ஈஷா ருசி

வெண்டைக்காய் - அடிக்கடி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றுதான். ஆனாலும் இப்படி கொஸ்து செய்து சாப்பிட்டுப் பாருங்கள்... இதற்கு ருசியே தனிதான்.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 250 கிராம்
கடலைப்பருப்பு - 20 கிராம்
துவரம்பருப்பு - 20 கிராம்
கொத்துமல்லி விதை - 20 கிராம்
புளி - 25 கிராம்
காய்ந்த மிளகாய் - 8
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

  • வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, கொத்தமல்லி, மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு சிறிதளவு கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து, பிறகு நறுக்கிய வெண்டைக்காயினை போட்டு நன்றாக வதக்கவும்.
  • புளி கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.
  • தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும். இதை இட்லிக்கும், தோசைக்கும் சைடிஸாக சாப்பிடலாம், சுவையானது, சத்தானது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.