டாக்டர். சாட்சி சுரேந்தர்,

ஈஷா ஆரோக்யா

எவ்வாறு அந்த முக்கண்ணணுக்கு நம் மரபில், தேவாதி தேவன்', மஹாதேவன் என்ற ஒரு தனி இடம் உண்டோ, அதேபோல் இந்த முக்கண்ணணுக்கும், நம் வாழ்வில் இன்றளவும் ஓரு முக்கிய இடம் இருக்கிறது.

"சமையலுக்குத் தேங்காய், கோவிலுக்குத் தேங்காய், பண்டிகைக்குத் தேங்காய், ஏன் இறுதிக் காரியத்திலும் தேங்காய்..."

இவ்வாறு நம் அன்றாட சந்தோஷத்திலும், துக்கத்திலும் தேங்காய் பிணைந்திருப்பது கண்டிப்பாக காரணமில்லாத தற்செயல் அல்ல.

நம் நாட்டில் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் எந்தவொரு விஷயத்தையும், அரைவேக்காட்டுத் தனத்துடன் நம்மில் பெரும்பாலனோர் அலட்சியப்படுத்துவதும், அந்த விஷயங்களிலுள்ள மேன்மையை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தறியும் மேற்கத்தியர்கள், அதற்குக் காப்புரிமை பெற்றவுடன் குய்யோ முறையோ என்று நம்மவர் புலம்புவது இன்றைய தேதியில் புதிதல்ல.

பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளுக்குச் சொந்தமான தென்னை மரத்தின் தேங்காய் நமக்கு கயிறாகவும், படுக்கையாவும், உடையாகவும் மாறிவிட்டது. அதன் வழுக்கையும், இளநீரும் வெறும் பானமாகவும், உணவாகவும் அல்லாமல் நோய்களை தடுத்து விரட்டும் சஞ்சீவியாகவும் இருக்கின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் நாட்டில் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் எந்தவொரு விஷயத்தையும், அரைவேக்காட்டுத் தனத்துடன் நம்மில் பெரும்பாலனோர் அலட்சியப்படுத்துவதும், அந்த விஷயங்களிலுள்ள மேன்மையை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தறியும் மேற்கத்தியர்கள், அதற்குக் காப்புரிமை பெற்றவுடன் குய்யோ முறையோ என்று நம்மவர் புலம்புவது இன்றைய தேதியில் புதிதல்ல.

அந்த லிஸ்டில் நம் இளநீரும் சேர்ந்துவிடுமோ என்கிற பயம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

ஏனெனில், நம் இளநீரில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் நவீன அறிவியலின் முத்திரை குத்தப்பட்ட உண்மைகள் சில:

  • இளநீரால் இரத்தத்தின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கச் செய்து, இதயத்தைக் காக்க முடியும்.
  • மதுவினால் பாதிப்படைந்த கல்லீரலுக்கு இளநீரால் புத்துணர்வு அளிக்க முடியும்.
  • பழங்களுக்கு ஈடான கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், மேக்னீசியம், துத்தநாகம், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் என இவற்றுடன் பொட்டாசியமும் செரிவுடன் இருப்பதால், கோடை காலத்திலும் வயிற்றுப்போக்கின் போதும், நாம் இழக்கும் தாது உப்புக்களை மிக விரைவில் சமன்படுத்தும் மிகச் சிறந்த திரவம் இளநீர்.
  • கீழை நாடுகளில் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது ட்ரிப்சுக்கு பதிலாக, இளநீரையே நேரடியாய் நரம்பில் செலுத்தி மருத்துவம் செய்து உயிர் காக்கின்றார்கள்.

சுருங்கச் சொன்னால், கிட்டத்தட்ட மனித இரத்தத்துடைய சாரத்தின் (பிளாஸ்மாவின்) கட்டமைப்புகளுக்கு மிக நெருங்கிய இயற்கைத் திரவம் இளநீர் மட்டுமே!!

