ஈஷாவில் ஆதியோகி அருகே பெட்டிக் கடை மற்றும் பேட்டரி வாகனம் இயக்கி வரும் தாணிக்கண்டி மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 11 பேர் கொண்ட மகளிர் குழுவினர் ஈஷா யோகா மையத்தின் உதவியால் வெறும் பத்தே மாதத்தில் ரூ.6.5 லட்சம் லாபம் ஈட்டியுள்ளனர். அந்த மகளிர் சுய உதவிக்குழுவினரை நேரில் சந்தித்தபோது, பல்வேறு புதிய தகவல்களும் அவர்களின் வாழ்க்கை சூழல் ஈஷாவால் எவ்விதத்தில் மாறியுள்ளது என்பதும் தெரியவந்தது. அந்த வெள்ளந்தி மனிதர்களின் மனம்திறந்த பகிர்வின் இரண்டாம் பாகம் இங்கே உங்களுக்காக!

செலவே இல்ல. வர்றதெல்லாம் லாபம் தான்

பேட்டரி வண்டியை இயக்கும் உஷா நம் கேள்விக்கு பதில் அளித்தபோது...

 “அண்ணா, நான் இந்த குழுவுல செயலாளரா இருக்கேன். ஈஷால இருக்குற ஒரு அக்கா தான் எனக்கு பேட்டரி வண்டி ஓட்ட கத்து கொடுத்தாங்க. சர்ப்ப வாசல்ல இருந்து ஆதியோகி வரைக்கும் ஒரு நடை போறதுக்கு ஒரு ஆளுக்கு பத்து ரூபாய் வாங்குறோம். இப்ப வச்சு இருக்குற புது வண்டியல 8 ல இருந்து 10 பேர் வரைக்கு உக்காரலாம். தினமும் ராத்திரி ஈஷாலயே சார்ஜ் போட்டுக்கிருவோம். அதுக்கு எந்த காசும் வாங்கமாட்டாங்க. வண்டி ஏதாவது கோளாறு ஆச்சுனா கூட ஈஷா வொர்க் ஷாப்ல ஃப்ரீயாவே சர்வீஸ் பண்ணிக்குவோம். அதுனால, பேட்டரிய வண்டிய பொறுத்தவரைக்கும் செலவுனு எதுவும் இல்ல வர்றதெல்லாம் லாபம் தான்.

குடும்ப கஷ்டத்துனால நோம்பியப்ப அவர் அவருக்கு டிரெஸ் எடுத்துக்காம எனக்கு மட்டும் புது டிரெஸ் எடுத்து தருவாரு. இப்போ, நான் சம்பாதிக்க ஆரம்பிச்சனால அவருக்கும் சேர்த்து டிரெஸ் எடுத்து தர்றேன்

நான் இந்த குழுவுல சேர்றதுக்கு முன்னாடி வீட்டுல சும்மா தான் இருந்தேன். எங்க வீட்டுக்காரரு மட்டும் வேலைக்கு போயிக்கிட்டு இருந்தாரு. குடும்ப கஷ்டத்துனால நோம்பியப்ப அவர் அவருக்கு டிரெஸ் எடுத்துக்காம எனக்கு மட்டும் புது டிரெஸ் எடுத்து தருவாரு. இப்போ, நான் சம்பாதிக்க ஆரம்பிச்சனால அவருக்கும் சேர்த்து டிரெஸ் எடுத்து தர்றேன்.

ஊருக்கே சோறுபோட்டோம்

வாழ்க்கையிலயே முதல் முறைய நாங்க சொந்தமா சம்பாதிச்ச காசுல ஊருக்கே சோறுப் போட்டோம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்னொரு முக்கியமான ஒரு விஷயம். போன வாரம் எங்க கிராமத்துல ‘மூன் லைட் டின்னர்’ வைச்சோம். வாழ்க்கையிலயே முதல் முறைய நாங்க சொந்தமா சம்பாதிச்ச காசுல ஊருக்கே சோறுப் போட்டோம். எல்லாத்துக்கும் அரசாங்கத்தையும், ஈஷாவையுமே நம்பிக்கிட்டு இருந்த நாங்க இப்போ சுயமா தொழில் பண்றதை நினைச்சு பார்க்கும் போது ரொம்பவும் பெருமையா இருக்கு. இதுக்காக ஈஷாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது” என்றார்.

