mumbai-ahm-14

mumbai-ahm-15

நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து இவ்விடத்திற்குப் போகும் வழி:

இடைவேளை எங்களுக்கு மட்டுமல்ல, கார்களுக்கும்தான்!

சத்குரு வருவதற்கு நாங்கள் காத்திருந்த சமயத்தில், நாங்கள் பயணிக்கும் கார்களும், வழக்கமான “செக்-அப்”ற்கு ஆட்படுத்தப்பட்டன. பிரேக்-டவுன் ஆகாமல் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக பயணிக்க வேண்டுமே…

mumbai-ahm-16

அவர் தானா? அவரே தானா? காத்திருப்பு நிஜமான அந்த நொடி…

யாருக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருந்ததோ, அவர் வந்துவிட்டார்! நதி ஸ்துதியை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்த அடுல் வித்யாலயா பள்ளிச் சிறுமிகள், சத்குரு வந்ததும் அவர்களுக்கே உரித்தான அழகோடு, அதைச் சேர்ந்து பாடினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

mumbai-ahm-19

mumbai-ahm-18

mumbai-ahm-20

பள்ளி வளாகத்தில் பேரீச்சம்பழ செடியை சத்குரு நடுகிறார்

பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்கள் வளாகத்தின் முதல் பேரீச்சம்பழ மரத்தை சத்குரு நடுகிறார். அங்கிருந்த “அடுல் இண்டஸ்ட்ரீஸ்” துணைத்தலைவர், “இம்மரம் எப்படி வளர்கிறது என்று அவ்வப்போது உங்களுக்கு ‘அப்டேட்ஸ்’ (முன்னேற்றத் தகவல்) அனுப்புகிறேன்” என்று சொல்ல, வழக்கம்போல் தன் வார்த்தை சாதுர்யத்தோடு, “அப்டேட்ஸ்-ஐ விடுங்கள் எனக்கு டேட்ஸ்-ஐ (பேரீச்சம்பழத்தை) அனுப்புங்கள்” என்று சிரித்தார் சத்குரு.

mumbai-ahm-21

mumbai-ahm-22

mumbai-ahm-23

நிர்வாகிகளுடன் சிறிது நேரம்

அடுல் இண்டஸ்ட்ரீஸ் உயர்மட்ட அதிகாரிகளுடன் சத்குருவிற்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வளாகத்தை சுற்றிப்பார்த்து, பேட்மிண்டன் விளையாடி, உணவோடு கூடிய மீட்டிங்கில் தலைமை நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்புகிறார் சத்குரு.

mumbai-ahm-24

mumbai-ahm-46

mumbai-ahm-48

mumbai-ahm-49

mumbai-ahm-26

நெடுஞ்சாலை 48ல் நம் வாகனங்கள்

சூரத் நகரத்திற்கு முன்பாக வரும் நவ்சாரி எனும் இடத்திற்கு அருகில் பெட்ரோலுக்காக நின்றபோது…

mumbai-ahm-28

mumbai-ahm-50

mumbai-ahm-29

பூர்ணா நதி - நவ்சாரி அருகே

mumbai-ahm-30

நர்மதா நதி, கேபிள் பிரிட்ஜ்

mumbai-ahm-31

சமீபத்தில் நர்மதா நதியின் மீது கட்டி முடிக்கப்பட்ட, இந்தியாவிலேயே மிக நீளமான “கேபிள் பிரிட்ஜ்” -
mumbai-ahm-51

கேபிள் பிரிட்ஜ் மீது பயணித்து பாரூக் நகரை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்:

பாரூக் நகரில் ஆதரவாளர்களை சத்குரு சந்திக்கிறார்

mumbai-ahm-32

mumbai-ahm-52

mumbai-ahm-34

mumbai-ahm-53

mumbai-ahm-35

mumbai-ahm-36

வதோதராவில் சத்குருவிற்கு வரவேற்பு

mumbai-ahm-54

mumbai-ahm-55

mumbai-ahm-56

mumbai-ahm-57

கலை நிகழ்ச்சி வீடியோ:

மக்களைச் சந்திக்கிறார்

இதில் வதோதரா மாநகராட்சியின் மேயர், வட்டாட்சியர், போலீஸ் கமிஷனர், குஜராத் தொழிலக கூட்டமைப்பு (FGI) பிரமுகர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். சத்குரு பேசியதன் சிறு தொகுப்பு வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.

mumbai-ahm-39

mumbai-ahm-58

mumbai-ahm-59

mumbai-ahm-40

mumbai-ahm-41

வீடியோவில் சத்குரு சொல்வதாவது:

இன்றிருக்கும் பிரச்சினைக்கு, அணைகளை அகற்ற வேண்டும், நகரங்களை மாற்றியமைக்க வேண்டும், இதையெல்லாம் செய்யாதவரை அது சரியான தீர்வல்ல என்று விவாதித்தால், அது ஒரு முடிவற்ற தர்க்கமாகத்தான் இருக்கும். அவர்கள் சொல்வது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அது சாத்தியமா? இப்பிரச்சினைக்கு தீர்வு என்றால், அது மக்களைச் சுற்றி, மக்களையும் உள்ளடக்கிய ஒன்றாக இருக்கவேண்டும். மக்கள் இல்லாமல் தீர்வில்லை. எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றைதான் நாம் செயல்படுத்த முடியும். இந்த திட்டப்பரிந்துரை இதையெல்லாம் கணக்கில் கொண்டு, அதற்குத் தேவையான சமரசங்களையும் வகுத்திருக்கிறது. இதை செயல்படுத்தினால், பலன் கிடைக்க 20-25 வருடங்கள் ஆகலாம். அதாவது 4-5 அரசாங்கங்கள் வந்து போகலாம். ஆனால் இந்தத் திசையில் மாறாமல் இப்பணி சீராக நடக்க நமக்கு 30 கோடி மிஸ்டு-கால் தேவை. வதோதராவில் மிஸ்டு-கால் கொடுக்காத ஒருவர் கூட இருக்கக்கூடாது. செய்வீர்களா?

கிளம்புமுன்…

mumbai-ahm-60

mumbai-ahm-61

வதோதராவில் இருந்து அஹமதாபாத்

7:30 மணியளவில் அஹமதாபாத்தை வந்தடைந்தோம். நாளை மாலை 7 மணிக்கு சபர்மதி நதிக்கரையில் பொதுமக்கள் பேரணி.

mumbai-ahm-62

மஹி நதி:
mumbai-ahm-44

mumbai-ahm-43

சபர்மதி நதி:
mumbai-ahm-45