தீபங்கள் ஒளிர்ந்திட, ராகங்கள் அதிர்ந்திட யக்ஷா 2013

3 mar 13

திரு டி. என். கிருஷ்ணன் அவர்களது கர்நாடக இசையுடன் இன்று யக்ஷா நிகழ்ச்சி துவங்கியது. யக்ஷா திருவிழாவிற்கு முன் இன்று மாலை தியானலிங்கத்தில் நாத ஆராதனாவில் அவர் வயலின் வாசித்தார்.

உடலின் அதிர்வுகளும் உண்மையின் உருவமும் இதயத்தின் துடிப்பும் சங்கமித்துவிட தியானலிங்க வளாகத்தில் நாத ஆராதனைக்கு அமர்ந்தவருக்கெல்லாம் இன்று தெய்வீகத்தின் விருந்து!
1

நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டு லிங்கபைரவி கோவில் வாசல் இசையை வரவேற்க தயாராக காத்திருந்தது.

84 வயதான திரு டி. என். கிருஷ்ணன் அவர்கள் ராகரவிசந்திரிகா மோக்ஷமு கலதா ராக சரமதி போன்ற ராகங்களை இசைத்தார்.
2

பல்வேறு சப்தங்களை சரியான விகிதத்தில் கலந்து உடலின் அதிர்வுகளோடு சங்கமித்து உயிரைத் தொடும் இந்த விஞ்ஞானம் இன்று லிங்கபைரவி வாசலில் அமர்ந்திருந்தவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.
3
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert