சில ஆண்டுகளுக்கு முன் மஹா கும்பமேளாவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஒரு குழந்தையுடன் வலம் வந்த ஒரு துறவி!

நோய் வாய்ப்பட்டு இருந்த இந்தக் குழந்தை இனி பிழைக்காது என்று எண்ணிய பெற்றோர்கள் ஆசிரம வாசலில் விட்டு விட்டு சென்று விட துறவியின் கருணைப்பார்வை மழலையின் மீது பட்டதும், மலர்ந்தது புது உறவு!

பிஞ்சுக்குழந்தையின் நாசித்துவாரத்தில் மெலிதாக நடந்து கொண்டிருந்த அந்த சுவாசம் துறவிக்கு நம்பிக்கையை அளித்தது.

சில மூலிகைகளையும் அன்பையும் குழைத்து குழந்தையை காப்பாற்றியவர், குழந்தையின் பெற்றோர் வருவர் என்றே பல நாட்கள் காத்திருந்தார்.

ஆனால் தற்சமயம் ‘பஜ்ராங்கி’ என்று பெயரிட்டு அவனை முறைப்படி தத்தெடுத்துள்ளார்.


நோய் வாய்ப்பட்டு இருந்த இந்தக் குழந்தை இனி பிழைக்காது என்று எண்ணிய பெற்றோர்கள் ஆசிரம வாசலில் விட்டு விட்டு சென்று விட துறவியின் கருணைப்பார்வை மழலையின் மீது பட்டதும், மலர்ந்தது புது உறவு!

அதிகாலை 4 மணிக்கு எழுந்து பஜ்ராங்கிக்கு ஆங்கிலமும் இந்தியும் கற்றுக் கொடுக்கும் சாது, “கணிதத்தில் இப்போது இவன் 25 எண் வரை சொல்கிறான்,” என்று பெருமிதம் கொள்கிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பஜ்ராங்கிக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக பசு ஒன்றை வளர்க்க துவங்கியிருக்கும் இந்த சாதுவின் பின்னணியை சற்று பார்த்தால் ஆன்மீகத் தேடுதலில் இவருக்கு இருக்கும் தீவிரம் புரியும்.

'சாது தியாகி' என்று அழைக்கப்படும் இவர் ஒரு நாள் வெள்ளப்பெருக்கின் போது ஒரு மரத்தின் மீதேறி யோக நிலையில் அமர்ந்து விட்டார். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் கீழே இறங்காத இவரை பாதுகாப்புக் காரணங்களுக்காக இறங்குமாறு வேண்டினர். அப்படியும் இறங்க மறுத்துவிட்ட இவருக்கு 'வெள்ள பாபா' என்ற மற்றொரு பெயரும் ஏற்பட்டுவிட்டது.

தனது வீடு, வெற்றிகரமான நெசவுத்தொழில் பஞ்சாபில் இவருக்கு சொந்தமான ஏராளமான நிலம், ஸ்ரீகாந்த நாராயண் தாஸ் என்ற தனது இயற்பெயர் இவை எல்லாவற்றையும் துறந்துவிட்ட இவருக்கு இந்த குழந்தையை வளர்ப்பதற்கு எந்த வருமானமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பலர் இவரை குழந்தையை கடத்தியவர் என்று பழி சுமத்துகிறார்கள்.

சிலர் இவர் இந்த குழந்தையை அநாதை ஆசிரமத்தில் விட்டுவிடவும் சொல்கிறார்கள்.

வேறு சிலரோ அந்த குழந்தையை விட்டுவிடச் சொல்லும்போது, அவரது அன்பு கோபமாக வெடிக்கிறது!

யாராவது அக்குழந்தையை அநாதை என்று அழைத்தால் அவ்வளவுதான்!

"அநாதை ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகள் தெருவில் பிச்சை எடுக்கவே விடப்படுவார்கள்!" என்று இவர் கூறுகையில் இவரது அரவணைப்பு தெளிவாகிறது.

"இது கடவுளின் விருப்பம்" என்று சொல்லும் இவரது கண்களில் பேரானந்தம்.

அன்பு அழகானது, மலரைப்போன்றது! அது மலர்வதை யார் தான் தடுக்க முடியும்! அன்பற்ற நிலை ஆன்மீகம் இல்லை!

அன்பு வயப்பட்ட நிலைதான் ஆன்மீகமோ!

Story and photo courtesy: The Hindu