உங்களை எதற்காக என் குருவாக ஏற்க வேண்டும்?

உங்களை எதற்காக என் குருவாக ஏற்க வேண்டும்?, ungalai etharkaga en guruvaga yerka vendum?

தன்னை ஒரு குருவாக ஏற்றுக்கொள்ள தயங்குபவர்களுக்கு சத்குரு சொல்லும் ஒரு தீர்வு என்ன என்பதை இதில் அறியலாம்!

கேள்வி
“இப்போதே நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். ஞானநிலை அடைய வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. உங்களை எதற்காக என் குருவாக நம்பி ஏற்க வேண்டும்?”

சத்குரு:

என்னை நம்புங்கள் என்று எப்போதாவது நான் சொன்னேனா? நீங்கள் ஒரு மோட்டார் சைக்கிள் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அங்கே உங்கள் உயிரையே பணயம் வைத்தல்லவா நம்பிக்கை வைக்கிறீர்கள்?

வாகனத்தை வாங்கி வேகமாக ஓட்டிக்கொண்டு போகிறீர்களே, எந்த நம்பிக்கையில்? ஒரு முக்கியமான ஸ்க்ரூ கழன்று கொண்டால், எலும்புகளை முறிக்கும் காயம் ஏற்படலாம். ஏன், உங்கள் உயிரையே அது விலை பேசலாம். ஆனால் அதைத் தயாரித்தவரையும், வாகனத்தில் இருக்கும் எத்தனையோ ஸ்க்ரூக்களை முடுக்கியவர்களையும் நம்பித்தானே வண்டியில் பயணம் செய்கிறீர்கள்?

அந்த அளவுக்குகூட உங்களுக்கு ஆபத்தில்லாத ஒரு வாகனத்தை நான் வழங்குகிறேன். இயக்குவதற்கு அது எளிமையான வாகனம். பயன்படுத்தி பாருங்கள், அது உங்கள் எதிர்பார்ப்புக்களைத் தாண்டி வேலை செய்யும். செய்யாவிட்டால், அதை ஒதுக்கிவிடுங்கள் அவ்வளவுதானே?
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert