பல யோகா வகுப்புகளுக்குச் சென்றும் தன் தேடுதல் முழுமையடையாமல், ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொண்டது, அதில் தன் தேடுதல் நிறைவடைந்தது, ஷாம்பவி மஹாமுத்ரா தொடர்ந்து செய்ததில் தன் உடல் பிரச்சினைகள் குணமானது, போன்ற தன் அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஸ்ரீப்ரியா. தொடர்ந்து படியுங்கள்...

ஸ்ரீப்ரியா:

ஈஷா எனக்கு அறிமுகம் ஆனது 1996ல். 13 நாட்கள் வகுப்பு. என் திருமணமும் அதே வாரத்தில் ஏற்பாடு ஆனதால் என்னால் வகுப்பில் தொடர முடியவில்லை. நல்ல வசதியான மகிழ்ச்சியான வாழ்க்கை இருந்தும் இன்னும் ஏதோ ஒன்று குறை போலவே இருந்தது. பல இடங்களுக்கு சென்று பல பயிற்சிகளையும் மேற்கொண்டேன். பயிற்சி நாட்கள் மட்டும் நன்றாக இருப்பதும், மீண்டும் நான் என் பழைய குழப்பமான மனநிலைக்கு திரும்புவதையும் கவனித்தேன். ‘யோகா வகுப்பிற்கு போகிறேன்’ என்று பணம் வீணானது தான் மிச்சம் என்று என் கணவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

2007ல் ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்து ஷாம்பவி மஹா முத்ரா பயிற்சியை கற்றுக் கொண்டேன். ஒரு நாள்கூட விடாமல் பயிற்சி செய்து வருகிறேன். பயிற்சி ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே வயிற்றுவலி முற்றிலும் சரியாகிவிட்டது.

உடலளவிலும் சிற்சிறு உபாதைகள் எனக்கு இருந்து வந்தது. பள்ளி நாட்கள் முதல் எனக்கு சைனஸ் பிரச்சினையும், மாதாந்திர வயிற்று வலியும் இருந்தது. 2007ல் ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்து ஷாம்பவி மஹா முத்ரா பயிற்சியை கற்றுக் கொண்டேன். ஒரு நாள்கூட விடாமல் பயிற்சி செய்து வருகிறேன். பயிற்சி ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே வயிற்றுவலி முற்றிலும் சரியாகிவிட்டது. மனநிலையில் ஒரு தெளிவும் அமைதியும் பார்க்கமுடிகிறது. இதைத்தான் நான் பல ஆண்டுகள் தேடிக்கொண்டிருந்தேன். என்னிடம் கண்ட மாற்றத்தால் என் குடும்பத்தினர் அனைவரும் தாமாக முன்வந்து ஈஷா யோகாவை கற்றுக் கொண்டனர். எப்போதெல்லாம் எங்கள் இல்லத்திற்கு அருகில் வகுப்புகள் நடக்கிறதோ, அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் சென்று வகுப்பை திரும்பக்கேட்பதும், வகுப்பிற்கு என்னால் முடிந்த உதவிகள் செய்வதும் என்று வாழ்க்கை ஆனந்தமாக மாறிவிட்டது.

சத்குருவுக்கும் ஈஷாவிற்கும் நன்றி!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.