Quote Spataro

அனைத்து மதங்களுக்கும் முன்தோன்றிய ஆதியோகியாம் சிவன், எந்நாட்டவருக்கும் பொருந்தும் விதமாய் வழங்கிய யோகமுறைகளை கொண்டாடிட, 112 அடி உயரத்தில் கம்பீரமான ஆதியோகி முகம்!

–  சத்குரு

 

ஆதியோகி - சிவன்
யோகத்தின் மூலம்

“ஷிவா” என்றால் “எது இல்லையோ அது” என்று பொருள். இன்றைய நவீன விஞ்ஞானம், அனைத்துமே ஒன்றுமில்லாததில் தோன்றி, ஒன்றுமில்லாததில் மறைகிறது என்கிறது. பிரபஞ்சத்தின் அடிப்படைத் தன்மையே, பரந்து விரிந்த வெறுமை மட்டும்தான். பால்வெளிகள் என்பது சிறிய நிகழ்வு, மீதம் இருப்பதெல்லாம் பரந்த வெற்றிடம் மட்டுமே. இதைத்தான் நாம் “ஷிவா” என்று குறிப்பிடுகிறோம். எனவே ஷிவாவை இருப்பு/மனிதர் என்று வர்ணிப்பதில்லை, இருப்பற்றது என்றே கூறுகிறோம். இன்னொரு தளத்தில், “ஷிவா” என்று நாம் சொல்லும்பொழுது, யோக விஞ்ஞானத்தின் அடிப்படையான ஆதியோகி அல்லது முதல் யோகியைக் குறிப்பிடுகிறோம். யோகா என்றால் தலைகீழாக நிற்பதோ அல்லது உங்கள் மூச்சை பிடித்து வைப்பதோ அல்ல. யோகா என்பது இந்த உயிர் உருவான விதம், அந்த உயிரை அதன் உச்சபட்ச சாத்தியத்திற்கு எடுத்து செல்லும் விதம் பற்றி அறிய உதவும் விஞ்ஞானம், தொழில்நுட்பம். Read More

யோகியாக அறியப்படும் தன்மையும், பிரபஞ்சத்தின் அடிப்படையாக அறியப்படும் தன்மையும் ஒன்றுதான். ஏனென்றால் ஒரு யோகியானவர், பிரபஞ்சத்தையே தனக்குள் ஒரு பாகமாக அனுபவித்தவர். இந்த பிரபஞ்சத்தை உங்களுக்குள் ஒரு ஷணமேனும் அனுபவத்தில் பிடித்து வைக்க வேண்டுமென்றால், நீங்கள் அந்த ஒன்றுமில்லாததாக இருக்க வேண்டும். ஒன்றுமில்லாதது மட்டுமே அனைத்தையும் பிடித்து வைக்க முடியும். ஏதோ ஒன்று அனைத்தையும் பிடித்து வைக்க முடியாது. இந்த கிரகமானது, இங்கிருக்கும் கடலை பிடித்து வைக்க முடியுமே தவிர அந்த சூரிய மண்டலத்தை அல்ல. சூரிய மண்டலமானது அந்தச் சூரியனையும் மற்ற கிரகங்களையும்தான் பிடித்து வைக்க முடியுமே தவிர அந்தப் பால்வெளியை அல்ல. அப்படியென்றால், ஒன்றுமில்லாதுதான் அனைத்தையும் பிடித்து வைக்க முடியும் என்பது உங்களுக்குப் புரியும். ஷிவாவை, “எது இல்லையோ அது” என்று சொன்னாலும், யோகி என்று பேசினாலும், இரண்டும் ஒன்றுதான், ஆனால் இரண்டுமே வெவ்வேறு அம்சங்கள். இந்தியா ஒரு பேச்சுவழக்கு கலாச்சாரம். எனவே ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு எளிதில் நாம் இடம் பெயர முடியும்.

  • ஆதியோகி சிவன் – யோகத்தின் மூலம்

    15,000 ஆண்டுகளுக்கு முன், மதங்கள் இந்த மண்ணில் உருவாவதற்கும் முன்பாக, முதல் யோகியான ஆதியோகி தன்னுடைய ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு யோகக் கலையினை அருளினார். மனிதர்கள், தங்களின் எல்லா எல்லைகளையும் கடந்து, தங்களுக்குள்ளும், இந்த உலகிலும் முழுமையான சுதந்திரத்தை உணர்ந்திடும் 112 வழிகளை வெளிப்படுத்தினார். Goto page
  • சிவன் – எத்தனை பெயர்கள்? எத்தனை முகங்கள்?

    நம் இந்தியக் கலாச்சாரத்தில், சிவனுக்கு நாம் பல வடிவங்கள், பெயர்கள் கொடுத்து வழிபட்டு வருகிறோம். அவற்றின் அம்சங்கள் என்ன என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்... Goto page
  • சிவனின் இருப்பிடங்கள்

    சிவன் வசித்த 4 முக்கிய இடங்களைப் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தக் கட்டுரையில் சத்குரு விளக்குகிறார்... Goto page
  • சிவபுராணம் – கதையின் மூலம் சொல்லப்பட்ட விஞ்ஞானம்!

    சிவபுராணம், அடிப்படை விஞ்ஞானத்தின் பல அம்சங்களை எவ்வாறு விளக்கியுள்ளது என்பதையும் மேலும் ஒருவர் தன் கட்டுபாடுகளைக் கடந்து போவதற்கு அது எப்படி ஒரு சக்தியான கருவியாக இருக்கிறது என்பதையும் சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார். Goto page