Question: நான் யோக வகுப்பிற்குப் போவது என் கணவருக்குப் பிடிக்காத பட்சத்தில், இதன் மதிப்பை அவருக்கு எப்படி உணர்த்துவது..

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நீங்கள் பயிற்சி செய்வதை உங்கள் கணவர் ஆதரிக்க வேண்டுமெனில், உங்கள் பயிற்சி அவருக்கும் பயனளிப்பதாய் இருக்க வேண்டும். இந்தப் பயிற்சி செய்வதால் உங்களுக்குள் இருக்கும் மாற்றங்கள் அவருக்குக் கண்கூடாகத் தெரியவேண்டும்.

நீங்கள் முன்பைவிட மிக அற்புதமான மனிதனாக ஆகிவிட்டீர்கள் என்பதை அவர் பார்க்கவேண்டும். இதுதான் உங்கள் சாதனா!
இது செய்வதால் நீங்கள் அதிகப் புத்துணர்வோடு, மிக ஆனந்தமாக, மிக அற்புதமாக இருப்பதை அவர் பார்க்கத் துவங்கினால், “என்னது இது? இன்று உன் தியானத்தை நீ இன்னும் செய்யவில்லையா? ம்ம்? உடனே செய்!” என்று சொல்வார். ஆனால், உங்களைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பது உங்கள் குடும்பத்தாரிடம், “இன்றிலிருந்து நான் சமைக்கப் போவதில்லை. உங்களுக்கு இனி உணவு கடலைதான். ஊறவைத்த கடலையில் அனைத்து சத்தும் உள்ளது என்று எனக்கு ஈஷாவில் சொல்லி இருக்கிறார்கள்,” என்பதனால்... இது வேலை செய்யாது.

உங்கள் ஆன்மீகம் உங்கள் துணைவருக்கும் பயனளிக்கும் விதமாக நீங்கள் செயல்படுத்தினால், அவர் தினமும் உங்களைக் கேட்பார்: “நீ காலையில் செய்யவேண்டிய க்ரியாவை செய்து விட்டாயா?” என்று. உங்கள் ஆன்மீகம் உங்கள் துணைவருக்கும் வேலை செய்யவேண்டும். நீங்கள் முன்பைவிட மிக அற்புதமான மனிதனாக ஆகிவிட்டீர்கள் என்பதை அவர் பார்க்கவேண்டும். இதுதான் உங்கள் சாதனா! இது நடந்தால், அதன்பிறகு நீங்கள் தினமும் காலை பயிற்சி செய்வதை அவரே ஊர்ஜிதம் செய்துகொள்வார், இது குடும்பத்திற்கு பிரமாதமாக இருக்கிறதே என்று.

“குடும்பம்” என்பது இருவரோ, நான்கு பேரோ ஒன்றாக இருந்து ஒருவர் மற்றவரின் வளர்ச்சிக்காக, நல்வாழ்விற்காக செயல்படுவது.

ஆனால் ஒரு சில குடும்பங்கள் இவ்வாறு உள்ளன. ஒரு 15 நிமிடத்திற்கு ஒருவர் கண்மூடி அமர்ந்தால், அவரை உலுக்கி எழுப்பி, “ஏன் கண்மூடி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள், புதிதாக எது நடந்தாலும் அதை அவர்கள் எதிர்க்கிறார்கள், ஒவ்வொரு சிறு விஷயம் பற்றியும் அவர்கள் பயத்துடனும் சந்தேகத்துடனும் இருக்கிறார்கள் என்றால், அது குடும்பம் அல்ல. மன்னியுங்கள், நான் கடுமையாகப் பேசுகிறேன். ஆனால் பிரச்சினையை வெளிப்படையாகவே பார்ப்போம். “குடும்பம்” என்பது இருவரோ, நான்கு பேரோ ஒன்றாக இருந்து ஒருவர் மற்றவரின் வளர்ச்சிக்காக, நல்வாழ்விற்காக செயல்படுவது. ஒவ்வொருவரும் மற்றவரின் நலனில் அக்கறை கொண்டிருப்பது. இதுபோன்ற அக்கறை இல்லையென்றால், அதை குடும்பம் என்று சொல்லமுடியாது. இதை நீங்கள் கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.