மண்ணில், அந்த விண்ணில், ஒளி நிறைந்த கண்ணில், இசை சிந்தும் பண்ணில், பல்கிப் பெருகும் நுண்-உயிரில், சக்தியின் நடனத்தை அழகுற எழுத்தாக்குகிறான் கவிஞன். பாம்பு தன் சட்டையை உதிர்த்து வெளியேறுவது போல், கர்மவினையை அதே 'சக்தி' உதிர்க்க உதவுகிறது. நம்மை சிக்க வைக்கும் மாய வலைகளிலிருந்து விடுவிக்க கைநீட்டுகிறது. பற்றிக் கொள்வோம். தேவி லிங்கபைரவியின் தாள் பணிவோம்.

அன்னை லிங்கபைரவி நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்காவாகவும், இரண்டாவது மூன்று நாட்களில் லக்ஷ்மியாகவும், இறுதி மூன்று நாட்களில் அறிவு கொடுக்கும் சரஸ்வதி தேவியாகவும் நமக்கு அருள்பாலிக்கிறாள். முதல் மூன்று நாட்கள் நேற்றுடன் முடிவுபெற, இன்று முதல் லக்ஷ்மி ரூபம் பெறுகிறாள் தேவி.

நாம் அனைவரும் மகாகவி பாரதியை, சுதந்திர போராட்ட வீரராகவும், தமிழ் பற்று மிக்க மாபெரும் கவிஞராகவும் அறிந்திருப்போம்...

ஆனால், காளி, துர்கை, அம்மன் எனப் போற்றப்படும் தேவி சக்தியின் தீவிர‌ பக்தர், மகாகவி பாரதியார் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?!

அவரது பிறந்த நாளான இன்று, தேவி லிங்க பைரவிக்கு நாம் சமர்ப்பித்த இன்னொரு பாரதியின் பாடல், "துன்பம் இல்லாத நிலையே சக்தி" இதோ நம்மை பரவசப்படுத்தும் இந்த காணொளியில்... கண்டு மகிழுங்கள்!

பாடல் வரிகள்...

துன்பம் இல்லாத நிலையே சக்தி
தூக்கம் இல்லாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி

இன்பம் முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத்தில் நிற்கும் நெறியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி

சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி
தீம்பழம் தன்னில் சுவையே சக்தி
தெய்வத்தை என்னும் நினைவே சக்தி
சாம்பலை பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி