சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் “அலை” இசைத் தொகுப்பின் பாடல்களை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியை வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்று ‘அலை’ இசைத் தொகுப்பில் அமைந்த இன்னொரு அற்புத மெல்லிசை “உன் பதம் பணிந்தேன்...” உங்களுக்காக...

“அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே! அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?”

மாணிக்க வாசகரின் இந்தத் திருவாசகப் பாடல் சொல்வதுபோல், குருவின் பாதங்களைச் சிக்கெனப் பற்றிக் கொள்வதற்கு யாருக்குத்தான் இங்கே ஆசையில்லை!

அதிகமான இசைக் கருவிகள் உபயோகப்படுத்தப் படாமல், மயிலிறகில் வருடுவதுபோல் நம்மை வருடிச் செல்லும் மெல்லிசைப் பாடலாக உருவாகியுள்ளது “உன் பதம் பணிந்தேன்...”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“என் மோகப் புயல் வீச, என் தேகம் அலைபாய, நீ தந்த ஒளி மட்டும் நிலையானதே” எனும் வரிகள் தினம் தினம் அலைபாயும் நம் மனங்களைப் பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது. குருவின் பதம் பணிந்தவர்க்கு குழப்பங்கள் இருப்பதில்லை என்பதை உணர்த்தும் மீதிப் பாடல் வரிகள் இங்கே...

உன் பதம் பணிந்தேன் என்னையே மறந்தேன்
உன் பதம் பணிந்தேன் என்னுள்ளே மலர்ந்தேன்
என்னையே மறந்தேன் என்னுள்ளே மலர்ந்தேன்

உன் பார்வை ஒளியாக
என் நெஞ்சம் அகலாக
என்னுள்ளே ஒரு ஜோதி உருவானதே
என் மோகப் புயல் வீச
என் தேகம் அலைபாய
நீ தந்த ஒளி மட்டும் நிலை ஆனதே

உன் பதம் பணிந்தேன் என்னையே மறந்தேன்
உன் பதம் பணிந்தேன் என்னுள்ளே மலர்ந்தேன்
என்னையே மறந்தேன் என்னுள்ளே மலர்ந்தேன்

நீ தந்த பாதை தான் நான் செல்வது
அதில் நான் வீழும் பள்ளங்கள் நான் செய் தது
நீ வந்து கை தந்து நடை போடச் சொல்லாமல்
இனி எங்கு நான் செல்வது.

உன் பதம் பணிந்தேன் என்னையே மறந்தேன்
உன் பதம் பணிந்தேன் என்னுள்ளே மலர்ந்தேன்
என்னையே மறந்தேன் என்னுள்ளே மலர்ந்தேன்

Sounds of Isha வின் பிற பாடல்களை டவுன்லோடு செய்ய: http://soundsofisha.org/