மாச சம்பளம் ரூ.16,000

நாம் பேசிய ஒவ்வொருவரிடம் ஒரு கதை இருந்தது. கல்லாவில் இருந்த குழுவின் பொருளாளர் காயத்ரியிடம் பேசினோம்.

”கடையோட வரவு செலவு கணக்கெல்லாம் நான் பாத்துக்கிறேன். ஒரு சின்ன நோட்டுல வரவு செலவ எழுதி வைச்சுக்கிருவேன். அப்பறம் அதை எடுத்துட்டு போயி ஈஷால ஒரு அக்காட்ட சொல்லி சிஸ்டத்துல ஏத்திருவோம். அவங்க எனக்கு வவுச்சர்ஸ் போட்டு கணக்கு வழக்க எப்படி கரெக்டா மெயிண்டைன் பண்றதுனு சொல்லி கொடுத்தாங்க.

எங்க குழுவுல இருக்குற 11 பேருல 3 பேரு கடைய பாத்துக்கிறாங்க. ஒருத்தர் பேட்டரி வண்டி ஓட்டுவாங்க. ஒரு அம்மா ஸ்கூல்ல ஆயம்மாவா வேலை பாக்குறாங்க. இன்னொரு அம்மா வெளி வேலைக்கு போறாங்க. மீதி இருக்குற 5 பேரு ஈஷாவுல வேலை பாக்குறாங்க. ஈஷால வேலை பாக்குறவங்களுக்கு அங்க சம்பளம் கொடுத்துருவாங்க. அவங்க சாயங்கால நேரத்துல மட்டும் வந்து கடைய பாத்துக்குவாங்க. அவங்க வாரத்துக்கு 3 நாள்ல வர்ற மாதிரி செடூல் போட்டுருக்கோம்.

கடையில வேலை பாக்குறவங்களுக்கு பேட்டரி வண்டி ஓட்றவங்களுக்கும் தினமும் தனியா சம்பளம் இருக்கு. ஒரு மணி நேரத்துக்கு 25 ரூபாயில இருந்து 35 ரூபாய் வரைக்கும் சம்பளம். சாதாரண நாட்கள்ல இங்க முழு நேரமா வேலை பாக்குற ஆளுக்கு மாசம் 6 ஆயிரத்துல இருந்து 9 ஆயிரம் வரைக்கும் கிடைக்கும். சீசன் காலத்துல 12 ஆயிரத்துல இருந்து 16 ஆயிரம் வரைக்கும் சம்பளம் கிடைக்கும். நாங்க கடை ஆரம்பிச்சு பிப்ரவரி மாசத்தோடு 10 மாசம் ஆகுது. 

10 மாசத்துல ஆறரை லட்சம் லாபம்

வெறும், 2,200 முதலீடோட ஆரம்பிச்ச நாங்க 15 லட்சத்துக்கு வியாபாரம் பாத்துருக்கோம். வேலை ஆளுங்க செலவு, கடைக்கு பொருட்கள் வாங்கின செலவு போக ஆறரை லட்சம் லாபமா கிடைச்சுருக்கு. அந்த பணத்துல ஆளுகொரு செல்போன் வாங்கிருக்கோம். தீபாவளியப்போ ஆளுக்கு 15 ஆயிரம் ஷேர் பிரிச்சு எடுத்துக்கிட்டோம். பேங்க்ல இருந்த மீதி பணத்த வைச்சு 5 லட்சத்து 7 ஆயிரத்துக்கு புதுசா ஒரு பேட்டரி வண்டி வாங்கிருக்கோம்.

கூலி வேலைக்கு போயி கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த நாங்க இப்போ சொந்தமா கடை வச்சு நடத்துற அளவுக்கு வளர்ந்துக்கோம். அதுலயும் பொண்ணுங்களா ஒண்ணு சேர்ந்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கோம். ஈஷாவோட உதவி இல்லாம எங்களால இந்தளவுக்கு வளர்ந்துருக்க முடியாது

கூலி வேலைக்கு போயி கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த நாங்க இப்போ சொந்தமா கடை வச்சு நடத்துற அளவுக்கு வளர்ந்துக்கோம். அதுலயும் பொண்ணுங்களா ஒண்ணு சேர்ந்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கோம். ஈஷாவோட உதவி இல்லாம எங்களால இந்தளவுக்கு வளர்ந்துருக்க முடியாது.

