செய்தித்தாளில் வழக்கமாக ‘விளையாட்டு’ என்ற தலைப்பில் ஒரு பகுதி இடம்பெறும். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு விளையாட்டு அனுபவம் என்பது வாசிப்பதும் பார்ப்பதும் என்ற அளவிலேயே உள்ளது. நாம் ஒரு பார்வையாளராக இருந்தால் கூட, ஒரு கிரிக்கெட் விளையாட்டோ அல்லது ஒரு கால்பந்து விளையாட்டோ அல்லது ஒரு கபடி போட்டியோ நம்மை முழுமையாக ஆட்கொண்டுவிடுகிறது. ஆனால், நாம் விளையாட்டில் ஒரு பங்கேற்பாளராக முழுமையாய் அதில் குதிக்கும்பட்சத்தில் நமது அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கும்?

இப்பொது தமிழ்நாட்டின் நூற்றுக்கணக்கான கிராமங்களில் இதுதான் உண்மையாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதகாலமாக, 3500 அணிகள் வாலிபால் (ஆண்களுக்கானது) போட்டி எறிபந்து (பெண்களுக்கானது) போட்டி மற்றும் கபாடி (ஆண்கள் மற்றும் பெண்கள் ) போட்டியிலும் பங்கேற்று ஈஷா புத்துணர்வு கோப்பையை வெல்வதற்கு முழுமூச்சுடன் விளையாடினர். இந்த அணிகளில் உள்ளவர்கள் முழுக்க இளைஞர்கள் மட்டும் அல்ல; 70 வயது பாட்டியம்மா மற்றும் இல்லத்தரசிகள் பலர் என பல்வேறு தரப்பட்டவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் கிராமப் புத்துணர்வு மற்றும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் ஈஷாவின் பெரும்முயற்சியின் ஒருபகுதியாக நிகழ்த்தப்படுகின்றன.

இந்த விளையாட்டுப் போட்டிகள் கிராமங்களில் உள்ள பாகுபாடுகளை களைந்துள்ளது. பண்ணை வீட்டுக்காரரும் பண்ணையில் கூலி வேலை செய்யும் தொழிலாளியும் ஒரே அணியில் விளையாடுகின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த விளையாட்டுப் போட்டிகளால் மன அழுத்தம் மறைந்து, புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற்றுள்ளனர் பலர். ஜாதி-மத பாகுபாடுகள் கிராமங்களில் காணாமல் போயுள்ளன.

ஈஷா கிராம புத்துணர்வு இயக்கத்தின் சீறிய முயற்சியால் 2018 ஈஷா கிராமோத்சவம் திருவிழாவின் ஒரு பகுதியாக ஈஷா புத்துணர்வு கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நிகழ்கின்றன. உணவுத் திருவிழா, கிராமிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினை கண்காட்சிகள் போன்ற சிறப்பு நிகழ்வுகள் அரங்கேறும் ஈஷா கிராமோத்சவம் தமிழக கிராம மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆண்டுதோறும் நிகழும் ஈஷா கிராமோத்சவ திருவிழாவிற்காக கிராம மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இத்தகைய மாற்றங்கள் அவ்வளவு எளிதில் தமிழகத்தில் நிகழ்ந்துவிடவில்லை. உதாரணமாக, ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் முதலில் அண்ணாநகர் கிராமத்தை பார்வையிட்டு அங்குள்ள மக்கள் ஒவ்வொருவரையும் யோகா மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர். முதலில் அவர்கள் மிகவும் தயங்கினர். பின்னர் மெதுவாக பார்வையாளராக பார்க்க வந்தனர்; அதன்பின் பார்வையாளர்கள் பங்கேற்பாளராக மாறினர். சிறப்பான வாழ்க்கையைத் தேடி சென்னை நகரத்திற்கு குடிபெயர்ந்த கிராம மக்களில் ஒருவர் இந்த விளையாட்டில் கலந்துகொள்வதற்காக மீண்டும் கிராமத்திற்கு வந்துள்ளார்.

Isha Gramotsavam 2015 – Celebrate the Rural Spirit

இதைப்போன்ற இன்னும் பல நிகழ்வுகள் கூட நிகழ்ந்துள்ளன. நாள்முழுக்க வேலைசெய்துவிட்டு இரவில் குடித்துவிட்டு வீட்டில் மனைவியை துன்புறுத்தும் கிராமத்திலுள்ள சில ஆண்களின் வாழ்க்கைமுறை, இந்த விளையாட்டுப் போட்டிகள் கிராமங்களுக்குள் வந்த பின்னர் முற்றிலும் மாறியுள்ளது. வாழ்க்கையில் சுவாரஸ்யம் இல்லாததால் மற்றும் வெறுமை காரணமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் பலர் இதன்மூலம் அப்பழக்கத்திலிருந்து வெளிவந்துள்ளனர். புதியதொரு உத்வேகத்துடன் அவர்கள் தங்கள் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு தங்கள் மனைவியுடன் நல்லமுறையில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விளையாட்டுப் போட்டிகள் கிராமங்களில் உள்ள பாகுபாடுகளை களைந்துள்ளது. பண்ணை வீட்டுக்காரரும் பண்ணையில் கூலி வேலை செய்யும் தொழிலாளியும் ஒரே அணியில் விளையாடுகின்றனர். இங்கே யார் சிறப்பாக விளையாடுகின்றனர் என்பதுதான் பார்க்கப்படுகிறது. பலர் தங்களது முழு வாழ்க்கைமுறையே இதன்மூலம் மாற்றம் கண்டுள்ளது என்று பகிர்ந்துகொள்கின்றனர். மருமகள் விளையாடும் அணியை மாமியார் உற்சாகப்படுத்தி ஆதரவு தெரிவிக்கும் காட்சிகளையும் ஈஷா கிராமோத்சவ போட்டிகளில் காணமுடிகிறது.

ஈஷா மூலம் இந்த ஒரு முயற்சி துவங்கப்பட்டிருந்தாலும், பல ஊர்கள் மற்றும் நகரங்களில் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும் விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்திவருகின்றனர். தங்கள் மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றில் விளையாட்டுகள் சிறப்பான முன்னேற்றத்தை வழங்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து ஒருவர் கூறுகையில், “சிறப்பான ஆரோக்கியத்துடன் சமநிலையான மனநிலையுடன் நல்ல குடிமகனாக ஒருவர் வளர்வதற்கு இந்த விளையாட்டுகள் துணைநிற்கின்றன. மேலும் நாட்டிற்காக சேவை செய்யும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. எங்கள் விளையாட்டு அணியிலிருந்த இரண்டு பேர் தற்போது இராணுவத்திற்கு சென்றுள்ளனர்” என்றார்.

ஆசிரியர் குறிப்பு:

  • ‘காளியூர்’ எனும் அந்த சிறிய கிராமத்தை 10 ஆண்டுகளுக்குள் முற்றிலும் மாற்றிய ஒரு பந்து மற்றும் ஒரு விளையாட்டு அணி - எப்படி? இந்தப் பதிவில்...
  • மேலும் விவரங்களுக்கு கிராமோத்சவம் இணையதளத்திற்கு வருகை தாருங்கள்!
GSM2018-newsletterbanner