வயலின் இசையில் 6ஆம் நாள் யக்ஷா!

6ஆம் நாள் யக்ஷா கொண்டாட்டம்… சில தகவல்கள்!

ஈஷா யோகா மையத்தில் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இசை மற்றும் நாட்டியத் திருவிழாவான ‘யக்ஷா’ திருவிழாவின் இன்றைய ஆறாம் நாள் கொண்டாட்டத்தில், திரு.கணேஷ் மற்றும் திரு.குமரேஷ் இணைந்து வழங்கிய வயலின் இசை நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

திரு.கணேஷ் மற்றும் திரு.குமரேஷ் இருவரும் இணைந்து வயலின் இசையில் மக்களை திளைக்கச் செய்தனர். இளைய தலைமுறை வயலினிசைக் கலைஞர்களில் புகழ்பெற்ற கலைஞர்களாகத் திகழும் சகோதரர்கள் திரு. திரு.கணேஷ் மற்றும் திரு.குமரேஷ் இருவரும் சாஸ்த்திரிய சங்கீதத்தில் தங்கள் இசைச் சேவையை ஆற்றி வருகின்றனர். எண்ணற்ற மேடைகளில் தங்கள் இசைத் திறனை வெளிப்படுத்தியுள்ள இந்த சகோதரர்கள், அரிதாக வெளிப்படுத்தப்படும் பல்வேறு வித பாணிகளில் தங்கள் இசைத் திறனை வழங்குவதில் வல்லவர்களாவர்.

7ஆம் நாள் யக்ஷா திருவிழாவான நாளை விதூஷி பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் கர்நாடக வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியை http://mahashivarathri.org/yaksha-2015-live-webstream/ என்ற இணைய முகவரியில் இலவசமாக நேரடியாக கண்டுகளிக்கலாம்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert