ஈஷா ருசி

இன்றைய தினம் கைமணம் கமழ பொங்கலை சுவைப்பவர்கள், இங்கே கொடுக்கப்பட்டுள்ள திடீர் கொப்தா கறியையும், புதுவிதமான ரோஸ்ட்டையும் சுவைத்துப் பாருங்களேன்...

திடீர் கொப்தா கறி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்

தக்காளி - 4
பாவ் பாஜி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கொப்தாவிற்கு

உருளைக்கிழங்கு - 2
புதினா - ¼ கப்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கேற்ப

செய்முறை

தக்காளியை வேகவைத்து தோலுரித்து மிக்ஸியில் போட்டு நைய அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த தக்காளியை நன்கு வதக்கிக்கொள்ளவும். இத்துடன் மற்ற மசாலா சாமான்களையும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்.

பின்னர் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொப்தாவிற்கு உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். இத்துடன் நறுக்கிய புதினா மற்றும் உப்பை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இந்த உருண்டைகளை பரிமாறுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் தக்காளி கிரேவியில் போட்டு நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

வெண்டைக்காய் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - ¼ கிலோ
சாம்பார் தூள் - 4 ஸ்பூன்
சீரக தூள் - ½ ஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு (அரைத்தது)
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

வெண்டைக்காயை நன்றாக கழுவி உலர வைத்தப்பின் நீளமாக, நாலாக கீற வேண்டும். சாம்பார் தூள், சீரகத்தூள் மற்றும் இஞ்சி விழுது, உப்பு கலந்து வெண்டைக்காயின் உள்ளே எல்லா இடமும் படும்படி வைக்க வேண்டும். பின் தோசைக்கல்லில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வெண்டைக்காயை பொரித்தெடுக்க வேண்டும். சாப்பிட மிகச் சுவையான பதார்த்தம் இது. மாலையில் குழந்தைகளுக்கு டிபனாக கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.