எங்கு திரும்பினாலும் பல சாதனங்கள், பல பயிற்சிகள் நம் 'நல்லதிற்கு' என்று சொல்லி வழங்கப்படுகிறது. இதில் எவை நமக்கு நிச்சயமாக நன்மை பயக்கும், எவை வியாபார யுக்திக்காக சொல்லப்படுகிறது என்று பெரும்பாலான நேரங்களில் புரிந்து கொள்ள முடிவதில்லை. இன்று யோகாவும் 'மிக நல்லது' என்றே சொல்லப்படுகிறது. இதற்கு சத்குரு உத்தரவாதம் தருவாரா..?

Question: யோகாவினால் நன்மை கிடைக்கும் என்று காரண்டி தர முடியுமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

"நிச்சயமாக!

யோகா என்பது தலைகீழாக நிற்பதோ, பல கோணங்களில் உடலை வளைப்பதோ அல்ல. அவ்வாறு செய்வதெல்லாம் யோகாசனங்கள். யோகத்தின் ஒரு சிறு பகுதி. அவ்வளவுதான்! யோகா எனும் சொல்லிற்கு 'சங்கமம்' என்று அர்த்தம். அதாவது எல்லாவற்றுடனும் ஒன்றென உணர்வது.

நீங்கள் ஆணா, பெண்ணா... கறுப்பா... சிவப்பா... இந்தியனா, அமெரிக்கனா... என யோகா கவலைப்படுவதில்லை. நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், முறையான யோகா மிகச் சரியாகவே வேலை செய்யும்.

பல ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக யோகப் பயிற்சிகள் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் நம்மிடம் இருக்கின்றன. உறுதியாக நற்பலன்கள் தராத எதுவும் பல்லாயிரம் வருடங்களாக நிலைத்திருக்க வாய்ப்பில்லை. சென்ற நூறு தலைமுறைகளில் நாகரீகங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் என எத்தனையோ பலவாறாகத் திரிந்துவிட்டன. ஆனால், பாரம்பரிய யோகமுறைகள் சற்றும் பிரளவுமில்லை, அதன் மதிப்பை இழக்கவுமில்லை. காரணம், முறையான யோகா ஒரு விஞ்ஞானம்!

இன்றைய 'எலெக்ட்ரிக் பல்புகள்' எப்படி வேலை செய்கிறது என்ற விஞ்ஞானத்தை பள்ளிக்கூடம் சென்று நீங்கள் புரிந்து கொண்டிருந்தாலும், அல்லது அதைப் பற்றி ஒன்றுமே தெரியாத பாமரனாய் இருந்தாலும், சுவிட்சைப் போட்டால், விளக்கு எரியும். அதைப்பற்றிய விஞ்ஞானத்தை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று கட்டாயமில்லை. அதுமட்டுமல்ல, நீங்கள் எந்நாட்டவராய் இருந்தாலும், எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், வித்தியாசமின்றி இது வேலை செய்யும். யோகாவும் அதைப்போலத்தான். கல்வி, கலாச்சாரம், மதம், தெய்வ நம்பிக்கை என எதையும் சாராத விஞ்ஞானம் அது.

'ஈஷா'விலும் யோகத்தை அப்படித்தான் வழங்குகிறோம். எதனுடனும் தன்னைப் பிணைத்துக் கொள்ளாத காரணத்தினால் தான், யோகா இன்று தன் தனித்துவத்தோடு நிலைத்து நிற்கிறது. நீங்கள் ஆணா, பெண்ணா... கறுப்பா... சிவப்பா... இந்தியனா, அமெரிக்கனா... என யோகா கவலைப்படுவதில்லை. நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், முறையான யோகா மிகச் சரியாகவே வேலை செய்யும்.

உலக சரித்திரத்தில் அது இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை. காலம்காலமாக எண்ணற்கரிய மனிதர்களுக்கு அது வேலை செய்திருக்கிறது. எனக்கும் அது வேலை செய்திருக்கிறது. உங்களுக்கும் அது வேலை செய்யும். யோகா துணையிருந்தால், நீங்கள் விரும்பியதை விரும்பியவாறு உருவாக்கிக் கொள்ள முடியும்.

இன்னும் என்ன யோசனை?