இதுவரை நாம் வெளியிட்டுள்ள யோகா சம்பந்தமான பல கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த கட்டுரையில், சத்குரு அவர்கள் எது யோகா, எது யோகா இல்லை, யோகா செய்வது எதற்காக, அதன் வரலாறு என்ன, போன்ற பல அம்சங்களோடு, நம்மை சுண்டியிழுக்கும் மகத்தான பல யோகிகளின் வாழ்க்கையை பற்றியும் நறுக்கென்று விவரிக்கிறார்.

எது யோகா, எது யோகா இல்லை

யோகா என்றால் என்ன?

யோகா என்றால் என்னவென்று புரியாமல் பலரும் பல தவறான புரிதலைக் கொண்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. யோகா என்றால் என்னவென்று எளிமையாகவும் தெளிவாகவும் சத்குரு விளக்குகிறார்.

எது யோகா இல்லை?

யோகா என்ற பெயரில் இன்று உலகில் பல கூத்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இதைச் சுற்றி பல கட்டுக்கதைகளும் வலம் வந்து கொண்டிருக்கிறது. ‘எது யோகா? எது யோகா இல்லை’ என்ற தெளிவுரை, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இதோ சத்குருவின் வார்த்தைகளில், உங்களுக்காக…

யோகாவின் சுருக்கமான வரலாறு

ஆதியோகி பாகம் I

இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாக இருந்தவர் ஒருவர். இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர் ஒருவர் – மனிதகுலத்தின் உள்நிலை, வளம்பட செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் – அவர்தான் ஷிவா. பின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகி – முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும், அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய விதத்தையும் கூறுகிறார்…

ஆதியோகி பாகம் 2

பண்டைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான ஆன்மீக நற்பண்பின் காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இந்த அடிப்படையான ஆன்மீக உணர்வு எந்த அளவுக்கு இருந்தது என்றால், இங்கே வாழ்ந்த ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு “முக்தி” என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாகவே உருவானது. இதற்கெல்லாம் முழுமுதல் காரணமாய் அமைந்தவர் ஒருவர் - மனித குலத்தின் உள்நிலை, வளம்பட செதுக்கப்பட்டதற்கு இன்றியமையாதவர் ஒருவர் - அவர்தான் ஷிவா.

பின்வரும் கதையில் சத்குரு அவர்கள் ஆதியோகி - முதலாம் யோகியாம் ஷிவாவை பற்றியும், அவர் சப்தரிஷிகளுக்கு யோக அறிவியலை பரிமாறிய விதத்தையும் கூறுகிறார்…

பதஞ்சலி – நவீன யோகாவின் தந்தை

பதஞ்சலி முனியின் மகத்தான திறமைகளையும் அவர் இந்த உலகிற்கு யோகாவை எளிமைப்படுத்திக் கொடுத்ததை பற்றியும் விளக்குகிறார் சத்குரு…

நீங்களும் புத்தராகலாம்

புத்தரைப் போல மலர்வதற்கு என்ன தேவைப்படுகிறது என்று சத்குரு சொல்கிறார்.

அல்லம மஹாபிரபுவின் ஆற்றல்

வேர்கள் மண்ணை பலமாகப் பற்றிக்கொள்ள நிமிர்ந்து நிற்கும் மரங்கள்தான் கம்பீரம் என்று நினைப்பவர்களால், மரம் வேரோடு விழுந்துவிடும் அபாயம் இருப்பதை உடனே உணரமுடியாது. ஒருவர் பக்தியில் புல்போல் பணிந்திருந்தால் எந்தப் புயலும் அசைக்கமுடியாத ஆற்றல் பெறுவார் என்பதை, தீவிர சிவபக்தரான அல்லம மஹாபிரபுவின் கதை மூலம் சத்குரு விளக்கியுள்ளார்.

பக்தியின் இலக்கணம், அக்கா மஹாதேவி!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதிகாரத்தின் உச்சமான அரசன் தனக்கு கணவனாக அமைந்தால் எந்த பெண்தான் விரும்பாமல் இருப்பாள்?! ஆனால், சிவன் மீது அளப்பரிய பக்திகொண்ட அக்கா மஹாதேவி, அரசனுக்கு இசைந்தாரா? சித்திரக்கதையாக இங்கே அக்கா மஹாதேவியின் சரிதம்!

