யக்ஷா நான்காம் நாளில் ஹிந்துஸ்தானி இசை மழை!

ஹிந்துஸ்தானி இசையில் களைகட்டிய நான்காம் நாள் யக்ஷா… ஒரு பார்வை!

பண்டிட் ராஜன் மிஸ்ரா மற்றும் பண்டிட் சாஜன் மிஸ்ரா அவர்களின், ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. இரு இசை மேதைகளும் ஹிந்துஸ்தானி இசையில் பல தெய்வீக இன்னிசையை வழங்க, மக்கள் இசை மழையில் கரைந்தனர். இவ்விருவரும் இணைந்து ஹிந்துஸ்தானி இசையில் தங்களுக்கென தனி இடம்கொண்டு, சிறந்த ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களாகத் திகழ்கின்றனர். ஜுகல்பந்தி வகை இசையை கேட்பவர் மனம்மயங்கும் வகையில் வழங்குவதில் வல்லவர்களாக விளங்கும் இவர்கள், தங்கள் ஒப்பற்ற இசைத் திறத்தால் இசை மேதைகளாக திகழ்கின்றனர்.

அந்த ஒப்பற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

5ஆம் நாள் திருவிழாவான நாளை (14, பிப்ரவரி) உஸ்தாத் சயிதுதின் தாகர் அவர்களின் த்ருபாத் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை http://mahashivarathri.org/yaksha-2015-live-webstream/ என்ற இணைய முகவரியில் இலவசமாக நேரடியாக கண்டுகளிக்கலாம்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert