Video

கலை நிகழ்ச்சிகளில் இடையிடையே பாராட்டி கைதட்டுவது அவசியமா?, kalai nigazhchigalil idaiyidaiye paratti kaithattuvathu avasiyama?

கலை நிகழ்ச்சிகளில் இடையிடையே பாராட்டி கைதட்டுவது அவசியமா?

கைதட்டி பாராட்டுவது என்பது இரசிகர்கள் இரசனையின் வெளிப்பாடாக செய்யக்கூடியதாக இருந்தாலும், கைதட்டல்களுக்காக ஏங்கும் நிலையில் ஒரு கலைஞர் இருப்பது சரிதானா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது! நாட்டிய கலைஞர் திருமதி.அனிதா ரத்னம் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், கலையை தொழிலாக கொண்டவர்களுக்கு இருக்கும் பெரும் சாத்தியம் என்ன என்பதை உணர்த்துகிறார் சத்குரு!

வெற்றி பெற்றாலும் சலிப்பு வருவது ஏன்?, vetri petralum salippu varuvathu yen?

வெற்றி பெற்றாலும் சலிப்பு வருவது ஏன்?

தான் வெற்றிகரமான வாழ்க்கை சூழலில் இருப்பதாக கூறும் நகைச்சுவை கலைஞர் திரு.கிரேஸி மோகன் அவர்கள், இருந்தபோதிலும் தன்னிடம் ஒரு சலிப்பு இருப்பதை கூறி இதற்கான பதிலை சத்குருவிடம் கேட்கிறார். நினைத்ததெல்லாம் நடந்தபிறகும் பாதிப்பை அனுபவிக்கும் மனநிலை கொண்ட சமூகங்கள் குறித்து எடுத்துக்கூறி அதற்கான தீர்வையும் தனது பதிலில் சத்குரு வழங்குகிறார்.

மைக்கேல் ஜாக்சனை பார்த்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது?, michael jacksonai parthu nam therinthukolla vendiyathu?

மைக்கேல் ஜாக்சனை பார்த்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது?

உலகப்புகழ் பெற்ற நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சன் குறித்து திருமதி. அனிதா ரத்னம் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சத்குரு, மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை ஏன் ஒரு சரியான முன்னுதாரணமாக இருக்க முடியாது என்பதை கூறுகிறார். பிரபலங்களின் வாழ்க்கையில் தியானத்தன்மை இருக்க வேண்டியதன் அவசியம் இதில் புரிகிறது.

இராமாயணம் & மஹாபாரதம்... உண்மையில் நிகழ்ந்ததா?, ramayanam, mahabharatham unmaiyil nigazhnthatha?

இராமாயணம் & மஹாபாரதம்… உண்மையில் நிகழ்ந்ததா?

பிரபல திரைப்பட இயக்குநர் திரு.ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடியபோது, இதிகாசங்கள் என சொல்லப்படும் இராமாயணம் மற்றும் மஹாபாரத கதைகள் உண்மையில் நிகழ்ந்ததா என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு சத்குரு பதிலளிக்கையில், மஹாபாரத கதையின் மகத்துவத்தை கூறி, கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதத்தையும் சுவைபட விளக்குகிறார்!

‘நான் யார்?’ என்ற கேள்வியை யார் கேட்டால் பதில் வரும்?, nan yar endra kelviyai yar kaettal pathil varum?

‘நான் யார்?’ என்ற கேள்வியை யார் கேட்டால் பதில் வரும்?

பிரபல நகைச்சுவை நாடக மற்றும் சினிமா கலைஞர் திரு.கிரேஸி மோகன் அவர்கள் ‘நான் யார்?’ என்ற கேள்வி எழுவது குறித்து சத்குருவிடம் விளக்கத்தை கேட்டபோது, அந்த கேள்வி எழுவதன் அடிப்படை என்ன என்பதையும், அது எப்போது ஆழமாகும் என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார். ‘நான் யார்?’ என்ற கேள்வியை எந்த நிலையிலிருந்து கேட்டால் பதில் வரும் என்பதையும் சத்குரு தெளிவுபடுத்துகிறார்.

guru-purnimavirku-sadhguruvin-azhaippu

குரு பௌர்ணமிக்கு சத்குருவின் அழைப்பு!

ஈஷா யோக மையத்தில் ஜூலை 9ஆம் தேதி மாலை சத்குருவின் முன்னிலையில் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது குரு பௌர்ணமி! இந்நாளின் சிறப்பு பற்றியும், குரு பௌர்ணமியைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தையும் சத்குரு நமக்கு எடுத்துரைத்து, விழாவைக் கொண்டாட அனைவரையும் அழைக்கிறார்! வீடியோவைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், அனைவரும் வாருங்கள் கொண்டாடலாம்!

குருபௌர்ணமி நாளில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்!, guru pournami nalil nam nandri solla vendiyavargal

குருபௌர்ணமி நாளில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள்!

கடந்த குருபௌர்ணமி தினத்தன்று நிகழ்ந்த சத்சங்கத்தில் குருபௌர்ணமி நாள் கொண்டாடப்படக் காரணமாய் இருந்த அந்த அற்புத நிகழ்வு குறித்து நகைச்சுவையுடன் விவரிக்கும் சத்குரு, ஆதியோகியோடு சப்தரிஷிகளுக்கும் நாம் நன்றி கூற வேண்டியதன் காரணத்தை நினைவூட்டுகிறார். விஜய் டிவி-‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக!

ஜோசியம், வாஸ்து... பார்க்கலாமா? வேண்டாமா?, josiyam vastu parkkalama vendama?

ஜோசியம், வாஸ்து… பார்க்கலாமா? வேண்டாமா?

இன்று ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் நிகழும் அவலங்களை நகைச்சுவையாக சுட்டிக்காட்டும் திரு.கிரேஸி மோகன் அவர்கள், இதுகுறித்து சத்குருவின் ஆலோசனையை அறிய விழைகிறார். கிரகங்களின் தாக்கத்தை தாண்டி ஒரு உயரிய தன்மையில் மனிதனால் இருக்க முடியும் என்ற உண்மையை சத்குரு தன் பதிலில் உணர்த்துகிறார் வீடியோவில்!