மனதில் ஒரு கோயில்! – பூசலார் செய்த அற்புதம்!

மனதில் கற்பனை செய்வதெல்லாம் உண்மையாகாதுதான்! ஆனால், பக்தியும் விழிப்புணர்வும் கொண்டு மனதில் ஒரு செயலை செய்யும்போது அது சாத்தியமாகிறது! தான் கட்ட நினைத்த கோயிலை தன் மனதிலேயே அணுவணுவாய் உருவாக்கிய பூசாலரைப் பற்றி அறிந்துகொண்டால், பூசலாரின் மனக்கோயில் கற்பனையல்ல என்பது புரியும்!

ஆடையின்றி சென்ற யோகி… கோபமடைந்த மன்னன்!

மன்னரின் அந்தப்புறம் வழியாக ஆடையின்றி ஒரு யோகி செல்கிறார்; மன்னருக்கு கோபம் வருகிறது! உடல்கடந்த நிலையை எய்திய அந்த யோகியின் உன்னத வரலாறு இரத்தின சுருக்கமாய் உங்களுக்காக!

மெய்ப்பொருள் நாயனார் – உயிரைத் துச்சமாக்கி பக்தியின் உச்சம் தொட்ட கதை

நம் கலாச்சாரத்தில் என்றுமே துறவிகளை கடவுளுக்கு இணையாகப் போற்றினார்கள். நெற்றியில் திருநீற்றுப் பட்டையும் கையில் திருவோடுமாக ஆன்மீகத் தேடுதலிலுள்ள ஒருவர் தங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டால், தங்கள் பிள்ளைகளுக்கு உணவில்லாவிட்டாலும், அவருக்கு உணவளித்து மகிழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மேன்மையும் பக்தியும் பரவிக் கிடந்த காலத்தில் நடந்த கதையிது.

கண்ணப்ப நாயனார் – சிவனுக்காக இருவிழியைக் கொடுத்த கதை!

பக்தி என்பது எந்தவொரு செயலையும் சார்ந்ததன்று, கைகட்டி வாய்பொத்தி சிரம்தாழ்த்தி சொந்தக் கோரிக்கைகளைப் பதிவு செய்வதும், பலன் கிடைக்கப் பணிவிடைகள் செய்வதும் பக்தியன்று. மெய்யான பக்தியில் தன்னையே மறந்து தன் கண்ணையே விருப்பத்துடன் கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதை...

யோகங்கள் பல வகை - புரிந்துகொள்வோம்

நான் எந்த யோகாவ choose பண்றது?

உலகில் பலவிதமான யோக வழிமுறைகள் வந்துவிட்டன. BPக்கு யோகா, டயாபெடிசுக்கு யோகா என அதைப் பற்றின செய்திகள், விளம்பரங்கள் வந்த வண்ணமே உள்ளன. இதில் எதை நான் தேர்ந்தெடுப்பது? சத்குரு தரும் விளக்கம் இங்கே…

கிரியா யோகா – ஒரு விளக்கம்

யோகத்தில் நான்கு பாதைகள் உள்ளன. அவை கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா, பக்தி யோகா. இந்நான்கில், சக்தியைப் பயன்படுத்தி ஒரு நிலையை அடையும் கிரியா யோகாவின் சூட்சுமங்களை சத்குரு இந்தக் கட்டுரையில் விளக்குகிறார்.

பக்தி யோகா உங்களுக்கு பொருந்துமா?

கடவுளை வழிபடுவதும் அவரிடம் கோரிக்கைகள் வைப்பதும் உண்மையான பக்தியில்லை. அப்படியென்றால், “பக்தியின் தன்மை என்ன? யாரெல்லாம் பக்தி யோகா பயிற்சி செய்ய முடியும்?” என்ற கேள்விகள் எழும். இங்கே பக்தி குறித்து சத்குரு விளக்குகிறார்.

ஞானயோகா – புத்திசாலிகளுக்கு மட்டும்!

பக்தி சரி, கிரியா சரி, ஞான யோகா என்றால் என்ன? என்கிறீர்களா விளக்கம் கட்டுரையில் …

கர்ம யோகம் என்றால் என்ன?

