வாழ்க்கையில் வெற்றிபெறுவது என்பது பொருளாதார ரீதியிலேயே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது! உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி பெறுவதென்றால் என்ன என்பதையும், அப்படி வெற்றிபெற்றவர்கள் மரணத்தை எப்படி எதிர்கொள்கொள்வார்கள் என்பதையும் சத்குரு கூறுகிறார்.

சத்குரு:

வாழ்க்கையில் வெற்றி பெற்றிருந்தால் கட்டாயமாக மரணத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் வாழ்க்கையின் வெற்றி என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? உங்கள் தொழிலிலேயோ, உங்கள் வேலையிலேயோ உங்கள் வணிகத்திலேயோ வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அவையெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக ஆகாது. அதனால்தான் மரணம் வரும்போது, "இன்னும் தொடங்கவே இல்லையே, அதற்குள் மரணம் வந்துவிட்டதே" என்று கஷ்டப்படுகிறார்கள். வாழ்க்கையிலேயே வெற்றி பெற்றிருந்தால் மரணத்தைச் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடியும்.

உங்கள் தொழிலிலேயோ, உங்கள் வேலையிலேயோ உங்கள் வணிகத்திலேயோ வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அவையெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக ஆகாது.

வாழ்க்கையில் வெற்றி பெறுவதென்றால் என்ன என்பதை நாம் வரையறை செய்ய வேண்டும். பணம் சம்பாதித்தால் வெற்றி என்கிறீர்கள். நான்கு பேர் மதிக்கும்படி வாழ்ந்தால் வெற்றி என்று நினைக்கிறீர்கள். அதுவல்ல வெற்றி. எப்போது உங்கள் உள்தன்மையில் ஒரு முழுமை வருகிறதோ, எப்போது வெளியே நடக்கிற சம்பவங்களால் உள்தன்மையில் எந்தப் பாதிப்பும் இல்லாத நிலை ஏற்படுகிறதோ, அதுதான் வெற்றி. அப்படியொரு வெற்றி வந்துவிட்டால் அந்த மனிதனுக்கு மரணம் என்பது ஒரு விஷயமே இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.