"ஆரோக்கியமே ஆனந்தம்" - இந்த வாசகத்தின்படி வாழ்க்கை அமையப் பெற்றவர்களோ குறைவான சதவிகிதம்தான். உடலையும் மனதையும் நீங்கள் வசப்படுத்த வேண்டுமென்றால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஆரோக்கியம் என்பது பெரும்பாலானோருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. இந்த நிலையை மாற்றியமைக்கும் விதமாக சத்குருவால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம்தான் "ஈஷா ஆரோக்யா".


உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வேலையையும் சலிப்பின்றி செய்யமுடிகிறது. ஆனால் எப்போதுமே அப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடிகிறதா? அதுதானே முடியவில்லை. தற்போது சிறுவயதுக்காரர்கள் கூட சர்க்கரை, மூட்டுவலி, இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய், உடல்பருமன், என்று ஆஸ்பத்திரிக்கும் மருந்துக்கடைக்கும் அலைகிறார்கள். காரணமே வாழ்க்கைமுறை மாறிவிட்டதுதான். சரி, அப்படியென்றால் இதற்கெல்லாம் எங்கே தீர்வு காண்பது?
இது அலோபதி பற்றி அல்ல; சித்த வைத்தியம் பற்றி அல்ல; ஆயுர்வேதம் பற்றி அல்ல, இது முழுக்க ஆரோக்கியம் பற்றியது!

இதற்காக உருவாக்கப்பட்டதுதான் "ஈஷா ஆரோக்யா". தற்கால நவீன மருத்துவத்தில் நோய்களும், நோய்க்கான சிகிச்சைகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் வேளையில், நோய் தடுப்புக்கும், நம் ஆரோக்கியம் பேணலுக்கும்கூட சம அளவு கவனம் அளிக்கும் நோக்கத்தில் துவக்கப்பட்டதுதான் ஈஷா அறக்கட்டளையின் மருத்துவப் பிரிவான ஈஷா ஆரோக்யா.

ஈஷா ஆரோக்யா ஆரம்பிக்கப்பட்ட போது சத்குரு சொன்னார், "இது அலோபதி பற்றி அல்ல; சித்த வைத்தியம் பற்றி அல்ல; ஆயுர்வேதம் பற்றி அல்ல, இது முழுக்க ஆரோக்கியம் பற்றியது! மனிதனின் ஆரோக்கியத்திற்கு எது தேவையோ அவையனைத்தும் இங்கு உபயோகப்படுத்தப்படும்". ஆரம்பித்து மூன்றே வருடங்கள், அதற்குள் சென்னை, கோவை, சேலம், மற்றும் கரூர் என 4 மருத்துவமையங்கள். இங்கு ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம் எல்லாமே உண்டு. யாருக்கு, எந்த நோய்க்கு எந்த மருத்துவம் சிறந்தது என்று தேர்ந்தெடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொதுவாகவே, நவீன மருத்துவரும், பாரம்பரிய மருத்துவரும் ஒரு இடத்தில் இணைந்து செயலாற்றுவது என்பது மிக அரிது. இப்பயணத்தின் முக்கியத் தடைக்கல்லே இதுதான். ஆயினும், 'இதை நிகழ்த்தியே ஆகவேண்டும்' என்கிற தீவிர விருப்பத்தால்தான் ஈஷா ஆரோக்யா இத்தடைக்கல்லை, படிக்கல்லாக மாற்றியது. ஆங்கில மருத்துவரின் மேற்பார்வையுடன், தகுதி வாய்ந்த சித்த மருத்துவர்கள் ஈஷா மையங்களில் திறம்பட சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நம் மண்ணின் மருத்துவம்:

சித்த மருத்துவம், தன்னை முழுதாய் உணர்ந்த சித்தர்கள், ஞானிகள் மனித குல நலத்திற்காக வாழையடி வாழையாய் விட்டுச்சென்ற பொக்கிஷம். உடலை நோய் அண்டாமல் காத்து, தீராத நோய் வந்திடினும் தீர்த்து வைத்து மனிதனை உயர் நோக்கமாம் முக்தியை நோக்கி இட்டுச்செல்லும் இறை மருத்துவம். மீண்டும் இந்த ஆழ்ந்த அறிவியலை புதுப்பிக்க வேண்டியது நமது கடமை. ஈஷா ஆரோக்யா, தமிழகத்தில் அப்பணியை, நவீன மருத்துவத் துணையுடன், முன்னெடுத்து செல்கிறது. ஈஷா ஆரோக்யா மையங்கள் மூலம் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த இரு வருடங்களில் பலனடைந்துள்ளனர். இங்கு சிகிச்சை இலவசம் என்பது மற்றுமோர் சிறப்பம்சம்.

சிறுதானியங்கள்

தன் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு மனிதரின் உடலையும் தெய்வீகத்தின் இருப்பிடமாய் நிலைக்கச் செய்யும் சீரிய நோக்கத்தை ஈஷா ஆரோக்யா வெளிப்படுத்தி வருகிறது.