கர்ம யோகம் என்றால் என்ன? கர்மாவிற்கும் கர்ம யோகாவிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவற்றை தெளிவாக விளக்குகிறது இக்கட்டுரை…

குண்டலினி யோகா என்றால் என்ன?

குண்டலினி என்றால் என்ன? குண்டலினி யோகா என்றால் என்ன? இந்த சக்திவாய்ந்த ஆன்மீகச் செயல்முறையை பக்தியோடும், முழுமையான பொறுப்புணர்வோடும் எப்படி அணுகுவது...

‘தந்த்ரா’ என்றால் காமம் என்று எடுத்துக்கொள்ளலாமா?

‘தாந்த்ரீகம்’ என்றாலே பலர் இன்று காமம் என்று புரிந்து வைத்துள்ளனர். தாந்த்ரீகம் என்பது உண்மையில் என்ன? தாந்த்ரீகம் எப்போது சாத்தியமாகிறது? இங்கே, அந்த அற்புத தொழில்நுட்பத்தை பற்றி விளக்குகிறார் சத்குரு.

ஹடயோகம் - தெய்வீகத்துடன் இசைவில் இருங்கள்

சூரிய நமஸ்காரம் செய்யும் அற்புதங்கள்

காலையில் எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. தொடர்ச்சியாக செய்யப்படும் 24 யோகாசனங்கள்தான் சூரியநமஸ்காரம். இதை ஏன் செய்ய வேண்டும், இதை செய்வதனால் என்ன பயன் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை…

தடைகளை தகர்க்கும் சூரிய கிரியா…!

ஹட யோகா பள்ளியில் பயில்பவர்களிடம் சூரிய கிரியா பற்றி பேசுகையில் அதன் மகத்துவத்தை முழுமையாக விளக்கும் சத்குரு, சூரிய கிரியா போன்றதொரு பயிற்சி நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிவியல் பூர்வமாக விவரிக்கிறார்.

பாரம்பரிய ஹடயோகா – ஓர் அறிமுகம்!

ஈஷாவின் முதல்நிலை வகுப்புகள் முதல் மேல்நிலை யோகப் பயிற்சிகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு தன்மையில் இருக்கும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் சத்குரு வழங்கியுள்ள 21 நாள் பாரம்பரிய ஹடயோகப் பயிற்சியின் தனித்தன்மைகளும் முக்கியத்துவமும் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்!

யோகாசனம் இவ்வளவு ஈசியா?!

ஆசனம்’ அல்லது ‘யோகாசனம்’ என்ற சொல் பொதுவாக உடலை முறுக்கிக் கொள்வதாகவோ, தலைகீழாக நிற்பதாகவோதான் மக்களால் கருதப்படுகிறது. ஆனால், யோக சூத்திரங்களை வகுத்த பதஞ்சலி முனியோ ‘ஆசனம்’ என்றால் ease-firm என்கிறார்; அதாவது சுகமாகவும் ஸ்திரமாகவும் இருப்பது. ஆசனம் குறித்த இதுபோன்ற இன்னும் சில உண்மைகளை சத்குருவின் மூலம் அறிய தொடர்ந்து படியுங்கள்!

யோகப் பயிற்சிகள் - இவற்றை கவனிப்பது அவசியம்

யோகா செய்யும்போது எப்படிப்பட்ட உடைகளை அணிவது?

ஆன்மீக சாதனா செய்யும்போது அணிவதற்குப் பொருத்தமான துணிகளைப் பற்றியும், அப்போது உடலில் உலோகங்களைத் தவிர்ப்பது பற்றியும் இப்பதிவில் சத்குரு விளக்குகிறார்.

நாம் சாப்பிட வேண்டிய சரியான உணவு எது?

ஈஷா யோகா வகுப்பின் போது எங்களுக்கு இயற்கை உணவுகளின் செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டது. நான் இயற்கை உணவுமுறைக்கு மாறிவிடுவதற்கு ஆவலாய் இருக்கிறேன். எது சரியான காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்...

நமக்கு ஏற்ற உணவு எது?

உலகெங்கும் “உணவுப் பாதுகாப்பு” என்ற கோஷத்தை முன்வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது உலக சுகாதார நிறுவனம். ஆரோக்கியமாக இருக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது இக்கட்டுரை…