தும்கி சரி, அதென்ன தும்ரி? ஸ்பெலிங் மிஸ்டேக் என்பவரா நீங்கள்? கண்டிப்பாக நீங்கள் இதனை படிக்க வேண்டும்...

இன்றைய யக்ஷா நிகழ்வு துவங்கும் முன் ஏக்தாரா எனப்படும் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டது.
2

சத்குருவும் இந்துஸ்தானி பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அவர்களும் கலந்துரையாடிய உரையாடல் நிறைந்த இந்த வீடியோ ஆல்பத்தை பிரபல இசை மேதை பண்டிட் விஜய் கிஜ்ஜுலு வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து சுப்ரா குஹா அவர்களின் இந்துஸ்தானி இசை விருந்து துவங்கியது.
3

தன் குழந்தைப் பருவத்திலிருந்தே சங்கீத்தில் தனித்திறமை கொண்டவராக இருந்த இவர் பின்னர் சங்கீத ஆராய்ச்சி அகாடமியில் ஒரு குருவாக சேர்ந்தார். சுமார் 11 வருடங்கள் அவர் அங்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தார். மிகவும் கடினமான மற்றும் நுட்பமான தும்ரி எனப்படும் பாணியில் பாடப்படும் பாடலை பாடுவதில் வல்லவர் இவர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்த தும்ரியை பாடத்தெரிந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு, உலகில் மிகச் சிலரே உள்ளனர்.

“இவர் சாயனத் ராகத்தில் ரூபக தாளத்தில் முதல் பாடலை துவங்கினார்,” என்றால் இது பலருக்கும் புரியாமல் இருக்கலாம்.

யக்ஷாவின் பார்வையாளர்கள் அனைவருக்கும் பாரம்பரிய இசை தெரியும் என்று சொல்ல முடியாது.

இதை பற்றி சத்குரு பேசும் போது “என் குழந்தை பருவத்தில் நான் வேகமான அதிர்வுகள் கொண்ட மேற்கத்திய இசையை மட்டுமே கேட்பது வழக்கம், எப்போது நான் தியானம் செய்ய துவங்கினேனோ அப்போதிலிருந்து இந்திய பாரம்பரிய இசையை ரசிக்கத் துவங்கினேன்,” என்று கூறுகிறார்.

இசை தன் உள்நிலையில் ஏற்படுத்தும் மாற்றத்தினை அனுபவப்பூர்வமாக உணர்ந்த நம் தியான அன்பர்கள் இந்திய பாரம்பரிய இசையின் அதிர்வுகளை உள்வாங்கிக் கொண்டு ஆனந்தத்தில் திளைக்கின்றனர்.

1

பின்னர் அவர் ஆதிசிவ சங்கரா எனப்படும் சிவனைப் போற்றி பாடப்படும் பாடலை பாடியதில் எங்கும் சிவமயம் பரவ பின்னர் அவர் தனக்கே உரிய பாணியில் ‘ஆதார் பந்த்’ எனப்படும் தும்ரியை துவங்கினார்.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த தும்ரி முழுக்க உதடுகள் ஒன்றை ஒன்று தொடாமல் பாடப்படும். இந்த அதிசய இசைக்கலைஞரின் திறமை கண்டு பார்வையாளர்கள் அவர்கள் அன்பை கரவொலிகளாக வெளிப்படுத்தினர்.

நாட்கள் செல்ல, செல்ல யக்ஷாவின் பரபரப்பு ஏறிக் கொண்டு தான் செல்கிறது. இன்னும் ஒரே ஒருநாள் மட்டுமே பாக்கி. நிச்சயமாக தினமும் யக்ஷாவை கண்டு களிப்பவர்கள் இன்னுமொரு நாளில் இதனை மிஸ் செய்யத்தான் போகிறார்கள். இதுவரையில் யக்ஷா நிகழச்சியைக் தவறவிட்டவர்கள், கீழே உள்ள லிங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.

மற்றுமொரு யக்ஷாவில் நாளையும் இசைவோம், இணைவோம்!


யக்ஷா நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பின் மூலம் உங்கள் கணினித் திரையில் கண்டு களிக்க கீழே உள்ள லிங்க்கில் பதிவு செய்து கொள்ளவும்.

Yaksha Live