சித்த மருந்துகள் மட்டும் அல்லாது, ஆரோக்யா மருந்தகங்களில் கிடைக்கும் இயற்கை வேளாண்மையில் விளைந்த வரகு, சாமை, திணை, ராகி, குதிரைவாலி, கைக்குத்தல் அரிசி முதலிய சிறு தானியங்கள் நம் உடலுக்கேற்ற பழந்தமிழர் உணவுகள். வெள்ளை அரிசிக்கு மாற்றாக கிடைக்கும் இத்தானியங்கள் மேற்கூறிய வாழ்க்கை முறை நோய்களில் இருந்து நம்மை காக்கும் உணவுக்கவசம். இயற்கையான ஊட்டச்சத்துப் பெருட்கள், பெண்களுக்கான ரசாயனக்கலப்பற்ற தோல், கூந்தல் பராமரிப்புப் பொருட்கள் என சகலமும் மக்களின் பாதுகாப்பான பயன்பாட்டிற்காக இம்மருந்தகங்களில் கிடைக்கின்றன.

உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் பாரம்பரிய மூலிகை எண்ணெய் குளியல், மூட்டு/முதுகு/கழுத்து வலி, மன அழுத்தம், தூக்கமின்மை, அலர்ஜி/சைனஸ்/ ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி, முடி உதிர்தல், தோல் நோய் என குறிப்பிட்ட நோய்களுக்கேற்ற பாரம்பரிய மசாஜ் எனப்படும் தொக்கண சிகிச்சைகளும் மையங்களில் வழங்கப்படுகின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தாய்மை

கர்ப்பிணிகளுக்கான சிறப்பு ஆரோக்ய பயிற்சி வகுப்புகளும் ஈஷா ஆரோக்ய குழுமத்தால் தமிழகங்களின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. கர்ப்பகாலத்தை 'நோய்' போல பாவிக்காமல், அதை அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஓர் இனிய அனுபவமாய் மாற்றும் ஒரு சீரிய முயற்சிதான் தாய்மை நிகழ்ச்சி.

தன் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு மனிதரின் உடலையும் தெய்வீகத்தின் இருப்பிடமாய் நிலைக்கச் செய்யும் சீரிய நோக்கத்தை ஈஷா ஆரோக்யா வெளிப்படுத்தி வருகிறது. இவர்களின் வெற்றிப் பயணம் மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்!!

ஈஷா ஆரோக்யா மையங்கள்:

கோவை - மணிமஹால் அருகில், ஹோப்ஸ், பீளமேடு.
தொலைபேசி: 83000-55555, 94421-38852

சென்னை - ஆதம்பாக்கம்.
தொலைபேசி: 044-42128847, 94425-90099

சேலம் - புது பேருந்து நிலையம்.
தொலைபேசி: 0427-233232, 94425-48852

கரூர் - புது பேருந்து நிலையம்.
தொலைபேசி: 04327-249299, 94425-90098

ஈஷா தாய்மை
தொலைபேசி:94425-90030; 94878-95440

பகிர்வுகள்:

திருமதி. அங்கயர்கண்ணி:

எனது கால் வீக்கத்திற்காக வைத்தியம் செய்யத்தான் ஈஷா ஆரோக்யாவிற்கு வந்தேன். இங்கே இருந்தவர்கள் அன்புடன் வரவேற்று, பரிசோதித்து, பிரச்சனைக்கு தகுந்த மருந்து கொடுத்தார்கள். அதை எடுத்துக் கொண்ட பிறகு இப்போது நல்ல சுகமாக உணர்கிறேன். ஈஷா ஆரோக்யாவிற்கு எனது நன்றிகள்!

திருமதி. அங்கயர்கண்ணி, க/பெ வரதராஜ பெருமாள் (முன்னாள் முதல்வர், ஸ்ரீலங்கா), சர்வோதயா காலனி, புது தில்லி.

செந்தில் ராஜ்:

நான் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சைனஸ் பிரச்சினைக்காக ஈஷா ஆரோக்யாவிற்கு வந்தேன். அலோபதி எடுத்துக் கொள்ளலாம் என்றுதான் வந்தேன். ஆனால், டாக்டர், சித்தாவிலேயே நல்ல மருந்துகள் உள்ளது, அதையே சாப்பிடுங்கள் என்றார். சரி எடுத்துப்பார்க்கலாம் என்றுதான் சாப்பிட்டேன். 40 நாட்கள் மட்டும்தான் எடுத்துக் கொண்டேன். முற்றிலுமாக இப்போது சைனஸ் பிரச்சினை தீர்ந்துவிட்டது. சளி பிடிப்பதே இல்லை. மிகவும் ஆனந்தமாக உணர்கிறேன்.

பிறந்ததிலிருந்தே எனக்கு சைனஸ் பிரச்சினை இருந்தது குறிப்பிடத்தக்கது.

செந்தில் ராஜ்,
இடப்பாடி தாலுக்கா,
சேலம்.

அனுராதா:

எனக்கு ஒரு வருடமாகவே கால் வலியால் நடக்கமுடியாமல் இருந்தது. கால்களில் வீங்கி வலி எடுக்கும். கால் இரண்டும் மடக்க முடியாமல் இருந்தது. இங்கு வந்து சிகிச்சை எடுத்த பின்னர் கால்களில் வீக்கம் குறைந்துவிட்டது. வலியும் குறைந்தது. 3 நாட்கள் மசாஜ் எடுத்துக் கொண்டேன். வலிக்கு இதமாக இருந்தது. எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு மிக்க நன்றி. சத்குரு அவர்களுக்கும் எனக்கு சிகிச்சை அளித்த பணியாளர்களுக்கும் மிக்க நன்றி.

அனுராதா,
குகை, சேலம்.