ஈஷா ருசி

நம் வீடுகளில் கிச்சடியை ரவை அல்லது அரிசியில் செய்வதுதான் வழக்கம். ஆனால் தினையைக் கொண்டும் செய்ய முடிந்த இந்த தினைக் கிச்சடியும் செய்து சுவைத்துப் பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

  • தினை - 1 கப்
  • கேரட், பீன்ஸ், பட்டாணி
  • தக்காளி - 1
  • முருங்கை இலை - 1 கைப்பிடி
  • இஞ்சி விழுது - சிறிதளவு
  • எலுமிச்சை - ½ டீஸ்பூன்
  • முந்திரி - 10
  • கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

  • தினையை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • தேவைப்பட்டால் அதை தண்ணீரில் ஊற வைக்கலாம்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், முந்திரி சேர்த்து, அதில் சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, நறுக்கிய கேரட், பீன்ஸ், தக்காளி, இஞ்சி விழுது, முருங்கை இலை சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் தினை சேர்த்து, அதில் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு இறக்கவும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.