திரு. ராஜசேகர் - சென்னை வாசி! நல்ல குடும்பம், நிறைவான வேலை, கைநிறைய சம்பளம். இவையெல்லாம் இருந்தும் சில குழந்தைகள் கல்விக்கு உதவியதன் மூலம் தான் ஆனந்தக் கண்ணீர் உணர்ந்தேன் என்கிறார். அப்படி என்ன செய்தார்? அவரது வார்த்தைகளிலேயே தெரிந்துகொள்வோம்...

திரு.ராஜசேகர்:

சென்னைவாசியான எனக்கு ரோட்டில் கையேந்தும் குழந்தைகளின் காட்சியும், சத்தமும் புதிதல்ல... மடியில் என் 1 வயது மகளுடன் காருக்குள் சொகுசாக அமர்ந்திருப்பேன். காருக்கு வெளியிலோ நான் பெறாத குழந்தைகள்! அவ்வளவே வித்தியாசம். வெறும் வேடிக்கையாளராக எப்படி இருப்பது? என் மனசாட்சி என்னை குடைந்து எடுத்தது. உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி அப்பிஞ்சு கண்களில் நான் கண்ட வெளிவரா வார்த்தைகள், 'எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்!'

இந்நாட்டில் எத்தனை ஆயிரம் குழந்தைகள் இப்படி அடிப்படை வசதி இல்லாமல் அவதிக்குள் உள்ளனர்... அத்தனை பேரையும் நான் தத்தெடுக்க முடியுமா? அவர்களை என் உளமாற பேணிக்காக்க முடியுமா?

2006ம் ஆண்டு சத்குரு அவர்கள் ஈஷா வித்யா திட்டத்தை அறிமுகம் செய்தார். ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு ஈஷா வித்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி, நகர பள்ளிகளுக்கு இணையாக... தரமான கல்வி மட்டுமே இவர்களையும் இவர்கள் குடும்பத்தையும் இவ்வறுமை சுழற்சியிலிருந்து மீட்டெடுக்க முடியும். என் நாட்டை தலைநிமிர்ந்து முன்னே கொண்டு செல்லவுள்ளவர்கள் இவர்களே...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என்னால் என்ன செய்ய முடியும் இப்பிள்ளைகளுக்காக என்ற கேள்விக்கு விடை கிடைத்தது. பத்மஸ்ரீ என்ற 7 வயது சிறுமியின் கல்வியை நான் தத்தெடுத்தேன். கடந்த ஏழு வருடங்களாக அக்குழந்தையுடன் தொடர்பில் இருக்கிறேன். அவளது மார்க் ஷீட் தவறாமல் எனக்கு அனுப்பி வைக்கப்படும். 'நீ கணக்கில் கொஞ்சம் கவனம் செலுத்து. ஆங்கிலத்தில் நல்ல முன்னேற்றம். மிக்க மகிழ்ச்சி' என கடிதம்/ஈமெயில் மூலமாக தொடர்பு! இதற்கெல்லாம் 'Thank you for helping me' என்று பதில் வரும்.

இதனோடு நிறுத்தவில்லை... இது வரைக்கும் சுமார் ஒரு 20 குழந்தைகளின் கல்விக்கு நான் வழி வகுத்தேன்.

‘கை நிறைய சம்பாதிக்கிறேன், இச்சமுதாயத்திற்காக நான் என்ன செய்தேன்' என குற்றவுணர்ச்சியில் பலர். எனக்கு தெரிந்த அனைவரிடமும் இத்திட்டத்தை கொண்டு சென்றேன். அனைவரும் ஒவ்வொரு குழந்தையின் கல்விக்கு உதவ முன்வந்தனர்...

தூத்துக்குடி கிராமம் குடம்புளியில் 42 மாணவர்களுடன் 2007ம் ஆண்டு ஆரம்பித்த ஈஷா வித்யா பள்ளி இன்று 722 மாணவர்களுடன்... இவ்வருடம் முதல் முதலில் பத்தாம் வகுப்பு பரிட்சை எழுதுவுள்ளனர்.

அதற்கு குரு பூஜை செய்து, அவர்கள் அனைவருக்கும் ஹால் டிக்கட் வழங்கப்பட்டது. எனக்கோ பெருமிதத்தில் ஆனந்த கண்ணீர்! இவ்வளவு நிறைவு வேறெதிலும் கண்டதில்லை நான்!

இது ஒரு கிராமத்தின் கதை மட்டுமே. இன்று மொத்தம் 5800 குழந்தைகள், 9 பள்ளிகள், எந்த அடிப்படை வசதியும் இல்லாத 9 கிராமங்களிலிருந்து...

ஈஷா வித்யா திட்டத்தின் வெற்றியை கண்டு தமிழக அரசு 40 அரசு பள்ளிகளை நம் கையில் ஒப்படைத்தது. விளைவு, கடந்த 20 வருடங்களாக ஒரு முறை கூட 100% தேர்ச்சி பெற்றிடாத ஒரு சேலம் அரசு பள்ளி, கடந்த ஆண்டு 100% தேர்ச்சி பெற்றதற்காகப் பாராட்டுக் கடிதம் எழுதியது, ஈஷா வித்யாவுக்கு... அனைத்து மாணவர்களும் வெற்றி கண்டனர்!

இதுபோலவே, புதிதாய் உருவெடுக்கும் ஆந்திரா மாநிலம், தனது 6000 அரசு பள்ளிகளை நம்மிடம் ஒப்படைத்துள்ளது...

என்னால் என்ன செய்ய முடியும் என்று முடங்கியிருந்த நான் இப்பொழுது பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்வில் விளக்கேற்றிவிட்டோம் என்ற பெருமிதத்துடன்...

இப்பயணம் தொடரும்... மாற்றம் நிச்சயம். 42ல் தொடங்கி இன்று பல ஆயிரம், நாளை பல லட்சம்!

நன்கொடை விபரங்கள்

donations

Isha-Vidhya-Class-Fundraiser-Standee-Tamil

ஆன்லைனில் நன்கொடை செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
வரைவோலை/ காசோலை "Isha Education" என்ற பெயரில் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். மேலும் நன்கொடைக்கான விபரங்களுக்கு donations@ishavidhya.org என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

Isha Vidhya
14, C.A. Thevar Layout,
Kannapiran Mills Road,
Udayampalayam,
Coimbatore – 641 028
Tamil Nadu, India
Phone: +91-9442544458