ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுக்காக ஃபோர்டு நிறுவனத்தினர் செய்த செயல்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம்...

ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுக்காகவும் ஈஷா அரசு பள்ளி தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்காகவும் கோவை ஃபோர்டு நிறுவனத்திலிருந்து வந்திருந்த 75க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் கற்றல் உபகரணங்களை உருவாக்க உதவினர். இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பெரும் எதிர்பார்ப்புடன் நடந்துகொண்டிருந்த உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தை கண்டு ரசிக்கச் செல்லாமல் குழந்தைகளுக்காக அவர்கள் அந்த நாளில் வந்திருந்து தன்னார்வத் தொண்டு புரிந்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தித்தந்த அனைத்து தன்னார்வத் தொண்டர்களுக்கும் நிர்வாகத்திற்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.