ஒரு தலைமுறைக்கு முன்னர், இளநீர் நம் வாழ்வில் எப்போதும் பின்னிப் பிணைந்திருந்த்தது, இப்போதோ உடல் நலமில்லாதபோது மட்டுமே இளநீரைத் தேடுகிறோம்.

சுருங்கச் சொன்னால், கிட்டத்தட்ட மனித இரத்தத்துடைய சாரத்தின் (பிளாஸ்மாவின்) கட்டமைப்புகளுக்கு மிக நெருங்கிய இயற்கைத் திரவம் இளநீர் மட்டுமே!!

இப்போதுள்ள இளைஞர்கள், நவீனம் என்ற பெயரில், இன்றைய விளம்பர யுகம், வெறும் சர்க்கரைத் தண்ணீரோடு வாயுவைச் சேர்த்து, புட்டியில் அடைத்து, ஒரு சினிமா ஸ்டாரையோ, நாம் நேசிக்கும் விளையாட்டு வீரரையோ முன்னிருத்தி நம் ஆழ்மனதில் நாம் அறியாமலே, "அக்கா மாலாக்களையும்," "கப்சிக்களையும்" புகுத்தி விடுவது என்னவோ நம் கஷ்டகாலம்தான்.

"சம்மருக்கு என் சாய்ஸ், ...ப்ஸி, ...கோலா தான்!" என்று பீற்றிக் கொள்ளும் நவநாகரிக யுவ, யுவதிகள் பலருக்கு அவர்கள் விரும்பி அருந்தும் பானங்கள், மிக அதிக அமிலத்தன்மை (pH < 2.0 - Acidity) கொண்டவை என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஏனெனில், அதில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் (Artificial Sweeteners) Acidity ஐ மறைக்கின்றன.

"சரி சார்... Acidity அதிகமானா அப்படி என்ன பெருசாக் கெட்டுப்போகப் போகுது?," என்கிற வீராப்பு வீராசாமிகள் குறைந்தபட்சம் தெரிந்துக் கொள்ள வேண்டிய அறிவியல் உண்மைகள்:

  • உடலில் (pH < 2.0 - Acidity) க்கும் குறைவான அமிலத்தன்மையை சமாளிக்கும் திறன் உடலில் வயிற்றைத் தவிற வேறெந்த பகுதிக்கும் கிடையாது.
  • கழிவறையைக் கூட 'பளிச்'னு சுத்தம் செய்யும் திறன் நம்ம கோலாக்களுக்கு உண்டு என்பதை நீங்களே பரிசோதிக்கலாம்.
  • இத்தனை 'ஸ்ட்ராங்கான' அமிலம், நம் பற்களையும், எலும்புகளையும் அரித்து (எலும்புத் தேய்மானம்) பதம் பார்ப்தில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
  • "இந்த நோய் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?" என்கிற ரேஞ்சுக்கு, சீறுநீரகக் கல், கணைய பாதிப்பு, டயாபெடிஸ், உடற்பருமன், கல்லீரல் நோய், தூக்கமின்மை, மன அழுத்தம், பதட்டம் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

"உடம்பு சூட்டுக்கு நல்லது கண்ணு...", "அடிக்கிற வெயிலுக்கு ஒரு இளநீய சீவித் தாரேன் குடிதாயி!" எனப் பாசம் பொங்க, நம் பாட்டன்கள் கூறுவதை, ஒரு சச்சினோ, ஷாரூக், தோனியோ டிவியில் தோன்றி சொன்னால்தான் குடிப்பேன் என்று இப்போது நீங்கள் அடம்பிடித்தால், ஒரு நாள் வரும், அப்போது நீங்கள் நினைத்தாலும், உங்கள் தோப்பு இளநீரை, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட புட்டியில்தான் குடிக்க நேரிடும்.

ஸோ, இந்த சம்மருக்கு உங்கள் சாய்ஸ்???!

நம் தோட்டங்களில் குலை குலையாய் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் இயற்கை அமுதமா? அல்லது காசு கொடுத்தால் கேடு கொடுக்கும் ஸ்லோ பாய்ஸன்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்!

Photo Courtesy: Rosh PR @ flickr