நர்மதா


ஆற்றின் நீளம்

1312 கி.மீ

ஆற்றுப்படுகை நிலம்

98,796 சதுர கி.மீ

ஆற்றுப்படுகையில் மக்கள் தொகை

4.8 கோடி

ஆற்றுப்படுகையில் உள்ள மாநிலங்கள்

மத்தியப்பிரதேசம் மகாராஷ்டிரம் குஜராத்

ஆற்று நீரை உபயோகிக்கும் முக்கிய நகரங்கள்

அகமதாபாத் (55 லட்சம் மக்கள் தொகை), போபால் (17 லட்சம் மக்கள் தொகை), வதோதரா (17 லட்சம் மக்கள் தொகை)

ஆற்றின் வறட்சி

  • வற்றிய தண்ணீர் அளவு: 58%
  • வறண்ட காலத்தில் வறட்சி அபாயம்: குறைவு
  • மழைக் காலத்தில் வெள்ள அபாயம்: மிக அதிகம்
  • மரங்கள் அழிந்த மொத்த அளவு: 94%
  • நீர்நிலையில் பருவகாலத்தில் ஏற்படும் மாற்றம்: மிக அதிகம்

பொருளாதார & சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

  • நர்மதா கடலில் கடக்கும் இடமான பாருச் என்னும் நகரம் குஜராத்தில் உள்ள முக்கிய துறைமுகமாக இருக்கிறது. இந்த நகரம் பழங்காலத்திலேயும் முக்கிய துறைமுகமாக திகழ்ந்தது. கிரேக்கர்கள் இதை பாரிகாசா என்று அறிந்து இருந்தனர். அவர்கள் நர்மதாவை நம்மடுஸ் என்று அழைத்தனர். கிரேக்க ரோமானிய சீன ஆப்பிரிக்க வணிகர்கள் இங்கே வர்த்தகம் புரிந்ததாக அறியப்படுகிறது.


சமீபத்திய பேரழிவுகள்

நர்மதா நதியின் 101 கிளை நதிகளில் 60 கிளை நதிகள் ஒன்று பருவநதியாகவோ அல்லது மொத்தமாக வறண்டோ போய்விட்டன. பல மாதங்களுக்கு நர்மதா கடலில் கலக்காததால், கடல் உள்புகுற துவங்கிவிட்டது. இதனால், நீரில் உப்புத்தன்மை மிகுதியாகிறது, மண்வளம் குன்றுகிறது, தொழிற்சாலைகள் மகத்தான இழப்பினை சந்திக்கின்றன.

2012-ல் நர்மதா மற்றும் அதன் கிளை நதிகளின் வெள்ளப்பெருக்கால் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், மூன்றே நாட்களில் வறட்சியில் இருந்து வெள்ளப்பெருக்கு நிலைக்கு மாறின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 141 கிராமங்களில் இருந்த 20,000 மக்கள் மீட்கப்பட்டனர். மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டாலும், முரண்பாடாக மாநிலத்தின் 40% பகுதிகள் மழை பற்றாக்குறையுடன் இருந்தன. இதுபோன்ற பேரழிவுகள் நாட்டின் ஒவ்வொரு நதிகளுக்கும் நடக்கிறது.


ஆன்மீக & கலாச்சார முக்கியத்துவம்

நர்மதா நதிக்கரையில் அமைந்த ஓம்காரேஸ்வரம் எனும் இடத்தில்தான் ஆதிசங்கரர் சன்யாசம் பெற்றார். ஓம்காரேஸ்வரத்தில் உள்ள ஜோதிர்லிங்கத்துக்கு அருகே மகேஸ்வர் என்ற முக்கியமான கோவில் நர்மதா கரையில் அமைந்துள்ளது.

நர்மதா நதியின் மூலத்தில் இருந்து அது கடலில் கடக்கும் இடம் வரை சென்று, மீண்டும் நதிமூலத்திற்கே செல்லும் 2600 கி.மீ தூரம் கொண்ட நர்மதா பாணிக்ரமா என்ற யாத்திரையை ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகிலேயே பழமையான குகை ஓவியங்களில் ஒன்றான சுமார் 30,000 ஆண்டுகள் முந்தைய ஓவியங்கள் நர்மதா நதிக்கரையில் உள்ள பீம்பெட்கா குகைகளில் அமைந்துள்ளன.

அழியும் நம் நதிகளை பற்றி அறியுங்கள்

x