1994ம் வருடம் ஈஷாவில் நடந்த 90 நாட்கள் ஹோல்நெஸ் வகுப்பின் நினைவுகளை பசுமையாக தாங்கி வருகிறது சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இந்த "ஹோல்நெஸ்" இசைப் பதிவு...

ஹோல்நெஸ் - சில தீவிர சாதகர்களைக் கொண்டு சத்குருவால் ஈஷா யோக மையத்தில் 1994 ம் ஆண்டு நடத்தப்பட்ட வகுப்பு. அதன் பின் 7 நாட்கள் நடந்த ஈஷாவின் அறிமுக வகுப்பானது, ஹோல்நெஸ் என்ற பெயர் தாங்கி சத்குருவால் நடத்தப்பட்டது.

ஹோல்நெஸ் என்ற இந்த இசைப் பதிவானது, அந்த வகுப்புகளின் முதல் நாளில் சவுன்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரால் இசைக்கப்படும். பங்கேற்பாளர்கள் சத்குருவின் முன் அமர்ந்து வகுப்பையும் அதில் உள்ள செயல்முறைகளையும் தங்குதடையின்றி கிரகித்துக் கொள்ளும் ஒரு சூழ்நிலையை உருவாக்கவே இது இசைக்கப்பட்டு வந்தது.

அதன் பின் "ஹோல்நெஸ்" என்ற இந்த வார்த்தை இத்தனை வருடங்கள் நிலைத்து வருகிறது. இத்தனை வருடங்களில், இந்த இசை பல மாற்றங்களையும், திருத்தங்களையும் அடைந்து நிற்கிறது. பல இசைக் கலைஞர்களும் தங்கள் வல்லமையை இந்த பாடலுக்கு சேர்த்து மெருகேற்றியுள்ளார்கள். இங்கே இருக்கும் இந்த இசை சத்குரு முன்னிலையில் வாசிக்கப்பட்ட சமீபத்திய பதிவாகும். கேட்டு மகிழுங்கள்...!


ஆசிரியர் : சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க Sounds Of Isha YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.