தமிழ் புத்தாண்டு தினத்தில் ஈஷா யோக மையத்தில் சத்குருவுடன் நிகழ்ந்த தரிசன நேரத்தில், தமிழ் புத்தாண்டின் முக்கியத்துவம் குறித்து சத்குரு பேசியதிலிருந்து...

6:37

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் பூமி குளிர மழை பெய்ததோடு நில்லாமல், ஈஷா யோக மையத்தில் கூடியிருப்போரின் மனம் குளிர சத்குரு தரிசனம் தந்து அருள்மழை பொழிந்தார்.

6:40

"எப்படித்தான் எந்தன் உள்ளம் புகுந்து எனை அடிமை கொண்டீரோ சுவாமி..." எனும் பாடலை ஈஷா இசைக்குழு பாட, மெய்மறந்து சிலர், கண்ணீர்மல்க சிலர், கண்மூடி தியானத்தில் சிலர், என அனைவரும் அமர்ந்திருக்கின்றனர்.

6:45

"யோகரத்தோவா போகரத்தோவா" பாடலை சத்குரு பாட, அனைவரும் அவரைத் தொடர்ந்து பாடினர். பின்னர், அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொன்னார் சத்குரு.

6:54

"நம் நாட்டில் ஏன் மூன்று விதமான நாள்காட்டிகளும் மூன்று புத்தாண்டு தினங்களும் இருக்கின்றன?" என்று ஒருவர் கேட்க, "நம் நாட்டில் அனைத்தும் முக்தி நோக்கியே வடிவமைக்கப்பட்டன. நாள்காட்டிகளும் அவை குறிக்கும் விஷயங்களும், ஒவ்வொரு நாளும் ஒருவர் செய்யவேண்டிய ஆன்மீக சாதனையைக் குறித்தது. பூமி, சந்திரன், மற்றும் சூரியனின் அசைவு மற்றும் நிலையை கவனத்தில் கொண்டுதான் மக்களின் வாழ்க்கையே நிகழ்ந்தது. ஒரிசா, மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் சந்திரனின் சுழற்சியை கணக்கில் கொண்டு அதற்கேற்ப ஆன்மீக சாதனையும் நாள்காட்டியும் அமைந்தது. தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பிஹார், ஆகிய பகுதிகளில் சூரியனின் சுழற்சியை சார்ந்து மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்ததால் அவர்களுக்கு வேறு நாள்காட்டியும் புத்தாண்டும் அமைந்தது. ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் சூரியன் - சந்திரன், இரண்டின் சுழற்சியையும் கவனத்தில் கொண்டதால், உகாதி தினம் அவர்களுடைய புத்தாண்டாய் அமைந்தது." என்று பதிலளித்தார்.

பிறகு, "ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொண்டு இருப்போரை இதற்குமேல் நான் காத்திருக்க வைக்க விரும்பவில்லை." என்று கூறி, மையத்தில் புதிதாக திருமணமான ஒரு இளம் தம்பதியினரை வாழ்த்திவிட்டு விடைபெற்றுச் சென்றார்.