சென்ற வருடம் மஹாசிவராத்திரி இரவன்று ஈஷா மையத்தில் வெளியிடப்பட்ட இசைத்தொகுபான 'ஈஷானா', 2012ன் சிறந்த இசைத் தொகுப்பு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 2013 ஜனவரி 19ம் தேதியன்று, பாப் இசைப் பாடகி ஸ்மித்தா அவர்கள், 'மா' இசை விருதுகளில் இவ்விருதினைப் பெற்றார்.

சினிமா சாராத ஒரு இசைத்தொகுப்பு, இவ்விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை.
திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் ஸ்மிதாவிற்கு இவ்விருதினை வழங்கினார். தெலுங்கு இசை வரலாற்றில், சினிமா சாராத ஒரு இசைத்தொகுப்பு, இவ்விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை.

தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உட்பட ஆறு மொழிகளில் திரைப்படப் பின்னணிப் பாடல்களைப் பாடியுள்ளார் ஸ்மித்தா. பாப் இசைப் பாடல்களுக்குப் பேர்பெற்ற ஸ்மித்தா, தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்தும் உள்ளார்.

'ஈஷானா' இசைத்தொகுப்பை ஸ்மித்தா அவர்கள், ஈஷாவிற்கும் சத்குருவிற்கும் அர்ப்பணிப்பாக வழங்கினார். ஆறு பாடல்களும் இரண்டு படக்காட்சிகளும் கொண்ட இவ்விசைத் தொகுப்பிற்கு நிஹல் அவர்கள் இசையமைத்துள்ளார்.

படக்காட்சிகளை தருண் கிவல் மற்றும் சமீர் ரெட்டி ஆகியோர் முறையே தனித்தனியாக இயக்கியுள்ளனர். ஈஷானா இசைத்தொகுப்பின் விற்பனையின் மூலம் கிடைக்கும் பணம், ஈஷா துவங்கியுள்ள பல்வேறு சமூகநலக் காரியங்களுக்காகப் போய்ச்சேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இசைத் தொகுப்பிலிருந்து சுவையான இரண்டு வீடியோ தொகுப்புகள் உங்களுக்காக...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.