நம் நதிகள் அழிந்து வருகின்றன

கங்கா, கிருஷ்ணா, நர்மதா மற்றும் காவேரி போன்ற நமது பிரம்மாண்ட நதிகள் பல வேகமாக வற்றி வருகின்றன. துரிதமாக நாம் செயல்படாவிட்டால், அடுத்த தலைமுறையை நாம் கையறுநிலையில், சச்சரவில் விட்டுச்சென்றதாய் வருங்காலம் சொல்லும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த ஆறுகள் நம்மை பராமரித்து, ஊட்டமளித்து வந்தன. நம் நதிகளுக்கு உயிரூட்ட இதுவே சரியான தருணம்

மேலும் அறிக

நம் நதிகளை காப்போம்

நமது நதிகள் புத்துயிர் பெறுவதற்கு ஒரு எளிய வழி, நதியின் இரு கரைகளிலும், குறைந்தபட்சம் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவிற்கு மரநிழலில் வைத்திருப்பதே.

அரசு நிலத்தில் வன மரங்களை நடலாம். விவசாய நிலங்களில் வேளாண் காடுகள் அமைக்கலாம். இது மண்ணை ஈரப்பதமாக்கி நமது ஆறுகள் வருடம் முழுவதும் ஓட வழிவகை செய்யும். வெள்ளப்பெருக்கு, வறட்சி மற்றும் மண்ணரிப்பை தடுக்கும். இதனால், விவசாயிகளின் இலாபம் பெருகும்.

மேலும் அறிக

நீங்கள் என்ன செய்யலாம்…

நதிகளை காக்க வாக்களியுங்கள்

மிஸ்டு கால் கொடுங்கள்

80009 80009

உங்கள் மிஸ்டு கால், ஒரு சாதகமான “நதி மீட்பு கொள்கையை” உருவாக்க துணைநிற்கும். இதன்மூலம், நம் நதிகளை காத்து, புத்துயிர் பெறச் செய்யலாம். எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்

உங்களிடம் ஐடியாக்கள் உள்ளதா? நீங்கள் தேவை!

அழிந்து வரும் நம் நதிகளை காத்து, அவற்றிற்கு புத்துயிர் அளிக்க சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், வல்லுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. நதிகள் நம் நாட்டின் உயிர்கள், காப்போம் வாருங்கள்.

உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் Ideas@RallyForRivers.org என்ற இமெயில் முகவரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#நதிகளை மீட்போம்

சத்குரு அவர்கள் தானே கார் ஓட்டி, குமரி முதல் இமயம் வரை, விழிப்புணர்வு பயணம் செய்கிறார்

கொடியசைத்து துவக்கம்: செப். 3

கோயம்புத்தூர்

நிறைவு விழா: அக். 2

புது டில்லி

இதில் பங்கேற்று ஆதரவளியுங்கள்

எழுத்துப் போட்டி - வழங்குபவர்கள் Camlin

5-7ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான போட்டி இது. “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்,” என்கிற தலைப்பில் 40 வார்த்தைகளில் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். பள்ளி, மாநிலம் மற்றும் தேசிய அளவில் பரிசுகள் வழங்கப்படும்

படைப்புத் திறன் போட்டி - வழங்குபவர்கள் Nickelodeon

உங்கள் பள்ளி முழுவதையும் ஒன்று கூட்டி, ஒரு கலைத் திறனுடைய படைப்பினை உருவாக்கிடுங்கள். “நதிகளை மீட்போம்” விழிப்புணர்வு இயக்கத்தை பற்றிய உங்கள் கருதுக்களை பிரதிபலிப்பதாய் அந்த படைப்பு இருக்கட்டும். மனித உருவாக்கமோ, ஓவியமோ, சுவர்சிற்பமோ, சிற்பமோ எதுவாக வேண்டுமானாலும் உங்கள் படைப்பு இருக்கலாம். ஆச்சரியமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன!

ஆன்லைன் வீடியோ போட்டி - விரைவில்!

திரை இயக்குநர்களை வரவேற்கிறோம்! வற்றி வரும் இந்திய நதிகள் பற்றி ஒரு குறும்படம் எடுங்கள். இந்தியாவிற்கு உத்வேகமளித்து, நதிகளைப் பற்றி தெரியப்படுத்தி, செயல்பட ஊக்கப்படுத்துங்கள். சிறந்த வீடியோக்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் காத்திருக்கின்றன. விரைவில் இவ்விடத்தில் தகவல் பதியப்படும், பார்த்திருங்கள்!

0
View All
  View All

  ஊடகங்களில்

  Isha Foundation signs MoU to enhance green cover in Maharashtra

  July 2, 2017 | Trinity Mirror
  Department of Forest, Government of Maharashtra and Isha Foundation signed a Memorandum of Understanding (MoU)

  Sadhguru Jaggi Vasudev's River Sutra to give India water of life

  July 16, 2017 | DECCAN CHRONICLE
  Guru launches nationwide campaign on Sept 3.Sadhguru Jaggi Vasudev founder of ISHA Foundation is on a mission to save rivers and rejuvenate them.

  Govt, spiritual outfits begin reviving banks of Cauvery

  July 13, 2017 | The Times of India
  The first drought reported in the recent history of Kodagu district, the birthplace of river Cauvery, seems to have woken up the state government, spiritual organizations and environmentalists.