இன்னும் நிறைய சாதிப்பாங்க

இத்தனை சாதனைகளுக்கும் உறுதுணையாக இருக்கும் ஸ்வாமி சிதாகாஷாவுடன் பேசியபோது...

ஈஷா அவுட்ரீச் மூலமா கிராமப்புற மக்களுக்காக தொண்டாமுத்தூர் முழுக்க நிறைய செயல் பண்ணிக்கிட்டு இருக்கோம். குறிப்பா, கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்புனு எல்லாத்துலயும் பின் தங்கி இருக்குற மலைவாழ் பழங்குடி மக்களோட நலனுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்குறோம்

”ஈஷா அவுட்ரீச் மூலமா கிராமப்புற மக்களுக்காக தொண்டாமுத்தூர் முழுக்க நிறைய செயல் பண்ணிக்கிட்டு இருக்கோம். குறிப்பா, கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்புனு எல்லாத்துலயும் பின் தங்கி இருக்குற மலைவாழ் பழங்குடி மக்களோட நலனுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்குறோம். தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில் பதி, சாடிவயல், சீங்கபதி, நல்லூர் பதி, பெருமாள் கோவில் பதி, குளத்தேரினு அங்கங்க இருக்குற மலைவாழ் கிராமங்கள்ல குழந்தைகள படிக்க வைக்கிறது, இலவசமா மருத்துவம் பாக்குறது, வேலைவாய்ப்ப உருவாக்கி கொடுக்குறதுனு நிறைய விஷயங்கள் செய்றோம்.

பொண்ணுங்களாம் நீங்க ஒண்ணு சேர்ந்து என்னத்தா பெரிசா சாதிச்சிற போறீங்கனு அவங்க கிராமத்துக்காரங்க கிண்டல் பண்ணிருக்காங்க. கேலி, கிண்டல்கள்னா மனசு உடஞ்சு போகாமா ஒத்துமையா இருந்து மத்த ஆட்கள் ஆச்சரியப்பட்ற மாதிரி அளவு இவங்க வளர்ந்துருக்காங்க

மத்த எல்லா மலைவாழ் கிராமங்கள காட்டிலும் தாணிக்கண்டி மக்கள் தான் ரொம்பவும் பின் தங்கி இருக்காங்க. அதுனால தான் அவங்களுக்கு கடை வச்சு கொடுத்துருக்கோம். ஆரம்பத்துல அவங்க எல்லாத்தையும் ஒண்ணு சேக்குறது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. அவங்க கடைய சிறப்பா நடத்துறதுக்காக அப்பபோ நிறைய ஐடியா கொடுப்பேன். ஆனா, இறுதி முடிவு அவங்களே எடுக்குற மாதிரியான சூழல உருவாக்குனேன். ஆரம்பத்துல இவங்க கடை ஆரம்பிக்கும் போது, ‘பொண்ணுங்களாம் நீங்க ஒண்ணு சேர்ந்து என்னத்தா பெரிசா சாதிச்சிற போறீங்கனு அவங்க கிராமத்துக்காரங்க கிண்டல் பண்ணிருக்காங்க. கேலி, கிண்டல்கள்னா மனசு உடஞ்சு போகாமா ஒத்துமையா இருந்து மத்த ஆட்கள் ஆச்சரியப்பட்ற மாதிரி அளவு இவங்க வளர்ந்துருக்காங்க. இதை நினைக்கும் போதும் ரொம்பவும் பெருமை இருக்கு. வெறும் பத்து மாசம் தான ஆயிருக்கு. பொறுத்து இருந்து பாருங்க. இன்னு என்னென்ன சாதனையெல்லாம் பண்ண போறாங்கனு” என்று உற்சாகவும் நம்பிக்கையும் கலந்து பேசினார்.

முதல் பகுதியில்...

ரூ.2,200 மட்டுமே முதலீடுசெய்து ஆதியோகி அருகில் பெட்டிக்கடை நடத்திவரும் மலைவாழ் கிராமத்தின் பழங்குடிப் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொண்ட வெற்றிக்கதையை படித்தறியலாம்.