வெள்ளரியில் செய்யலாம் வித்தியாச ரெசிபி!

வெள்ளரியில் செய்யலாம் வித்தியாச ரெசிபி! , vellariyil seyyalam vithiyasa recipe

ஈஷா ருசி

சாத்தூர் வெள்ளரியை திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தபடி வாங்கி அப்படியே சாப்பிடும் சுவையே தனிதான்! அதுபோல் இந்த ‘வெள்ளிரி சாட்’ ரெசிபியின் ருசியும் ஒரு புதிய சுவைதான்! முயற்சித்துப் பாருங்கள்!

வெள்ளரி சாட்

தேவையான பொருட்கள்:

வெள்ளரி – 1
கேரட் – 1
கெட்டி தயிர் – அரை கப்
சாட் மசாலா – ஒன்றரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
ஓமப்பொடி (அ) மிக்ஸர் – அலங்கரிக்க
புதினா இலைகள் – 1 கைப்பிடி
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

வெள்ளரிக்காயை தோல் நீக்கி வட்டமாக நறுக்கவும். தயிரை ஒரு மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிடவும். இரண்டு மணிநேரத்தில் தயிரில் உள்ள நீர் வடிந்து கெட்டியாகிவிடும். வடிகட்டிய கெட்டி தயிரில் உப்பு, சாட் மசாலா, சீரகத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும். வெள்ளரித் துண்டின் மேல் ஒரு டீஸ்பூன் தயிர் கலவையைத் தடவி, அதன் மேல் துருவிய கேரட் மற்றும் ஓமப்பொடியைத் தூவ வேண்டும். அதன்மேல் புதினா இலையை வைத்துப் பரிமாறவும்.
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert