இன்றைய தரிசன நேரத்தில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகப் பயிற்சிகளையும், யோகா குறித்த விழிப்புணர்வையும் உலகம் முழுவதற்கும் எடுத்துச் செல்ல கருவியாக இருந்த அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் சத்குரு.

6:23

ஆளையே தூக்கும் காற்று சற்று மென்மையாக வருட, அது அலையவிடும் மேகங்கள் பயணத்தைத் தொடர, அலைபாயும் உள்ளங்களை அன்பாலும் அருளாலும் ஆட்கொள்ள சத்குரு வந்தமர்ந்தார்.

6:29

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சர்வதேச யோகா தினத்திற்கு அயராது உழைத்த ஆசிரியர்கள், ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள், மற்றும் பலருக்கும் தன் வாழ்த்துக்களை சத்குரு தெரிவித்தார்.

ஆதியோகி 112 யோகமுறைகளை வழங்கி சப்தரிஷிகளை அனைவருக்கும் பரிமாறச் சொன்னபோது, இவ்வளவு பரவலாக இவற்றை அனைவருக்கும் வழங்கவேண்டுமா என்று கேட்டனர். "அனைவருக்கும் வழங்குவது முக்கியமில்லை, விதைகளை வீரியம் குறையாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். பருவகாலம் சாதகமாக இருக்கும்போது அது முளைவிடும். வருங்காலத்தில் உலகம் முழுவதும் இந்த யோக விஞ்ஞானத்தை நாடும்" என்றார் ஆதியோகி. அந்த காலம் நெருங்கிவிட்டது.

6:38

நாம் நல்வாழ்வை வெளியேயும் மேலேயும் தேடி உலகையே அழிக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டோம். உலகில் இருக்கும் முட்டாள்தனமான நம்பிக்கைகளை உடைக்க பெரிதாக எதுவும் தேவையில்லை, இரண்டே கேள்விகள் போதும். அவற்றின் அடிப்படையைப் பற்றி இரண்டே கேள்விகள் கேட்டால் எல்லாம் தவிடுபொடியாகிவிடும்.

மதத்தின் பெயரில் பல முட்டாள்தனங்கள் உலகில் நிகழ்கின்றன, இவற்றின் நிலை பார்த்தால் உலகை மீட்டெடுக்க முடியாதபடி தோன்றலாம். ஆனால் இந்த அக்கிரமங்கள் அதிகரிக்க அதிகரிக்க, மனிதர்கள் புத்தி சீக்கிரம் வேலை செய்யத் துவங்கும். அதிக எண்ணிக்கையில் மக்கள் உண்மையை நாடுவார்கள். யோகப் பாதையை அனைவரும் நாடுவார்கள். நம் வேலை, இந்த விதையை வீரியம் குறையாமல் வலுவாக வைத்துக்கொள்வது. இதை பார்த்துக்கொண்டால் நிச்சயம் விதை முளைவிடும். மனித நல்வாழ்வு வெறும் கனவாக இல்லாமல் நனவாக வேண்டுமென்றால் இது மிக மிக முக்கியம்.

6:55

நான் செல்லும் இடமெல்லாம், "இந்த சர்வதேச யோகா தினத்தில் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் செயல்பாட்டில் தனித்துவமாகத் தெரிந்தார்கள்." என்று என்னிடம் சொல்கிறார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

7:20

சில கேள்விகளுக்கு சுருக்கமாக பதிலளித்துவிட்டு, சம்ஸ்க்ருதியில் புதிதாய் சேர்ந்திருக்கும் 24 குழந்தைகளுக்கு வஸ்த்ரம் வழங்கி ஆசிர்வதித்தார் சத்குரு.

7:35

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தில்லியில் அற்புதமான நிகழ்ச்சி ஒன்றை அரங்கேற்றிய சம்ஸ்க்ருதி குழந்தைகளுக்கும், சென்னையிலும் கோவையிலும் தங்கள் நிகழ்ச்சியால் பொதுமக்கள் கவனத்தைக் கவர்ந்த ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகளுக்கும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துவிட்டு விடைபெற்றார் சத்குரு.