திகட்டாத ருசியுடன் தினை அல்வா ரெசிபி!

திகட்டாத ருசியுடன் தினை அல்வா ரெசிபி!, thigattatha ruchiyudan thinai halwa recipe

ஈஷா ருசி

அல்வா என்று சொன்ன மாத்திரத்திலேயே பலருக்கும் அடிநாக்கில் நீர் சுரக்கத் துவங்கிவிடும். இங்கே, சத்தான நவதானியங்களில் ஒன்றான தினை அரிசி மாவில் ருசியான தினை அல்வா ரெசிபி உங்களுக்காக!

தினைஅல்வா

தேவையான பொருட்கள்:

தினை அரிசி மாவு – 200 கிராம்
வெல்லம் – 200 கிராம்
ஏலக்காய்த் தூள் – அரை தேக்கரண்டி
சுக்குத்தூள் – 2 சிட்டிகை
முந்திரி, திராட்சை, பாதாம் – தலா 10 கிராம்
நெய் – 100 கிராம்

செய்முறை:

தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளுங்கள். சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும். கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும். இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும். சிறுதானியத்தில் செய்வதால் மிகச் சத்தான, சுவையான ஒரு உணவு இது.
இதையும் வாசியுங்கள்

Tags

Type in below box in English and press Convert