வருடம் ஒன்று போனது…

புது வருடத்திற்காக எடுக்க வேண்டிய தீர்வுகள் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களா? புது வருடம் பிறக்கும் இவ்வேளையில் எடுக்க வேண்டிய முடிவுகள் மட்டுமல்ல, நாம் கடந்து வந்த பாதையையும், நம் பயணத்தையும் சற்றே கவனித்துப் பார்ப்பது எத்தனை அவசியம் என்பதை இந்த வார சத்குரு ஸ்பாட் சத்குருவிற்கே உரிய நேர்த்தியுடன் நமக்கு உணர்த்துகிறது. படித்து மகிழுங்கள்!

வருடம் ஒன்று போனது…

கடந்து சென்ற வருடத்தில்…

வாழ்க்கை மாற்றுவழியில் உங்களை கடந்துசெல்ல அனுமதித்தீர்களா?

உங்கள் உயிரில் துடித்தெழும் ஆனந்தம்
வெளிப்பட வாய்ப்பளித்தீர்களா? அல்லது
நொண்டிச்சாக்கு சொல்லி தப்பிக்க
காரணங்கள் கண்டறிந்தீர்களா?

உங்கள் இதயத்தில் உறையும் அன்பு,
உலகை கதகதப்பாக்க விட்டீர்களா? அல்லது
சோர்விலே நலிவுற்றிருக்க
தக்க காரணம் தேடிக் கொண்டிருந்தீர்களா?

தினசரி உங்களைச் சுற்றி நடைபெறுபவற்றில்
அற்புதத்தை உணர்ந்தீர்களா? அல்லது
அவற்றில் குற்றங்களை மட்டுமே கண்டுபிடித்து,
இறுதிதீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறீர்களா?

காதலித்தீர்களா, சிரித்தீர்களா, கண்ணீர் வடித்தீர்களா? அல்லது
வாழ்க்கை உங்களைத் தொட அனுமதி தராது இருந்தீர்களா?

இதோ… ஆண்டுகள் கடந்தோடிக் கொண்டிருக்கின்றன…

FB Image_Tamil_ver1
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert