சனிக்கிழமை இரவுகளில் நிரம்பி வழியாத பார்ட்டி அரங்குகளையும் டிஸ்கோதேக்குகளையும் பார்ப்பது கடினம். வார நாட்களில் அடக்கி வைக்கப்படும் மன அழுத்தங்கள், மதுபான நுரைகளாக பீறிட்டு கிளம்புகின்றன வார இறுதியில். இதுபோன்ற ஒரு வடிகால் இல்லையென்றல் பலர் மனநிலை பாதிக்கப்பட்டுவிடக்கூடும் என்கிறார்கள். மனிதன் ரிலாக்ஸ் ஆவதற்கு இதுதான் சிறந்த வழியா? இதற்கு மாற்று வழி உண்டா? சத்குருவிடம் கேட்டபோது...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது, மனநோய் காப்பகத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் வெகு சிலரைத் தான். ஆனால் உண்மை என்னவெனில், இன்று மனிதர்களில் 90% பேர் மனநோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். என்ன, அளவு தான் வித்தியாசப் படுகிறது. சிலருக்கு அந்த மனநோய் கையாளக் கூடிய அளவில் இருக்கிறது. சிலருக்கு அவர்கள் கைமீறிப் போய்விடுகிறது.

மனநோய் இருந்தால்...

உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சில நேரங்களில் ஆஸ்துமாவை உங்களால்

உடலளவிலும், மனதளவிலும், உணர்வளவிலும் உங்களுக்கு ஒரு வடிகால் தேவைப் படுகிறது. இதற்காகத்தான் மதுபானக் கடைகள், பொழுதுபோக்கு சங்கங்கள், டிஸ்கொதேக்குகள் என்று பல வழிகளை நீங்கள் இன்று உருவாக்கி இருக்கிறீர்கள்.

சமாளிக்க முடிகிறது. மருந்து, மாத்திரை சாப்பிட்டு சமாளித்துக் கொள்கிறீர்கள். அப்பொழுதெல்லாம் உங்களை நீங்கள் நோயாளியாகக் கருதுவதில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த நோய் அதிகமாகிறது. உங்களால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. நிலைமை கை மீறிப் போகிறது. உடனே மருத்துவமனைக்கு சென்றாக வேண்டும், இல்லையெனில் உயிர்போய்விடும் என்றநிலை உருவாகிறது. அப்போதுதான் உங்களை நீங்கள் நோயாளி என்று கருதுகிறீர்கள். அதற்காக மற்ற நாட்களில் உங்களுக்கு நோயில்லை என்று அர்த்தமில்லை. நோயோடு இருந்தீர்கள். ஆனால் அது உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.

இதுபோல் தான் மனநோயும். பலர் அதால் பாதிக்கப் பட்டிருந்தாலும், அது கட்டுப்படுத்தக் கூடிய அளவில் இருக்கிறது. சில நேரங்களில் அது கைமீறி போவது போல் இருந்தாலும், மருந்து மாத்திரைகளின் உதவியுடனோ, அல்லது தானாகவோ கொஞ்சம் நேரத்தில் அது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறது.

எது பைத்தியக்காரத் தனம்?

'பைத்தியம்' என்ற நிலைக்கு சென்றுவிட்ட ஒருவர், தான் ஒரு தூணோடு பிணைக்கப் பட்டிருப்பதாக நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரை சங்கிலியோ, கயிறோ பயன்படுத்தி, நாம் கட்டி வைக்கவில்லை, ஆனால் தான் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக அவர் நம்புகிறார். தான் கட்டி வைக்கப் பட்டிருப்பதாக நம்பும் அவர், அதை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பார். 'உங்களை யாரும் கட்டி வைக்கவில்லை' என்று நீங்கள் எவ்வளவு சொன்னாலும் அதை அவர் கேட்க மாட்டார். இது போல்தான் எல்லோரும் தங்களை ஏதோ ஒன்று பிணைத்துக் கொண்டிருக்கிறது என்று நம்பி, வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுவும் பைத்தியக்காரத்தனம் தானே!

உடலளவிலும், மனதளவிலும், உணர்வளவிலும் உங்களுக்கு ஒரு வடிகால் தேவைப் படுகிறது. இதற்காகத்தான் மதுபானக் கடைகள், பொழுதுபோக்கு சங்கங்கள், டிஸ்கொதேக்குகள் என்று பல வழிகளை நீங்கள் இன்று உருவாக்கி இருக்கிறீர்கள். உங்களுக்குள் அடக்கி, ஒடுக்கி, தேக்கி வைக்கப் பட்டிருக்கும் பைத்தியக்காரத் தனங்களை எங்கேனும் வெளியேற்ற வேண்டுமே!

சனிக்கிழமைகளில்...

இன்றைய டிஸ்கோதேக்குகளில் மூச்சுவிடக் கூட முடிவதில்லை. அவ்வளவு வேர்வையும், புகையும் நிரம்பியிருக்கிறது. அங்கே சுதந்திரமாய் நடனம் ஆடக்கூட இடமிருக்காது. யாராவது இடித்துக் கொண்டே இருப்பார்கள். இருந்தாலும் மனதில் இருக்கும் அழுத்தத்தை இறக்கிவைக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி ஒரு வடிகால் தேடிக் கொள்ளவில்லை என்றால் பைத்தியமே பிடித்திடும் போலிருக்கிறது. எனவே அந்தந்த வாரம் சேகரிக்கும் பைத்தியக்காரத் தனங்களை சனிக்கிழமைகளில் எரிக்கிறீர்கள். மீண்டும் அடுத்த வாரம் இது சேரத் துவங்குகிறது. அதை எரிப்பதற்கு அடுத்த சனிக்கிழமை இரவை எதிர்நோக்கி காத்திருக்கிறீர்கள்.

மாற்று வழி என்ன?

இதை இப்படி சேர்த்து சேர்த்து எரிக்க வேண்டும் என்றில்லை. இதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது. அது உங்கள் பைத்தியக்காரத் தனங்களை முழுமையாக வீசிவிட்டு நடைபோடுகிற முறை. தியானம் இதைத்தான் செய்கிறது. இப்போது நடனம் ஆடினால், அது உங்கள் மகிழ்ச்சிக்காக செய்வீர்கள். எதையோ எரித்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு அல்ல.