அதிசயக் குழந்தை என்றும், தேவதூதர் என்றும் இயேசு கிறிஸ்துவை போற்றுகிறோம். உண்மையில் இயேசு ஒரு அதிசயக் குழந்தையா? அவர் பிறப்பில் இருக்கும் ரகசியம் என்ன?

Question: சத்குரு, இயேசு கடவுளின் குழந்தை என்று சொல்கிறார்களே?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இயேசு 2000 வருடங்களுக்கு முன்பு இருந்தவர். இப்போது அவருடைய வாழ்க்கையை ஆராய்வதில் என்ன இருக்கிறது? இயேசு பிரசித்தி பெற்றதன் காரணமே அவர் எப்படி வாழ்ந்தார் என்பதுதான், அவர் எப்படிப் பிறந்தார் என்பதாலோ அல்லது அவர் எப்படி இறந்தார் என்பதாலோ அல்ல! அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அவர் எப்படிப் பிறந்திருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் அவருடைய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நாம் இழக்கிறோம். இது ஒரு பெரிய தவறு என்று நான் நினைக்கிறேன்.

அவருடைய பிறப்பை புதுமையான நிகழ்வாகக் கூறுவதால் அவர் எதை போதித்தாரோ, அது நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கானது அல்ல என்ற முடிவிற்கு மக்கள் வந்துவிட முடியும். அவருடைய வாழ்க்கையே மெய்யுணர்வுத் தன்மையை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கொண்டு வருவதாகத்தான் இருந்தது. அவர் புதுமையான முறையில் பிறந்ததால்தான் அவருடைய வாழ்க்கை அப்படி அமைந்தது என்று இப்போது நீங்கள் சொன்னால், உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் அந்த வாய்ப்பைத் தவற விடுவீர்கள், இல்லையா? இது ஒரு துரதிருஷ்டமான செயல்.

நீங்கள் இப்படிச் சொல்லும்போது, நீங்கள் அவருக்கு எதிராகச் செயல்படுகிறீர்கள் என்றுதான் சொல்வேன். சத்குரு அவர்கள் புதுமையான முறையில் பிறந்தவர் என்று யாராவது பரப்பத் தொடங்கினால், பின்னர் நான் கற்றுத் தரும் எதையும் நீங்கள் கவனிக்க மாட்டீர்கள். நமக்கு அது வேலை செய்யாது என்ற முடிவிற்கு வந்திருப்பீர்கள். நீங்கள் யாருமே இதைச் செய்யக் கூடாது. ஏனென்றால் நீங்கள் இவ்வாறு செய்வதன் மூலம் இயேசு வாழ்ந்ததற்கான நோக்கத்தையே அழிக்கிறீர்கள். ஒருவர் எப்படி பிறந்தார், ஒருவர் எப்படி இறந்தார் என்பது முக்கியமில்லை. அவர் எப்படி வாழ்ந்தார், எதற்காக வாழ்ந்தார் என்பதுதான் முக்கியம், இல்லையா?

துரதிருஷ்டவசமாக நீங்கள் அவருடைய வாழ்க்கையின் நோக்கத்தையே தோல்வியடையச் செய்துவிட்டீர்கள். உண்மையிலேயே அவருடைய பிறப்பு புதுமையானதாக இருந்தாலும் அதைப் பற்றிப் பேசக்கூடாது.

Question: சரி, சத்குரு, இயேசுவின் பிறப்பைப் பற்றி நாம் பேச வேண்டாம், ஆனால் அந்த மாதிரி நடக்க வாய்ப்பு உள்ளதா?

சத்குரு:

இதற்கான வாய்ப்பு உள்ளது. இது கேட்பதற்கு அபத்தமாக இருக்கும். ஆனால் ஒரு பெண் வெகுதொலைவில் இருந்தே, உடல் தொடர்பு இல்லாமலேயே, கர்ப்பம் அடைய முடியும். இந்த மாதிரியான பரிசோதனைகள், யோகக் கலாச்சாரத்தில் நடந்துள்ளது. இதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், இது மிகவும் அரிதானது!