இந்த வார சத்குரு ஸ்பாட்டில்... உலக யோகா தினத்தன்று பல்லாயிரம் மக்களுக்கு யோகா கற்றுக்கொடுத்த தியான அன்பர்களுக்கு சத்குரு நன்றி தெரிவிக்கிறார். இத்துடன், பல்வேறு பகுதிகளில் நடந்த யோகா நிகழ்ச்சிகளின் புகைப்படத் தொகுப்பும்... கண்டு மகிழுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

15,000 ஆண்டு கால வரலாற்றுடன், எந்த விதமான மதத் தலைமையோ, உந்துதலோ, தீவிரமான பரிந்துரைகளோ அல்லது மத மாற்றங்களோ இன்றி யோகா வாழ்ந்து செழிப்பாக இருக்கிறது. அதன் பலாபலன்கள் மட்டுமே அது நீடித்து இருப்பதற்கு ஒரே காரணம். வெளியே பார்ப்பதால் மனிதர்களுக்கு தங்கள் நலவாழ்வு ஏற்படாது. உள்நோக்கி பார்ப்பதால் மட்டுமே நலவாழ்வு ஏற்படும் ஏனென்றால் மனிதரின் அனுபவங்கள் உள்ளே மட்டுமே நிகழ்கின்றன. மேலே அல்ல, வெளியே அல்ல, உள்ளே. இதுதான் யோகா தினத்துக்கான செய்தி. யோகாவை உலகுக்கு அறிமுகம் செய்த பாரதத்திற்க்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகெங்கும் உள்ள நமது ஆயிரக்கணக்கான தியான அன்பர்கள், எளிமையான உப-யோகாவை பொதுமக்களுக்கு உலக யோகா தினத்தன்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். தங்களை இந்த முறையில் அர்ப்பணித்துக் கொண்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். யோகா என்பது ஒரு நாள் நிகழ்ச்சி இல்லை. அது நம்மை நாம் நடத்திக் கொள்ளும் முறையில் ஒரு பரிமாண மாறுதல்.

நேற்றைய தினம் (ஜூன் 24) தியானலிங்க பிரதிஷ்டையின் பதினாறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. பதினாறு என்பது யோகக் கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான எண். ஆதியோகி தான் அறிந்ததை பரிமாறும் பொழுது, மனிதன் தன் உச்ச நிலை அடைவதற்கு உரிய வழிமுறைகளை ஆராய்ந்து, 112 வழிகளை விஸ்தரித்தார். ஆனால் தன்னுடைய ஏழு சீடர்களும் இதை கிரகித்துக் கொள்ளத் தேவைப்படும் கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு அவற்றை ஏழு பகுதிகளாகப் பிரித்தார்.

பதினாறு வருடங்களுக்கு முன், நான் உயிருடன் இருப்பேன் என்றே நான் நினைத்துப் பார்க்கவில்லை. 42 அல்லது 43 வயதில் வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் அளித்துக் கொண்டு ......... இப்பொழுது, இங்கே, நான்!

Love & Grace