3

லிங்கபைரவி யந்திரா வைபவம்

ஜுன் 23ம் தேதி லிங்கபைரவி யந்திரா வைபவம் சத்குருவின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் சத்குருவிடமிருந்து நேரடியாக லிங்கபைரவி யந்திரம் மற்றும் லிங்கபைரவி அவிக்ன யந்திரங்களை பெற்றுக்கொண்டனர்.


1
2

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஷிவாங்கா சாதனா

மஹாசிவராத்திரி'க்கு ஷிவாங்கா சாதனாவிற்கு கிடைத்த வரவேற்பையும், தேவையையும் தொடர்ந்து, இனி மாதாமாதம் பௌர்ணமியன்று இந்த விரதத்திற்கு தீட்சை தரப்படும். அப்படி தீட்சை பெற்ற 100 ஷிவாங்கா ஆண்கள், ஜூலை 7ம் தேதியன்று ஈஷா யோகா மையத்திலிருந்து வெள்ளியங்கிரி மலை ஏறி விரதத்தை நிறைவு செய்தனர்.

5
4

சத்குருவுடன் ஈஷா யோகா

சத்குருவுடனான இன்னெர் இன்ஜினியரிங் வகுப்பு, பெங்களூரூவில் ஜூலை 5-7 தேதிகளில் நடந்தது. இந்த வகுப்பில் 300 பேர் கலந்துகொண்டு சத்குருவிடமிருந்து நேரடியாக தீட்சை பெற்றனர்.

8
9

ஈஷா மையம் திறப்புவிழா

கருர் - வேலாயுதம்பாளையத்தில் புதிய ஈஷா மையம் கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. தினசரி பயிற்சிகளுக்கும், ஈஷா வகுப்புகளுக்கும், இந்த மையம் வரும் நாட்களில் பயன்படுத்தப்படும்.
மேலும் தொடர்புக்கு: 9443721528

7
6

பசுமை பள்ளி இயக்கம்

ஜூன் 5ம் தேதி, பாண்டிச்சேரி பள்ளி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது, இதில் 101 பள்ளிகள் கலந்துகொண்டன. அதிலிருந்து வந்த மாணவர்களுக்கு 1.5 லட்சம் மரக் கன்றுகள் வினியோகிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளி மாணவர்களைப் பாராட்டும் விதமாக, 5000 மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஜூலை 7ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில், பாண்டிச்சேரி கல்வி அமைச்சர் திரு. தி. தியாகராஜன் அவர்கள், திரு. அ.அன்பழகன் அவர்கள், விவசாய இயக்குனர் திரு. டாக்டர் அ. ராமமூர்த்தி அவர்கள் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் திரு. ஈ. வல்லவன் அவர்களும் கலந்துகொண்டனர்.