பொங்கிவரும் பொங்கலுக்கு முன், நமக்குள் உள்ள பழையதைக் களைந்து புதியதை அறுவடை செய்திடும் இரகசியத்தை நம்மோடு பகிர்ந்துள்ளார் சத்குரு.

6:29

மார்கழி மாத மாலைப் பொழுதில் லேசான பனி படர்ந்திருக்க, சத்குரு தரிசனம் தந்தார். அவரைப் பின்தொடர்ந்து அனைவரும் "யோக யோக யோகீஷ்வராய" மந்திரத்தை உச்சரித்தனர். வடமொழிப் பாடலொன்று மென்மையாய் பின்னணியில் இசைக்க, அனைவருக்குள்ளும் பனிபோல் படர்ந்தது தியானம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

6:43

சத்குரு கூறியதிலிருந்து:

"ஆசிரம சூழ்நிலையில் இருப்பதை நாம் தேர்ந்தெடுத்திருப்பதே, நாம் எல்லாம் அறிந்தவர்களில்லை என்பதை உணர்ந்துள்ளதால் தான். தைத்திருநாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பயிர்களுடன் உங்கள் ஆன்மீக சாதனையையும் அறுவடை செய்திடுங்கள். பழையதை தூக்கியெறிந்து புதியதை அறுவடை செய்ய, அனைவரையும் பற்றிய உங்கள் மோசமான கருத்துக்களையும் கணக்குகளையும் அழித்திடுங்கள். ஜனவரி 14க்குள் முடியவில்லை என்றாலும், ஜனவரி 17க்குள்ளவது உங்கள் பழைய கருத்துக்களை தகர்த்தெறியுங்கள்.

இராவணனைக் கொன்றபின், தான் செய்த செயலுக்கு வருந்தி தவம் செய்தார் இராமன். ஏனென்று கேட்டபோது, 'இராவணனின் பத்துத் தலைகளில் ஒன்று சிவபக்தனாய், புத்திக் கூர்மை படைத்தவனாய் இருந்தது, அதை அழித்ததற்கு வருந்துகிறேன்' என்றார். ஒருவர் எவ்வளவு மோசமானவராய் இருந்தாலும், அவரின் அந்த மோசமான குணத்தை கண்டிக்கலாமே தவிர, அந்த மனிதரையே நமக்குள் கடிந்துகொள்ளத் தேவையில்லை.

எவ்வளவு மோசமானவராக இருந்தாலும், அவருக்குள் ஒரு சொட்டாவது இனிப்பு இருக்கும், அதனை அங்கீகரித்தால் தான் அது உங்களுக்குள்ளும் தூண்டப்படும். அவரின் மோசமான முகத்தையே பார்த்திருந்தால், அதுதான் உங்களுக்குள்ளும் பிரதிபலிக்கும்."

7:07

ஒருவர் மஹாசிவராத்திரிக்குத் தன்னை தயார் செய்வது குறித்துக் கேட்க, மஹாசிவராத்திரிக்கு முந்தைய 40 நாட்களுக்குத் தீவிர ஆன்மீக சாதனை செய்வதன் மகத்துவத்தை விளக்கினார்.

7:22

ஆன்மா குறித்து ஒரு கேள்வி, பணம் குறித்து ஒரு கேள்வி, ஆளுமை பெறுவது குறித்து ஒரு கேள்வி என்று சில கேள்விகளுக்கு அவருக்கே உரிய தனித்துவத்துடன் கேள்வியாளருக்கும் கூடியிருந்தோருக்கும் பதிலளித்தார்.

7:46

உயிர்நோக்கம் பாடல் இசைக்க, சத்குரு கைதட்டி மெட்டிசைத்து வணங்கி விடைபெற, இப்போதே பொங்கிவிட்டது உள்ளத்தில் ஒரு பொங்கல்.