Question: நமஸ்காரம் சத்குரு. சர்வாங்காசனா தொடரிலுள்ள ஆசனங்கள் செய்தபின் முதுகுத்தண்டை முறுக்கும் ஆசனங்கள் செய்வதன் முக்கியத்துவம் என்ன?

சத்குரு:

உடலை, மேல்பாதி - கீழ்ப்பாதி என்று வகுத்தால், கீழ்ப்பாதி மேல்பாதியை விட அதிக எடையுடன் இருப்பதை கவனிப்பீர்கள். உடலின் மிகப்பெரிய தசைகளும் எலும்புகளும் கீழ்ப்பகுதியில்தான் உள்ளன. முதுகுத்தண்டு என்பது, ஒரு குறிப்பிட்ட அளவு எடையை மட்டுமே தாங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதுகுத்தண்டு சுமக்கும் எடை சிறிதளவு அதிகமானாலும் பிரச்சனைகள் வரும், ஏனென்றால் அது 33 எலும்புகளால் ஆன நுட்பமான ஒரு அமைப்பு.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
முதுகுத்தண்டு என்பது, ஒரு குறிப்பிட்ட அளவு எடையை மட்டுமே தாங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதுகுத்தண்டு சுமக்கும் எடை சிறிதளவு அதிகமானாலும் பிரச்சனைகள் வரும், ஏனென்றால் அது 33 எலும்புகளால் ஆன நுட்பமான ஒரு அமைப்பு.

உங்கள் முதுகுத்தண்டை, காரில் உள்ள சஸ்பென்ஷனுடன் ஒப்பிடலாம். இந்தியாவில் சில உல்லாச கார்களை நீங்கள் கண்டிருந்தால், அவை பாதிநேரம் பழுதுபார்க்கும் இடத்தில்தான் இருக்கும். ஏனென்றால் அவை பல-லிங்க் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும், ஆனால் நம் ரோடுகள் ஒற்றை சஸ்பென்ஷனுக்காக வடிவமைக்கப்பட்டவை. கொஞ்சம் வேகமாகச் சென்று ஒரு திமிலில் ஏறிவிட்டால் இந்த பல-லிங்க் சஸ்பென்ஷன் அமைப்பு சீர்குலைந்து போய்விடும், பிறகு நேராக பழுதுபார்க்கும் இடத்திற்கு போகவேண்டும். அதிக அளவு எதிர்பாராத அழுத்தத்திற்கு அவை வடிவமைக்கப்பட்டவை அல்ல. சஸ்பென்ஷன் பழுதடைந்த பிறகும் உங்களால் தொடர்ந்து கார் ஓட்டிச்செல்ல முடியும், ஆனால் அது சீராகச் செல்லாது. பல லிங்க் கொண்ட சஸ்பென்ஷனின் நோக்கமே வேகமாக திசைமாற்றி பயணிப்பதுதான். அதேபோல உங்கள் முதுகுத்தண்டு என்பது 33 லிங்க் கொண்ட சஸ்பென்ஷனாக செயல்படுகிறது.

எவ்விதமான தலைகீழான ஆசனம் செய்தாலும், முதுகுத்தண்டு அதிகப்படியான எடையை சுமக்க நேர்கிறது. அதனால் தலைகீழான ஆசனம் எதைச் செய்தாலும், முதுகுத்தண்டை வளைத்து அதன் இயல்புநிலைக்கு மீண்டும் கொண்டுவருவது அவசியம். அதனால் சர்வாங்காசனா மற்றும் ஹாலாசனா செய்தபிறகு அர்தமத்ஸ்யாசனா செய்கிறீர்கள், அதில் முதுகுத்தண்டை பின்நோக்கி, அதாவது எதிர்திசையில் வளைக்கிறீர்கள்.

முதலில் எதற்காக இந்த ஆசன நிலைகளை செய்யவேண்டும்? முதுகுத்தண்டிற்கு பயிற்சியளிப்பது மிகவும் முக்கியமானது. இல்லாவிட்டால் அது இறுகிப்போய் எதற்கும் உதவாததாகிவிடும். அதனை நீங்கள் பயிற்சி செய்யாது வைத்திருந்தால், வாழ்க்கையை அனுபவித்துணரும் உங்கள் ஆற்றல் பெரிய அளவில் குறைந்துவிடும்.

எல்லோரும் வாழ்க்கையை அதே கூருணர்வுடன் உணர்வதில்லை. காரின் உதாரணத்திற்கு நாம் திரும்பிச் சென்றால், எல்லா சஸ்பென்ஷனும் அதே கூருணர்வுடன் ரோட்டின் மேடு பள்ளங்களை உணர்வதில்லை. எந்த அளவு கூருணர்வுடன் உங்கள் சஸ்பென்ஷன் இருக்கிறது என்பதே எவ்வளவு நீங்கள் வேகமாக திசைமாற்றி விரும்பும்விதமாக பயணிக்க முடிகிறது என்பதை நிர்ணயிக்கிறது. அது மிகவும் கூருணர்வு கொண்டதாக இருந்தால், அது வேகமாக வளைந்து செல்லும், ஆனால் சிறிய குழிக்குள் இறங்கினாலும் சீர்குலைந்துவிடும். அதனால் முதுகுத்தண்டை கூருணர்வுடன், வளைந்து கொடுக்கும் விதமாக, சீராக, அசைவுடன் இருக்கும் நிலையில் வைத்திருப்பது முக்கியம். நீங்கள் செய்யும் யோகா அனைத்தும் ஏதொவொரு விதத்தில் இந்த நோக்கத்தில்தான் அமைந்திருக்கிறது.

அதனால் முதுகுத்தண்டு சுமக்கும் எடையை அதிகரிக்கும் சர்வாங்காசனா செய்தபிறகு, அதனை நீட்டி மீண்டும் அதன் "சுய"நிலைக்குக் கொண்டுவருவது முக்கியம். அதன் "சுய"நிலை என்று நான் சொல்வதன் காரணம், முதுகுத்தண்டு இல்லாவிட்டால் மனிதராக உணரும் பல விஷயங்களை நீங்கள் உணரமாட்டீர்கள். நீங்கள் கற்பனையிலும் நினைத்திராத விஷயங்களைச் செய்யும்விதமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. முதுகுத்தண்டை பாதுகாப்பாக, பலமாக, கூருணர்வுடன் வைத்துக்கொள்வது ஒரு யோகிக்கு முக்கியமானது, ஏனெனில் அவர் பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் ஒரு பாகமாக உணர விரும்புகிறார்.

ஆசிரியர் குறிப்பு: ஈஷா ஹட யோகா ஸ்கூலில் சத்குரு பேசியதிலிருந்து இது தொகுக்கப்பட்டுள்ளது. அடுத்து நடக்கவிருக்கும் ஹடயோகா நிகழ்ச்சிகள் குறித்து அறிந்துகொள்ள www.ishahathayoga.com இணைய பக்கத்திற்கு செல்லுங்கள்.