ஈஷா யோக மையத்தில் வரும் 13ம் தேதி மஹாசிவராத்திரி நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. உலகப்பிரசித்தி பெற்ற இந்த நிகழ்ச்சியை காண உலகம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொள்ளவுள்ளனர். சத்குருவின் சத்சங்கம், நள்ளிரவு தியானம், இசை, நாட்டியம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் என நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட வாழ்க்கை சூழலிலிருந்து வரவிருக்கும் மக்களை வரவேற்கும் பணியில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சத்குரு அவர்கள் அனைவரையும் மஹாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அழைக்கும்படி கூறியிருந்தார், அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, தன்னார்வத் தொண்டர்கள் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ஈசனின் இரவான மஹாசிவராத்திரிக்கு அழைப்பிதழோடு அழைப்பு விடுத்து வருகின்றனர். வீடுகள், கடைகள், அலுவலகங்கள் என பல இடங்களுக்கு செல்லும் இவர்கள் பொது மக்களை மஹாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அழைக்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஈஷா யோக மையத்தின் அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் வீடு வீடாக சென்று அவர்களை மஹாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அழைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வீட்டின் கதவை தட்டி அழைக்கும் அவர்களில் பெரும்பாலானவருக்கு தமிழ் தெரியாது. "அன்பிற்கு மொழி முக்கியமில்லை" என்ற கோட்பாடிற்கு இணங்க சத்குரு அவர்கள் கூறிய வார்த்தையான "வணக்கம், மஹாசிவராத்ரிக்கு குடும்பத்துடன் வாங்க" என்ற ஒற்றை வரியை கூறி அவர்களை மஹாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு புன்முறுவலோடு அழைக்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தன்னார்வத்தொண்டு என்றால் தன்னலம் இல்லாமல் தொண்டாற்றுவது, இந்த தன்னார்வத்தொண்டர்களின் அன்பு அழைப்பை மறுக்க இயலாமல் ஒவ்வொரு ஆண்டும் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் ஈசனின் இரவான மஹாசிவாராத்திரி நிகழ்ச்சிக்கு வந்திருந்து முழுஇரவும் பங்கேற்று ஈசனின் அருள் பெற்று செல்கின்றனர்.


குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018
நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.