பள்ளியில் ஆசிரியர்களின் பிள்ளைகள் சரிவர படிக்காமல் இருந்தால், "வாத்தியாரின் பிள்ளை எப்போதும் மக்காகத்தான் இருப்பான்" என்ற அடைமொழி வழக்கத்தில் உள்ளது. இது உண்மைதானா அல்லது நம் மனதின் வக்கிரமா? இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்?

சத்குரு:

கண்டிப்பாக ஆசிரியர்களின் கட்டுப்பாடுகளைத் தாங்கமுடியாதவர்கள் வக்கிரமாகச் சொல்லி வைத்தது இந்த மொழி.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நான் எழுதியபோது, அது மாங்காய் சீசன். அதனால், அரைமணி நேரத்தில் எவ்வளவு விரைவாக எழுத முடியுமோ, அவ்வளவு விரைவாக எழுதிக் கொடுத்துவிட்டு நானும் என் நண்பனும் புறப்பட்டு விடுவோம்.

எனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து எழுதியது என் தலைமை ஆசிரியரின் மகள்.

அன்பாக நடந்து கொள்ளத் தெரியாத ஆசிரியர்கள் மீது, பொதுவாக மாணவர்களுக்கு ஏற்படும் வெறுப்பின் வெளிப்பாடுதான் 'வாத்தியார் பிள்ளை மக்கு' என்ற எண்ணம்.

அவளோ, அந்த நேரத்திலேயே கூடுதல் தாள்கள் கேட்டு வாங்குவாள். முப்பது நிமிடத்தில் அவள் எப்படி பதினெட்டு தாள்களை எழுதி முடிக்கிறாள் என்று ஆச்சரியமாயிருக்கும். அவள் தேர்வுத் தாளைத் திருத்தும் யாரும் அடுத்து என் தேர்வுத் தாளைப் பார்த்தால், அவ்வளவுதான் என்று நினைத்தேன்.

ஆனால், தேர்வு முடிவுகள் ஆச்சரியம் தந்தன.

நான் நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி இருந்தேன். அவளோ மோசமாகத் தோற்றிருந்தாள்.

பள்ளிக்கூட விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை என்று என் தலைமை ஆசிரியர் என்னைப் பலமுறை சஸ்பெண்ட் செய்ததுண்டு. அதனால், அவருடைய மகள் தேர்வாகாதபோது, எனக்கு அந்த வயதில் வக்கிரமான மகிழ்ச்சிகூட வந்தது. இன்றைக்கு நினைத்தால், அது எவ்வளவு கேவலமான மனநிலை என்று தோன்றுகிறது.

அன்பாக நடந்து கொள்ளத் தெரியாத ஆசிரியர்கள் மீது, பொதுவாக மாணவர்களுக்கு ஏற்படும் வெறுப்பின் வெளிப்பாடுதான் 'வாத்தியார் பிள்ளை மக்கு' என்ற எண்ணம்.

ஆசிரியப்பணி என்பது இந்த பூமியில் மிகவும் மகத்தான பணி. நாளைய உலகையே அமைக்கும் பணி. மிக்க பொறுப்பு உணர்வோடு அணுக வேண்டிய பணி.

இன்று, வேறு வேலை கிடைக்காமல், இந்த உன்னதப் பணிக்கு வந்து ஆசிரியர்களாகி விட்டவர்கள் அதிகமாக உள்ளனர். மற்றபடி, அடுத்த தலைமுறையை உருவாக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு குருவாக செயல்படுபவர்கள் குறித்து, மாணவர்களுக்கு இப்படியொரு எண்ணம் வராது.

DFID - UK Department for International Development1 @ flickr