திருமதி.டான் பாஷா - இல்லத்தரசி, இரண்டு குழந்தைகளுக்கு தாய், தீவிர கத்தோலிக்கர். இவைகளைத் தாண்டி அவர் ஒரு புற்று நோயாளி என்பதும் அவரின் அடையாளமாக இருந்தது. ஆனால் ஈஷா யோகா செய்த பின்பு தன்னை ஆட்கொண்ட புற்று நோயிலிருந்து எப்படி விடுபட்டார் என்பதை இங்கே நெகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார்.

திருமதி.டான் பாஷா:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான்கு வருடங்களுக்கு முன் என் முதல் மகளைப் பெற்றெடுத்தப் பின் எனக்கு தைராய்டு கேன்சர் இருப்பதாகவும் கழுத்து முழுக்க கட்டிகள் இருப்பதாகவும் டாக்டர்கள் கண்டறிந்தனர். மகளுக்கு 2 மாதங்கள் இருந்தபோது என் கழுத்தை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி 29 கட்டிகளை வெளியெடுத்தனர். வெளியெடுத்த பெரிய கட்டியின் அளவோ ஒரு கோல்ஃப் பந்து அளவிற்கு இருந்தது.

நான் என் பயிற்சிகளைச் சரிவர செய்யத் துவங்கி, இரண்டு வாரம் கழித்து இரத்தப் பரிசோதனை செய்தபோதுதான் எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

ஸ்டான்போர்ட் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர், இந்த கேன்சர் மெல்லத்தான் வளருமென்றும் அதன் வளர்ச்சி பற்றி நான் அறியாது இருந்ததைப் பற்றியும் வியந்தார். அறுவை சிகிச்சைக்கு பின் நான் ரேடியேஷன் தெரபிக்கு சென்றேன், ஆனால், சில மாதங்களிலேயே கட்டிகள் மீண்டும் தோன்றத் துவங்கின. இதனால் நான் மீண்டும் மீண்டும் ரேடியேஷனுக்கு செல்ல வேண்டி இருந்தது.

இவ்வருட ஆரம்பத்தில் மீண்டும் புற்றுநோய் தோன்றி, இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு நான் செல்ல நேர்ந்தது. இதுபோல் தொடர்ந்து நிகழ்ந்து வருவதைப் பார்த்த டாக்டர், என் பிரச்சனை மனம் சார்ந்ததாக இருக்கலாம் என யூகித்தார். இதனால், ஏதாவது தியானப் பயிற்சி செய்யுமாறு எனக்கு அறிவுரை வழங்கினார். தியானத்தின் மூலம் என் உடலும் மனமும் தளர்வுறும் என்றார். எப்படியோ, அதே தினம் ஈஷா யோகா வகுப்பு சான்பிரான்சிஸகோவில் எங்கள் வீட்டு அருகாமையில் நிகழ்வதாக எனக்கு மின்னஞ்சல் ஒன்று வந்து சேர்ந்தது.

அந்த வகுப்பிற்குச் சென்றபோது, ஈஷா யோகா என்றால் என்ன, சத்குரு என்பவர் யார் என்றெல்லாம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. நான் தீவிரமான ஒரு கத்தோலிக்கராகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும், எதையோ ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் எனும் உற்சாகத்துடனும் அங்கு சென்றேன். இதன் மூலம் எனக்கு புற்றுநோயிலிருந்து நிவாரணம் கிடைக்காதா என்ற ஆவலும் எனக்குள் மேலோங்கி இருந்தது.

நான் என் பயிற்சிகளைச் சரிவர செய்யத் துவங்கி, இரண்டு வாரம் கழித்து இரத்தப் பரிசோதனை செய்தபோதுதான் எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. தைராய்டு க்ளோபுலின் அளவுகள் அபாரமாக குறைந்திருந்தது. என் உடல்நிலையைப் பொருத்தமட்டில் இந்த க்ளோபுலின் அளவுதான் புற்றுநோயின் வீரியத்தை, அளவை குறித்தது. மேலும், உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசாதாரணமாய் உணர்வதாக டாக்டரிடம் சரியாக சொன்னேன். தன் கைகளை வைத்துப் பார்த்து கட்டிகள் எதையும் உணர முடியவில்லை என்றவர், சோனோகிராம் செய்யச் சொல்லி பரிந்துரைத்தார். சோனோகிராம் முடிவில் 7mm ட்யூமர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் தெள்ளத் தெளிவாக நான் எங்கு அசாதாரணமாக உணர்ந்தேனோ சரியாக அவ்விடத்திலேயே ட்யூமர் கண்டுபிடிக்கப்பட்டது.

தீடீரென என் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். என் உடல் மேல் எனக்கிருக்கும் கவனம், விழிப்புணர்வு இவ்வளவு வளர்ந்துள்ளது குறித்தும் அவர்களுக்கு ஆச்சரியமே. இதனால், சத்குருவைப் பற்றியும் ஈஷா யோகா வகுப்புகள் குறித்தும் என்னிடம் அதிகமாக விசாரித்து தெரிந்து கொண்டனர். ஈஷா யோகா பயிற்சிகள் என் ஆரோக்கியத்தை மட்டும் உயர்த்தவில்லை என் வாழ்வின் தரத்தையே மேம்படுத்தி உள்ளது. அதுமட்டுமா, அளவில்லா சந்தோஷமும் நல்லிணக்கமும் என் வாழ்வை பரிபூரணமாக ஆட்கொண்டுள்ளன.