தொண்டைக்கு இதம் நாவிற்கு ருசி… தூதுவளை பூரி!

தொண்டைக்கு இதம் நாவிற்கு ருசி... தூதுவளை பூரி!, Thondaikku itham navirku ruchi - thoothuvalai poori

ஈஷா ருசி

தூதுவளை பூரி

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 250 கிராம்
தூதுவளை கீரை – 2 கைப்பிடி
முருங்கை கீரை – அரை கைப்பிடி
மிளகு பொடி – அரை ஸ்பூன்
சுக்குப்பொடி – அரை ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

அரிசியை 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். தூதுவளை கீரையை முள் மற்றும் காம்பு நீக்கி, கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அரிசி, கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக நைசாக, கெட்டியாக அரைக்க வேண்டும். அதில் மிளகு பொடி, சுக்குப்பொடி சேர்த்து பிசைய வேண்டும். இந்த மாவு பூரி மாவு பதத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அதில் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து பிசைந்துகொள்ளலாம்.

வாணலியில் எண்ணெயை காயவைக்கவும். அரைத்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக செய்து, துணியில் வைத்து தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இந்த தூதுவளை பூரியை இட்லிபொடியுடன் சேர்த்து சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். சுவையானதுடன், சளி இருமல் இருக்கும் சமயத்தில் சாப்பிட்டால் எளிதாக நிவாரணம் கிடைக்கும்.
இதையும் வாசியுங்கள்

Type in below box in English and press Convert