ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 9

யார் ஒரு திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கிறார்களோ அல்லது கடுமையாக விமர்சிக்கிறார்களோ அவர்கள்தான் ஊடகங்களால் உடனே கவனிக்கப்படுகிறார்கள். மக்கள் மத்தியில் தலைவர்களாக உருவெடுக்கிறார்கள். ஆனால், உண்மையான தலைவனுக்கு அடையாளம் எதிர்ப்பும் விமர்சனமும்தானா? இதுபற்றி நடிகர் சித்தார்த்தின் கேள்விக்கு சத்குருவின் பதில் இங்கே!

Question: இந்தியாவின் இளைய தலைமுறை குறித்து ஒரு விமர்சனம் இருக்கிறது. பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதில் முன்னால் இருக்கிறார்கள். இந்தியா வேறு விதமாக ஆளப்பட வேண்டும் என்று கூறும் சில செயற்பாட்டாளர்களும் பிரச்சனைகளை சுட்டிக் காட்டுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். நமக்கு தீர்வுகளை ஏற்று கொள்வதில் பிரச்சனை இருக்கிறதா. யாரோ ஒருவர் பிரச்சனை என்று பேச ஆரம்பித்தால் உடனே அவருடன் நாமும் சேர்ந்து கொள்கிறோம். நம்மை நாமே சுய அலசல் செய்து கொள்வதில்லை. நான் செய்தால் அது சரி, அதையே இன்னொருவர் செய்தால் அது குற்றம் என்ற இந்த மனப்பாங்கு எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே நிற்கும்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

பிரச்சனைகளை சுட்டிக் காட்டுவதை மக்கள் ஒரு தொழிலாக ஏற்படுத்தி விட்டார்கள். இது கவலைக்குரிய அளவில்தான் இருக்கிறது. இந்த தேசத்தில், ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனே அதை தடுக்க வேண்டும் என்று சிலர் கிளம்புகிறார்கள். அணை கட்ட, அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம், காற்றாலை என எதை தொடங்கவும் பல எதிர்ப்புகள். ஆனால் எல்லோருக்கும் எல்லா வசதியும் வேண்டும், 24 மணி நேரமும் மின்சாரம் வேண்டும்.

ஏதோ ஒன்றை தடுப்பவரை தலைவராக தேர்ந்தெடுப்பதை நாம் முதலில் நிறுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி ஆங்கிலேயரை எதிர்க்க அற்புதமான ஒரு புரட்சியை உருவாக்கினார். அனைத்து நிலைகளும் செயல்படாமல் வேலை நிறுத்தம் செய்வது. ஹர்தால், பந்த், சத்யாக்ரஹம் என்ற புரட்சி. இன்றைக்கும் நீங்கள் ஒரு அரசியல் தலைவராக உருவெடுக்க வேண்டுமென்றால் உங்கள் தொண்டர்கள் 100 பேரை சேர்த்து ஒரு சாலை மறியல் செய்தால் போதும் தலைவராகி விடலாம்.

காந்தி செய்தது அந்த காலகட்டத்தில் பொருத்தமாக இருந்தது. நம்மை அந்நியர் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம் அது! ஆனால் இன்றைக்கு மாநில அரசுகளே பந்த் நடத்த அனுமதி கோருகின்றன. ஒரு நிர்வாகமே எப்படி பந்த் நடத்த முடியும் என்று புரியவில்லை. ஏதோ ஒன்றை தடுத்தால் நீங்கள் ஒரு முக்கிய நபராக உருவாகி விடுவீர்கள். இது நிச்சயம் மாற வேண்டும். ஏதோ ஒன்றை தடுப்பவரை தலைவராக தேர்ந்தெடுப்பதை நாம் முதலில் நிறுத்த வேண்டும். இதை நம் தேசத்தின் அனைத்து குடிமக்களும் செய்ய வேண்டும் - திட்டங்கள், செயல்கள் நிறைவேற்றுபவரையே தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆம், அப்படிதான் இருக்க வேண்டும்.


அடுத்த வாரம்...

உண்மையான குருவை தேடி அடைவது எப்படி? மதங்களின் பெயரால் பிளவுபட்டுக் கிடக்கும் மனித இனம் - இவை குறித்து என்ன சொல்கிறார் சத்குரு? அடுத்த வாரம் அறிந்து கொள்வோம்...

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...